கட்க பிரசாத் சர்மா ஒளி
கே. பி. சர்மா ஒளி (KP Sharma Oli) என அழைக்கப்படும் கட்க பிரசாத் சர்மா ஒளி (Khadga Prasad Sharma Oli[a]; பிறப்பு: 22 பெப்ரவரி 1952)[3] நேபாளத்தின் அரசியல்வாதி ஆவார். இவர் 2024 சூலை 15 முதல் நேபாளப் பிரதமராகப் பதவியில் உள்ளார்.[4] இவர் முன்னதாக 2015 அக்டோபர் 11 முதல் 2016 ஆகத்து 3 வரையும்,[5][6][7] பின்னர் 2018 பெப்ரவரி 15 முதல் 2021 சூலை 13 வரையும் புதிய அரசியலமைப்பின் முதலாவது பிரதமராகப் பதவியில் இருந்தார்.[8][9][10] ஒளி நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் (ஒருங்கிணைந்த மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) தலைவர் ஆவார்.
கே. பி. சர்மா ஒளி KP Sharma Oli | |||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
38-ஆவது நேபாளப் பிரதமர் | |||||||||||||||||||||||||||
பதவியில் உள்ளார் | |||||||||||||||||||||||||||
பதவியில் 15 சூலை 2024 | |||||||||||||||||||||||||||
குடியரசுத் தலைவர் | ராம் சந்திர பௌதெல் | ||||||||||||||||||||||||||
முன்னையவர் | பிரசந்தா | ||||||||||||||||||||||||||
பதவியில் 15 பெப்ரவரி 2018 – 13 சூலை 2021 | |||||||||||||||||||||||||||
குடியரசுத் தலைவர் | வித்யா தேவி பண்டாரி | ||||||||||||||||||||||||||
முன்னையவர் | செர் பகதூர் தேவ்பா | ||||||||||||||||||||||||||
பின்னவர் | செர் பகதூர் தேவ்பா | ||||||||||||||||||||||||||
பதவியில் 12 அக்டோபர் 2015 – 24 ஆகத்து 2016 | |||||||||||||||||||||||||||
குடியரசுத் தலைவர் | ராம் பரன் யாதவ் வித்யா தேவி பண்டாரி | ||||||||||||||||||||||||||
முன்னையவர் | சுசில் கொய்ராலா | ||||||||||||||||||||||||||
பின்னவர் | பிரசந்தா | ||||||||||||||||||||||||||
எதிர்க்கட்சித் தலைவர் | |||||||||||||||||||||||||||
பதவியில் 27 பெப்ரவரி 2023 – 4 மார்ச் 2024 | |||||||||||||||||||||||||||
பிரதமர் | பிரசந்தா | ||||||||||||||||||||||||||
முன்னையவர் | செர் பகதூர் தேவ்பா | ||||||||||||||||||||||||||
பின்னவர் | செர் பகதூர் தேவ்பா | ||||||||||||||||||||||||||
பதவியில் 13 சூலை 2021 – 26 திசம்பர் 2022 | |||||||||||||||||||||||||||
பிரதமர் | செர் பகதூர் தேவ்பா | ||||||||||||||||||||||||||
முன்னையவர் | செர் பகதூர் தேவ்பா | ||||||||||||||||||||||||||
பின்னவர் | செர் பகதூர் தேவ்பா | ||||||||||||||||||||||||||
பதவியில் 4 ஆகத்து 2016 – 15 பெப்ரவரி 2018 | |||||||||||||||||||||||||||
பிரதமர் | பிரசந்தா செர் பகதூர் தேவ்பா | ||||||||||||||||||||||||||
முன்னையவர் | சுசில் கொய்ராலா | ||||||||||||||||||||||||||
பின்னவர் | செர் பகதூர் தேவ்பா | ||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||
தனிப்பட்ட விவரங்கள் | |||||||||||||||||||||||||||
பிறப்பு | கத்கா பிரசாத் சர்மா ஒளி 22 பெப்ரவரி 1952 ஈவா, நேபாளம் | ||||||||||||||||||||||||||
