கார்லசு புச்திமோன்

இசுப்பைனின் காத்தலோனியா தன்னாட்சிப் பகுதியின் தலைவர்

கார்லசு புச்திமோன் (Carles Puigdemont i Casamajó; பிறப்பு: 29 திசம்பர் 1962) எசுப்பானியாவின் காத்தலோனியா தன்னாட்சிப் பகுதியின் தலைவர் ஆவார்.[3] 2017-ஆம் ஆண்டில் காத்தலோனியா தன்னாட்சிப் பிரதேசத்திற்கு நடைபெற்ற தேர்தலில் கார்லசு புச்திமோனின் அரசியல் கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.[4] இவர் காத்தலோனியா தன்னாட்சிப் பிரதேசத்தை தனி நாடாகக் கோரும் போராட்ட இயக்கத்தின் தலைவரும் ஆவார்.

கார்லசு புச்திமோன்
Carles Puigdemont
2016-இல் புச்திமோன்
காத்தலோனியாவின் 130-வது அரசுத்தலைவர்[1]
பதவியில்
12 சனவரி 2016 – 27 அக்டோபர் 2017
ஆட்சியாளர்ஆறாம் பிலிப்பு
முன்னையவர்ஆர்தர் மாசு
பின்னவர்நேரடி ஆட்சி
எசுப்பானியாவுக்கான ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2 சூலை 2019[n. 1]
குடியரசுப் பேரவையின் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
8 திசம்பர் 2018
முன்னையவர்புதிய பதவி
காத்தலோனியா நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
17 சனவரி 2018 – 30 சூலை 2018
தொகுதிபார்செலோனா
பதவியில்
10 நவம்பர் 2006 – 27 அக்டோபர் 2017
தொகுதிகிரோனா
கிரோனா நகர முதல்வர்
பதவியில்
1 சூலை 2011 – 11 சனவரி 2016
கிரோனா மாநகர சபை உறுப்பினர்
பதவியில்
11 சூன் 2007 – 11 சனவரி 2016
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
கார்லசு புச்திமோன் இ கசமாயோ

29 திசம்பர் 1962 (1962-12-29) (அகவை 61)
ஆமெர், காத்தலோனியா, எசுப்பானியா
குடியுரிமைஎசுப்பானியர்
அரசியல் கட்சிகாத்தலோனியாவுக்கான கூட்டு (2020–present)
பிற அரசியல்
தொடர்புகள்
  • குடியரசுக்கான தேசிய அறைகூவல் (2019–20)
  • காத்தலான் ஐரோப்பிய சனநாயகக் கட்சி (2016–20)
  • காத்தலோனியாவின் சனநாயக ஒருங்கிணைப்பு (1980–2016)
துணைவர்மார்செலா தப்போர் (தி. 2000)
பிள்ளைகள்2
வாழிடம்(s)வாட்டர்லூ, பெல்ஜியம்
வேலைஊடகவியலாளர், அரசியல்வாதி
கையெழுத்து
இணையத்தளம்Carles Puigdemont

ஆட்சிக் கவிழ்ப்பு

கார்லசு புச்திமோன் 2017 அக்டோபர் 27 அன்று எசுப்பானியாவில் இருந்து காத்தலோனியா தன்னிச்சையாக விடுதலையை அறிவித்ததைத் தொடர்ந்து கார்லசு காத்தலோனியாவின் அரசுத்தலைவராக இருக்கும் நிலை சர்ச்சைக்குரியதாயிற்று. எசுப்பானியப் பிரதமர் மரியானோ ரஜோயா, 2017 அக்டோபர் 28 அன்று புச்திமோனை காத்த்லோனிய அரசுத்தலைவர் பதவியிலிருந்து பதவி நீக்கம் செய்தார்.[5] ஆனால் புச்திமோன் தனது பதவி நீக்கத்தை அங்கீகரிக்கவில்லை. தான் ஒரு விடுதலை பெற்ற காத்தலோனியாவை உருவாக்கப் போராடுவேன் என்று கூறினார்.[6]

2017 அக்டோபர் 30 அன்று, எசுப்பானிய நீதித்துறையின் நடவடிக்கையைத் தவிர்ப்பதற்காக புச்திமோன் பெல்சியத்திற்குத் தப்பிச் சென்றார்.[7] ஒரு மாதம் கழித்து, அவர் மீண்டுமதெசுப்பானிய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[8]

கைது நடவடிக்கைகள்

நவம்பர் 2 அன்றுதெசுப்பானிய நீதிமன்றம் விடுத்த கைது ஆணையை, புச்திமோனுக்கும், நான்கு அமைச்சரவை உறுப்பினர்களுக்கும் எதிராக ஐரோப்பிய ஒன்றியம் மூலம் பெல்சிய அதிகாரிகளுக்கு வழங்கியது.[9] இரண்டு நாட்களுக்குப் பிறகு, அவர்கள் பெல்சியக் காவல்துறையிடம் சரண் அடைந்தனர்.[10] சில மணி நேரம் கழித்து புச்திமோன் விடுவிக்கப்பட்டார்.[11] [12]

2018 மார்ச் 25 அன்று, பின்லாந்துக்கு ஒரு பயணத்திலிருந்து பிரசல்சிற்குத் திரும்புகையில், செருமனியுடனான தென்மார்க்கு எல்லைக்கு அருகில் புச்திமோன் நிறுத்தப்பட்டு, அவருக்கு எதிராக இரண்டு நாட்களுக்கு முன்னதாகப் பிறப்பிக்கப்பட்ட ஐரோப்பிய கைதாணையின்படி கைது செய்யப்பட்டார்.[13][14][15] 2018 ஏப்ரல் 5 அன்று, செருமனியின் ஸ்கெல்ஸ்விக்-ஹோல்ஸ்டைன் மாநிலத்தில் உள்ள ஒபெர்லேண்டெஸ்கெரிச், கிளர்ச்சிக் குற்றச்சாட்டில் புச்திமோன் ஒப்படைக்கப்படமாட்டார் என்று தீர்ப்பளிக்கப்பட்டதுடன், அவரைப் பிணையில் விடுவித்தனர்.[16]

சேதத் துரோக வழக்கில்பெசுப்பானிய உச்ச நீதிமன்றத்தின் கைது ஆணையின் படி, 2023 செப்டம்பர் 23 அன்று இத்தாலி, சார்டினியா தீவில் தங்கியிருந்த கார்லசு புச்திமோன் இத்தாலிய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.[17][18]

மேற்கோள்களும் குறிப்புகளும்

தகவல் குறிப்புகள்
மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கார்லசு_புச்திமோன்&oldid=3860270" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை