லாவோஸ்

தென்கிழக்காசியாவிலுள்ள ஒரு நாடு

இலாவோசு என்று அழைக்கப்படும் இலாவோசு மக்கள் குடியரசு (ஆங்கிலம்: Lao People's Democratic Republic; இலாவோசு மொழி; ສາທາລະນະລັດ ປະຊາທິປະໄຕ ປະຊາຊົນລາວ; Sathalanalat Paxathipatai Paxaxôn Lao); தென்கிழக்கு ஆசியாவில் உள்ள ஒரு நாடு ஆகும்.

இலாவோசு மக்கள் குடியரசு
கொடி of இலாவோசு
கொடி
சின்னம் of இலாவோசு
சின்னம்
குறிக்கோள்: ສັນຕິພາບ ເອກະລາດ ປະຊາທິປະໄຕ ເອກະພາບ ວັດທະນາຖາວອນ
"அமைதி, சுதந்திரம், மக்களாட்சி, ஒன்றியம், செல்வம்"
நாட்டுப்பண்: பெங் சட் லாவ்
இலாவோசுஅமைவிடம்
தலைநகரம்வியஞ்சான்
பெரிய நகர்தலைநகரம்
ஆட்சி மொழி(கள்)இலாவோ, பிரெஞ்சு
பேசும் மொழிகள்இலாவோ மொழி
அமாங் மொழி
குமு மொழி
பிரெஞ்சு மொழி
கத்து மொழி[1]
இனக் குழுகள்
  • 53.2% இலாவோ மக்கள்
  • 11% குமு மக்கள்
  • 9.2% உமாங்கு
  • 3.4% பூ தாய்
  • 3.1% தாய்
  • 2.5% மாக்கோங்
  • 2.2% காத்தாங்
  • 2.0% லு மக்கள்
  • 1.8% அக்கா மக்கள்
  • 11.6% இதர மக்கள் (100 சிறிய இனக்குழுக்கள்)
[2]
மக்கள்இலாவ்
அரசாங்கம்சமத்துவக் குடியரசு
• குடியரசுத் தலைவர்
தாங்லவுன் சிசோலித்
• பிரதமர்
பன்கம் விபவன்
• குடியரசுத் துணைத் தலைவர்கள்
பௌன்தோங் சிட்மனி
பனி யாதோடோ
• இலாவோசு தேசிய சட்டமன்றத்தின் தலைவர்
சேசம்போன் போம்விகானே
விடுதலை 
பிரான்சு இடம் இருந்து
• நாள்
சூலை 19 1949
பரப்பு
• மொத்தம்
236,800 km2 (91,400 sq mi) (83ஆவது)
• நீர் (%)
2
மக்கள் தொகை
• 2019 மதிப்பிடு
6,492,228 (105-ஆவது)
• 1995 கணக்கெடுப்பு
4,574,848
• அடர்த்தி
25/km2 (64.7/sq mi) (177ஆவது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2006 மதிப்பீடு
• மொத்தம்
$13.75 பில்லியன் (129ஆவது)
• தலைவிகிதம்
$2,200 (138ஆவது)
ஜினி (2012)36.4
மத்திமம்
மமேசு (2004)0.613
மத்திமம் · 133ஆவது
நாணயம்கிப் (LAK)
நேர வலயம்ஒ.அ.நே+7
அழைப்புக்குறி856
இணையக் குறி.la
வியஞ்சான் தலைநகரில் உள்ள பா தாட் லுவாங்; லாவோஸ் நாட்டின் தேசிய சின்னமாகும்.

இந்த நாட்டின் வடமேற்கில் சீனா, மியன்மார்; கிழக்கில் வியட்நாம்; தெற்கில் கம்போடியா; மேற்கில் தாய்லாந்து ஆகிய நாடுகள் அமைந்து உள்ளன.

தற்கால இலாவோசு, பழைய இலாவோசிய அரசான லான் சாங் எனும் அரசின் கலாச்சாரத்தை அடையாளப் படுத்துகிறது. அந்த லான் சாங் அரசு (Lan Xang) 14-ஆம் நூற்றாண்டு முதல் 18-ஆம் நூற்றாண்டு வரை தென்கிழக்கு ஆசியாவின் மிகப் பெரிய அரசுகளில் ஒன்றாக விளங்கியது.[3]

பொது

தற்கால லாவோஸ், பழைய லாவோசிய அரசான லான் சாங் எனும் அரசின் கலாச்சாரத்தை அடையாளப் படுத்துகிறது. அந்த லான் சாங் அரசு (Lan Xang) 14-ஆம் நூற்றாண்டு முதல் 18-ஆம் நூற்றாண்டு வரை தென்கிழக்கு ஆசியாவின் மிகப் பெரிய அரசுகளில் ஒன்றாக விளங்கியது.