அரசியல் கட்சி | நேபாளப் பொதுவுடைமைக் கட்சி (ஒமாலெ) (2018 இற்கு முன்னர்; 2021–இன்று) | ||||||||||||||||||||||||||
பிற அரசியல் தொடர்புகள் | நேபாள பொதுவுடமைக் கட்சி (2018–2021) | ||||||||||||||||||||||||||
துணைவர் | இராதிகா சாக்யா | ||||||||||||||||||||||||||
கையெழுத்து | |||||||||||||||||||||||||||
இணையத்தளம் | kpsharmaoli | ||||||||||||||||||||||||||
நேபாளத்தின் மீதான இந்தியாவின் 2015 முற்றுகையை ஒளி எதிர்த்தார்.[11] நேபாளத்தின் பாரம்பரியமாக இந்தியாவுடனான வணிக உறவுகளுக்கு மாற்றாக கேபி சர்மா சீனாவுடனான உறவை வலுப்படுத்தினார், இந்தியாவுடன் சர்ச்சைக்குரிய பிரதேசங்களை உள்ளடக்கிய அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் நேபாள வரைபடத்தை மேம்படுத்தினார், இதற்காக அவர் தேசியவாதியாக நற்பெயரைப் பெற்றார்.[12][13] ஒளியின் பதவிக் காலத்தில் விமர்சகர்கள், ஊடகங்களுடனான விரோதம்,[14][15] அரச அதிகாரிகளின் ஊழலைத் தடுக்காதது,[16] பொருளாதார வளர்ச்சியை வழங்கத் தவறியது, வாக்குறுதிகளில் இருந்து விலகியது, 2017 தேர்தலில் வரலாறு-காணாத பெரும்பான்மை இருந்தபோதிலும், நிதியறிக்கைச் செலவுகள் போன்றவற்றினால் இவர் சர்ச்சைக்குரியவராக இருந்தார்.[17]
வாழ்க்கைக் குறிப்பு
மோகன் பிரசாத் ஒளி - மதுமாயா இணையருக்கு 22 பிப்ரவரி 1952ல், கிழக்கு நேபாளத்தின் நேபாள மாநில எண் 3ல் உள்ள தேஹ்ரதுமில் பிறந்தவர்.[18][19][20] துவக்கக் கல்வியை தேஹ்ரதுமிலும், மேனிலை பள்ளிக் கல்வியை ஜாபாவிலும் பயின்றார்.[21]
இளங்கலை முதலாண்டு தேர்வு முடித்தவுடன் சிறைக்கு சென்று திரும்பிய சர்மா ஒளிக்கு, ராதிகா சாக்கியா எனும் பொதுவுடமை சிந்தனை கொண்டவருடன் திருமணம் செய்து கொண்டார்.[22]
அரசியல் வாழ்க்கை
மார்க்சிஸ்ட் கிளர்ச்சிகள் 1966 - 1991
1960ன் துவக்கத்தில் அரசியல் கட்சிகள் அற்ற பஞ்சாயத்து முறையில் அரசு அமைப்புகள் இயங்கிக் கொண்டிருந்த காலத்தில், கே. பி. சர்மா ஒளி, 1970ல் நேபாள பொதுவுடமைக் கட்சியில் இணைந்தார். சர்மா ஒளி 1973 முதல் 1987 முடிய தொடர்ந்து 14 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையிலிருந்து வெளியே வந்த கே. பி. ஒளி, நேபாள பொதுவுடமைக் கட்சி (ஐக்கிய மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) கட்சியின் மத்திய குழு உறுப்பினாகவும், லும்பினி மண்டல பொறுப்பாளராகவும் 1990 முடிய பணியாற்றியனார்.
பல கட்சி ஜனநாயக அரசியல் 1991 - தற்போது வரை
1990 மக்கள் புரட்சி காரணமாக, நேபாளத்தில் முழுமையான முடியாட்சி முறை ஒழிக்கப்பட்டு, அரசியலமைப்பிற்குட்பட்ட முடியாட்சி முறைக்கு வித்திட்டது. மேலும் அரசியல் கட்சிகள் அற்ற நேபாள தேசியப் பஞ்சாயத்து ஆட்சி முறை ஒழிக்கப்பட்டது.[23]1922ல் நேபாள பொதுவுடமை (ஐக்கிய மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) கட்சியின் வெளியுறக் குழுவின் தலைவராக இருந்த கே. பி. சர்மா ஒளி, நேபாள ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பை நிறுவினார்.
