R

R (ஆர்) என்பது புதிய ஆங்கில நெடுங்கணக்கிலும் சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவன அடிப்படை இலத்தீன் நெடுங்கணக்கிலும் 18ஆவது எழுத்து ஆகும்.[1]

Rஇன் வளைந்த வடிவங்களை எழுதும் முறை

பெயர்

எவ்வு (F), எல் (L), எம் (M), என் (N) போன்ற எழுத்துகளின் பெயரை ஒத்ததாக, இலத்தீனில் rஇன் பெயர் ஏர் (er) ஆகும்.[2] நடு ஆங்கிலத்தில் இதன் பெயர் ஆராக (ar) மாறியது.

பயன்பாடு

ஆங்கிலத்தில் கூடுதலாகப் பயன்படுத்தப்படும் எட்டாவது எழுத்து r ஆகும்; கூடுதலாகப் பயன்படுத்தப்படும் நான்காவது மெய்யொலியும் (t, n, s ஆகியவற்றுக்கு அடுத்து) r ஆகும்.[3]

கணிதத்திலும் அறிவியலிலும்

இயற்கணிதத்தில், மெய்யெண்களின் தொடை ℝஆல் குறிக்கப்படும்.[4] வடிவவியலில், ஆரையைக் குறிப்பதற்கும் radius என்பதன் முதலெழுத்தான r பயன்படுத்தப்படுகின்றது.

வேதியியலில், வளிம மாறிலியானது Rஆல் குறிக்கப்படும்.[5]

இயற்பியலில், தடைக்கான குறியீடாக R பயன்படுத்தப்படுகின்றது.[6]

ஒருங்குறியில்

ஒருங்குறியில் rஐ ஒத்த பின்வரும் வரியுருக்கள் காணப்படுகின்றன.

  • 𝐑𝐫 𝑅𝑟 𝑹𝒓 𝖱𝗋 𝗥𝗿 𝘙𝘳 𝙍𝙧 ℛ𝓇 𝓡𝓻 ℜ𝔯 𝕽𝖗 𝚁𝚛 ℝ𝕣 கணிதக் குறியீடுகளாகப் பயன்படும் ஒருங்குறி வரியுருக்கள்
  • ʀ சிறிய பேரெழுத்து R, சிறுநாக்கொலி உருட்டொலிக்கான (Uvular trill) பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடிக் குறியீடு
  • Ꝛ ꝛ சுற்றிய r (r rotunda)
  • Ꞃ ꞃ கேலிய R
  • Ʀ இலத்தீன் எழுத்து YR (U+01A6), விரிவாக்கப்பட்ட இலத்தீன் பீயில் ʀஇன் பேரெழுத்தாக அறிமுகப்படுத்தப்பட்டது.
  • ɹ பன்முகட்டுப் உயிர்ப்போலிக்கான (alveolar approximant) பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடிக் குறியீடு
  • ɾ பன்முகட்டு வருடொலிக்கான (alveolar flap) பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடிக் குறியீடு
  • ɻ மேலண்ண உயிர்ப்போலிக்கான (retroflex approximant) பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடிக் குறியீடு
  • ɽ மேலண்ண வருடொலிக்கான (retroflex flap) பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடிக் குறியீடு
  • ʁ ஒலிப்புடை பன்முகட்டு உரசொலிக்கான (voiced uvular fricative) பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடிக் குறியீடு
  • ˞ R-நிற உயிரொலியைக் குறிக்கும் பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடிக் கொக்கி ஒலித்திரிபுக் குறி
  • ® பதிவுசெய்யப்பட்ட வணிகக்குறிக்கான குறியீடு
  • ℟ கிறித்தவ வழிபாட்டு முறையில் பதிலுரைக்கான குறியீடு
  • உரூபிள் நாணயக் குறியீடு

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

  • பொதுவகத்தில் R பற்றிய ஊடகங்கள்
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=R&oldid=3578409" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: வாழை (திரைப்படம்)ரத்தன் டாட்டாமுதற் பக்கம்பார்சி மக்கள்சிறப்பு:Searchகுறை ஒன்றும் இல்லை (பாடல்)விஜயதசமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்வேட்டையன்தஞ்சைப் பெருவுடையார் கோயில்ஆயுத பூஜைசிலப்பதிகாரம்சுப்பிரமணிய பாரதிடாட்டா குடும்பம்காமராசர்திருக்குறள்ஐம்பெருங் காப்பியங்கள்வித்தியாரம்பம்பாரதிதாசன்தஞ்சாவூர்சிறப்பு:RecentChangesபெண் தமிழ்ப் பெயர்கள்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)அறுபடைவீடுகள்மாரி செல்வராஜ்தமிழ்தொல்காப்பியம்கருணாநிதி குடும்பம்விநாயகர் அகவல்மஞ்சும்மல் பாய்ஸ்முத்தாரம்மன் கோவில், குலசேகரன்பட்டினம்எட்டுத்தொகைமுரசொலி மாறன்நோயல் டாட்டாமணிமேகலை (காப்பியம்)திராவிட மொழிக் குடும்பம்பதினெண் கீழ்க்கணக்குமு. கருணாநிதி108 வைணவத் திருத்தலங்கள்