லாவோஸ் நாடு தென்கிழக்கு ஆசியாவின் ஒரு மையப் பகுதியில் அமைந்து உள்ளது. அதன் காரணமாக, இந்த அரசு ஒரு வர்த்தக மையமாக மாறியது. அதே வேளையில் பொருளாதார ரீதியாகவும் கலாசார ரீதியாகவும் செல்வம் செழிக்கும் நாடாகவும் மாறியது.[3]

பிரெஞ்சு காலனித்துவம்

18-ஆம் நூற்றாண்டில், லான் சாங் அரசில் உள்நாட்டுப் பிரச்சினைகள். அதைத் தொடர்ந்து, லான் சாங் அரசு மூன்று தனித்தனி அரசுகளாக உடைந்தது. இலுவாங் பிராபாங் அரசு (Kingdom of Luang Phrabang); வியஞ்சான் அரசு (Kingdom of Vientiane); சம்பாசக் அரசு (Kingdom of Champasak) என மூன்று அரசுகள்.

1893-ஆம் ஆண்டில், அந்த மூன்று அரசுகளும் பிரெஞ்சு காலனித்துவப் பேரரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்தன. அந்த மூன்று அரசுகளில் கூட்டமைப்பு தான் இப்போதைய லாவோஸ் நாடு ஆகும்.

அரசியலமைப்பு முடியாட்சி

1945-ஆம் ஆண்டில், தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மீது ஜப்பானியர் ஆக்கிரமிப்பு. நான்கு ஆண்டுக்காலம் சுதந்திரம் பெற்ற நிலை. 1949-ஆம் ஆண்டில் மீண்டும் பிரெஞ்சு காலனித்துவ ஆட்சி.

1953-ஆம் ஆண்டில் லாவோஸ் சுதந்திரம் அடைந்தது. சிசவாங் வோங் (Sisavang Vong) என்பவரின் கீழ் அந்த நாட்டில் அரசியலமைப்பு முடியாட்சி உருவானது.

சுதந்திரத்திற்குப் பின்னர் லாவோசில் ஓர் உள்நாட்டுப் போர் தொடங்கியது. லாவோ மக்கள் புரட்சிக் கட்சியின் (Lao People's Revolutionary Party) கம்யூனிசத்தைப் பின்னணியாகக் கொண்ட உள்நாட்டுப் போர். அந்த உள்நாட்டுப் போருக்கு சோவியத் ஒன்றியம் ஆதரவு அளித்தது.[4]

இராணுவ ஆட்சிகள்

பின்னர் அமெரிக்காவால் ஆதரிக்கப்பட்ட இராணுவ ஆட்சிகள் மாறி மாறி வந்தன. 1975-ஆம் ஆண்டில் வியட்நாம் போர் முடிவு அடைந்ததும், கம்யூனிஸ்டு பத்தேட் லாவோ (Pathet Lao) ஆட்சிக்கு வந்தது. அத்துடன் லாவோசின் உள்நாட்டுப் போரும் ஒரு முடிவுக்கு வந்தது.

அந்தக் கட்டத்தில் லாவோஸ், சோவியத் ஒன்றியத்தின் இராணுவ மற்றும் பொருளாதார உதவிகளை நம்பி இருந்தது. 1991-ஆம் ஆண்டில் சோவியத் ஒன்றியம் கலைக்கப் பட்டதும் லாவோஸ் நாட்டிற்குக் கிடைத்து வந்த சோவியத் யூனியனின் உதவிகளும் நின்று விட்டன.

லாவோஸ் ஆசிய-பசிபிக் வர்த்தக ஒப்பந்தம் (Asia-Pacific Trade Agreement);[5] ஆசியான்; கிழக்கு ஆசிய கூட்டமைப்பு; மற்றும் பிரான்கோபோனி ஆகிய அமைப்புகளில் உறுப்பினராக உள்ளது.

மனித உரிமை மீறல்கள்

லாவோஸ் நாடு ஒரே கட்சியைக் கொண்ட ஒரு சோசலிசக் குடியரசு ஆகும். லாவோ மக்கள் புரட்சிக் கட்சியால் ஆளப் படுகிறது. மார்க்சியம் - லெனினிசம் கோட்பாடுகளை ஆதரிக்கின்றது.

லாவோஸ் நாட்டில் மனித உரிமைகள் மீறப் படுவதை அரச சார்பற்ற நிறுவனங்கள் அடிக்கடி சுட்டிக் காட்டுகின்றன. சித்திரவதை; மனித உரிமை மீறல்கள்; மனித உரிமை கட்டுப்பாடுகள்; சிறுபான்மையினரைத் துன்புறுத்துதல் போன்ற தொடர்ச்சியான துஷ்பிரயோகங்களை மேற்கோள் காட்டுகின்றன.[6][7]

அரசியல் மற்றும் கலாசார ரீதியாக ஆதிக்கம் செலுத்தும் லாவோ மக்கள், நாட்டின் மக்கள் தொகையில் 53.2% விழுக்காட்டினர். பெரும்பாலும் தாழ்நிலங்களில் வாழ்கின்றனர்.