1991ல் நாடாளுமன்றத்திற்கு, ஜாப்பா மாவட்டத் தொகுதி எண் 6லிருந்து கெ. பி. சர்மா ஒளி தேர்ந்தெடுக்கப்பட்டார். 1994 - 1995ல் நேபாள அரசின் உள்துறை அமைச்சராக பதவி வகித்தார்.இரண்டாம் முறையாக 1999ல் ஜாப்பா மாவட்டத் தொகுதி எண் 2லிருந்து மீண்டும் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2006ல் நேபாள இடைக்கால அரசில், கே. பி. சர்மா ஒளி, நேபாள துணை பிரதம அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[24][25] கே. பி. சர்மா ஒளி, ஏப்ரல் 2006 2007 முடிய வெளியுறவுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
2013ல் முதல் அரசியலமைப்பு நிர்ணய மன்றத் தேர்தலில் ஜாப்பா தொகுதி எண் 7லிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பின்னர் 4 பிப்ரவரி 2014ல் நடைபெற்ற இரண்டாவது அரசியலமைப்பு நிர்ணய மன்றத் தேர்தலிலும் வெற்றி பெற்ற கே. பி. சர்மா ஒளி, நேபாள பொதுவுடமை (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) கட்சியின் நாடாளுமன்றக் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[26] சூலை, 2014ல் கே. பி. சர்மா ஒளி, நேபாள பொதுவுடமை (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[27][28]
12 அக்டோபர் 2015ல் கே. பி. சர்மா ஒளி, நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) ஆதரவுடன், நேபாள பிரதம அமைச்சராக தேந்தெடுக்கப்பட்டார்.[29]
13 சூலை 2016ல் மாவோயிஸ்ட் கட்சி சர்மா ஒளி அரசுக்கான ஆதரவை விலக்கவே, 24 சூலை 2016ல் கே. பி. சர்மா ஒளி பிரதமர் பதவியிலிருந்து விலகினார்.
2017 நேபாள நாடாளுமன்றத் தேர்தலில் கே. பி. சர்மா ஒளி தலைமையிலான இடதுசாரி கூட்டணி பெரும்பான்மையான தொகுதிகளைக் கைப்பற்றியது.
2020-இல்நேபாள பிரதிநிதிகள் சபையை சர்மா தன்னிச்சையாக கலைத்தார்.[30] இதற்கு குடியரசுத் தலைவரும் ஒப்புதல் கொடுத்தார். ஆனால் சபை கலைப்பு வழக்கில், நேபாள உச்ச நீதிமன்றம், சர்மாவிற்கு சபையை கலைக்கும் அதிகாரம் இல்லை என 23 பிப்ரவரி 2021 அன்று தீர்ப்பு வழங்கியது. [31].8 மார்ச் 2021 அன்று மீண்டும் பிரதிநிதிகள் சபையை கூட்ட வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கியது.[32]இதனால் கலைக்கப்பட்ட பிரதிநிதிகள் சபை மீண்டும் உயிர் பெற்றது. எனவே சர்மா பிரதிநிதிகள் சபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டியதாயிற்று.
10 மே 2021 அன்று நேபாள பிரதிநிதிகள் சபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், கட்க பிரசாத் சர்மா ஒளிக்கு ஆதரவாக 93 பிரதிநிதிகளும், எதிராக 124 பிரதிநிதிகளும் வாக்களித்தனர். எனவே நேபாள பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களின் பெரும்பான்மையினர் நம்பிக்கை இழந்த சர்மா ஒளி பிரதமர் பதவிலியிலிருந்து விலகினார்.[33][34] பின்னர் குடியரசுத் தலைவர் அனுமதியின் பேரில் இவர் தற்காலிக பிரதம அமைச்சராக பதவியேற்றார். நேபாள உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புப்படி இவர் 17 சூலை 2021 அன்று பதவியை துறந்தார்.[35]இவருக்குப் பதிலாக செர் பகதூர் தேவ்பா 18 சூலை 2021 அன்று பிரதமராக பதவியேற்றார்.