சாரீரப்பதன்
சாரீரப்பதன்(relative humidity) எனப்படுவது வளிமண்டலத்தில் காணப்படும் நீராவியின் அளவிற்கும் நிரம்பிய நிலை நீராவியளவிற்கும் இடையயிலான விகிதமாகும்.
வரைவிலக்கணம்
நீர்- வளி கொண்டகலவை ஒன்றின் சாரீரப்பதன் எனப்படுவது, குறித்த வெப்பநிலையில் அக்கலவையிலுள்ள நீராவியின் பகுதி அமுக்கத்திற்கும் நீராவியின் நிரம்பல் ஆவியமுக்கத்திற்கும் இடையிலான விகிதம் ஆகும்.
பின்வரும் சமன்பாட்டின் மூலம் சாரீரப்பதன் கணிக்கப்படும் . இது சதவீதத்தில் பொதுவாகத் தரப்படும்.[1]:
கணிப்பீடு
வளி நீர்க் கலவையொன்றின் ஈரக்குமிழ் வெப்பநிலை மற்றும் உலர் குமிழ் வெப்பநிலை என்பன தெரியுமாயின் சைக்குறேமற்றிக்(psychrometric) அட்டவணை மூலம் சாரீரப்பதனை நேரடியாகக் காணலாம்.
சாரீரப்பதனின் முக்கியத்துவம்
- காலநிலையைக் கட்டுப்படுத்துவதில் வெப்பநிலையையும் சாரீரப்பதனையும் கட்டுபப்டுத்துவதன் மூலம் கட்டிடங்கள், வாகனங்கள் போன்றவற்றில் தகுந்த சூழல் ஏற்படுத்தப்படுவதுடன் இயந்திரங்களிலும் செயற்பாடுகளிலும் தொழில்நுட்பத்திறன் பேணப்படுகிறது.
சுவாத்தியமான சூழல்
மனித உடல் தோலில் வியர்வை ஆவியாவதன் மூலம் குளிரூட்டப்படும் செயல்முறை கொண்டது. இதனால் ஈரமான வளிக்கு உணர்திறன் கொண்டது. ஈரமான் சூழலிலும் பார்க்க உலர் சூழலில் அதிக ஆவியாதல் முறையைக் காட்டும்.இதனால் சாரீரப்பதன் உயர்வாயுள்ள போது அதிக உஸ்னம் உணரப்படும்.[2].
எ.கா:வளிமண்டல வெப்பநிலை 24 °C (75 °F) இருக்கும் போது சாரீரப்பதன் பூச்சியமாக இருக்குமாயின் இவ் வெப்பநிலை 21 °C (69 °F) ஆக உணரப்படும்.[3]. இதே வெப்பநிலை சாரீரப்பதன் 100% ஆக இருக்கும் போது 27 °C (80 °F)ஆக உணரப்படும்.[3]
- வாகனங்களிலும் கட்டடங்களிலும் இதே நுட்பத்தைப் பயன்படுத்தியே வளிபதனப்படுத்துதல் செய்யப்படுகிது. இதே போல் சில செயற்பாடுகளுக்கு தேவைப்படுகின்ற விசேட இயக்க சூழல் சாரீரப்பதனைக் கட்டுப்படுத்துவதனாலேயே சாத்தியமாக்கப்படுகிறது.