லாவோஸ் நாட்டின் வளர்ச்சிக்கான உத்திகள்

மோன் - கெமர் இனக் குழுக்கள், உமாங்கு மக்கள் மற்றும் பிற பழங்குடி மலைப் பழங்குடியினர் மலை அடிவாரங்களிலும் வாழ்கின்றனர்.

லாவோஸ் நாட்டின் வளர்ச்சிக்கான உத்திகள், ஆறுகளில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்வது; தாய்லாந்து, சீனா, வியட்நாம் போன்ற அண்டை நாடுகளுக்கு விற்பது; இவற்றை அடிப்படையாகக் கொண்டவை ஆகும்.[8]

தென்கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் லாவோஸ் நாடும் ஒன்றாக உலக வங்கியால் குறிப்பிடப் படுகிறது, 2009-ஆம் ஆண்டு முதல், லாவோஸ் நாட்டின் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சராசரி வளர்ச்சி 7.4% ஆகும்.[9][10]

சொற்பிறப்பியல்

லாவோஸ் என்ற சொல் பிரெஞ்சுக்காரர்களால் உருவாக்கப்பட்டது. 1893-ஆம் ஆண்டில் பிரெஞ்சுக்காரர்கள், இந்தோசீனாவில் இருந்த மூன்று லாவோ அரசுகளையும் ஒன்றிணைத்து ஆதிக்கம் செலுத்தினர்.

லாவோ அரசு என்பது ஒருமை. லாவோ அரசுகள் என்பது பன்மை. மூன்று அரசுகளையும் ஒன்று இணைத்ததால் லாவோஸ் என்று பன்மையில் பெயரிடப்பட்டது. ஆங்கிலத்தில் 'எஸ்' எனும் எழுத்து சேர்க்கப் பட்டது.[11][12][13][14][15]

லாவோ மொழியில், லாவோஸ் நாட்டின் பெயர் முவாங் லாவோ (ເມືອງລາວ) அல்லது பத்தே லாவோ (ປະເທດລາວ). இவை இரண்டும் 'லாவோ நாடு' என்று பொருள்படுகின்றன.[16]

வரலாறு

தொடக்கக் கால வரலாறு

வடக்கு லாவோஸில் உள்ள அன்னமைட் மலைகளில் உள்ள டாம் பா லிங் குகையில் இருந்து 2009-ஆம் ஆண்டில் ஒரு பழங்கால மனித மண்டை ஓடு மீட்கப்பட்டது. அந்த மண்டை ஓடு, குறைந்தது 46,000 ஆண்டுகள் பழமையானது, இது தென்கிழக்கு ஆசியாவில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பழமையான நவீன மனிதப் புதைபடிவமாகும்.[17]

வடக்கு லாவோசில் உள்ள இடங்களில் ஹோபின்ஹியன் (Hoabinhian) வகையிலான கல் கலைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.[18] தொல்பொருள் சான்றுகள் மூலமாக, கி.மு. 4-ஆம் ஆயிரமாண்டுக் காலத்தில் அங்கு ஒரு விவசாய சமூகம் வாழ்ந்து இருக்கலாம் என்பது தெரிய வருகிறது.[19]

புதையுண்டு கிடந்த ஜாடிகள் மற்றும் பிற வகையான கல் பொருட்கள் மூலமாக, அங்கு ஒரு கட்டுக் கோப்பான சமுதாயம் வாழ்ந்து இருக்கலாம் என்பதும் தெரிய வருகிறது. கி.மு. 1500-இல் வடிவமைக்கப்பட்ட வெண்கல பொருட்கள்; கி.மு. 700-இல் வடிவமைக்கப்பட்ட இரும்பு கருவிகள் போன்றவை சான்று பகிர்கின்றன.

லாவோசின் பூர்வ வரலாற்றுக் காலம், சீன மற்றும் இந்திய நாகரிகங்களுடன் தொடர்பு கொண்டவையாக உள்ளன.[20]

மேற்கோள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=லாவோஸ்&oldid=3573909" இருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தமிழ்படிமம்:XVideos logo.svgசுப்பிரமணிய பாரதிமுதற் பக்கம்சிறப்பு:Searchதிருக்குறள்கார்லசு புச்திமோன்வைக்கம் போராட்டம்தமிழிசை சௌந்தரராஜன்கொடி நாள் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)அம்பேத்கர்தினகரன் (இந்தியா)ஈ. வெ. இராமசாமிஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பதினெண் கீழ்க்கணக்குபாரதிதாசன்முருகன்ஐயப்பன்திருவண்ணாமலைஅனுமுலா ரேவந்த் ரெட்டிஜெ. ஜெயலலிதாதிருவள்ளுவர்சிலப்பதிகாரம்விஜய் (நடிகர்)அமலோற்பவ அன்னைதொல்காப்பியம்புதுச்சேரிபத்துப்பாட்டுதஞ்சைப் பெருவுடையார் கோயில்விசயகாந்துசபரிமலை2015 சென்னை பேரழிவுதிசம்பர் 8அறுபடைவீடுகள்காமராசர்தமிழ்நாடுஐம்பெருங் காப்பியங்கள்