சங்க இலக்கியம்

ஐம்பெரும் காப்பியங்கள்
சங்க இலக்கியம் ஓர் எடுத்துக்காட்டு

யாதும் ஊரே, யாவரும் கேளிர்;
தீதும், நன்றும், பிறர் தர வாரா;
நோதலும், தணிதலும், அவற்றோர் அன்ன;
சாதலும் புதுவது அன்றே! வாழ்தல்
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே! முனிவின்
இன்னாது என்றலும் இலமே! மின்னொடு
வானம் தண் துளி தலைஇ ஆனாது,
கல்பொருது இரங்கும், மல்லல் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புனை போல், ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியில்
பெரியோரை வியத்தலும் இலமே!
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே!

-கணியன் பூங்குன்றனார்
(புறநானூறு - 192)

சங்க இலக்கியம் (Sangam literature) எனப்படுவது தமிழில் பொ.ஊ.மு. 500-இல் இருந்து பொ.ஊ. 200 வரை உள்ள[1] காலப்பகுதியில் எழுதப்பட்ட செவ்வியல் இலக்கியங்கள் ஆகும். சங்க இலக்கியம் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட வரை 473 புலவர்களால் எழுதப்பட்ட 2381 பாடல்களைக் கொண்டுள்ளது. இப்புலவர்களுள் பலதரப்பட்ட தொழில் நிலையில் உள்ளோரும் பெண்களும், நாடாளும் மன்னரும் உண்டு. சங்க இலக்கியங்கள் அக்காலகட்டத்தில் வாழ்ந்த தமிழர்களின் அன்றாட வாழ்க்கை நிலைகளைப் படம்பிடித்துக் காட்டுவதாய் உள்ளன.சங்ககால மக்களின் வாழ்க்கை நிலை இரண்டு பிரிவுகளாக சங்க இலக்கியங்கள் வழி அறியலாம். இல்லற வாழ்க்கை பற்றிய செய்திகளை அகம் என்றும், கொடை, போர், வீரம், ஆட்சி, முதலியவற்றை பற்றிய செய்திகளை புறம் என்றும் சங்க இலக்கியங்கள் பிரித்துக் காட்டுகின்றன.

19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ் அறிஞர்களான சி. வை. தாமோதரம்பிள்ளை, உ. வே. சாமிநாத ஐயர் ஆகியோரின் முயற்சியினால் சங்க இலக்கியங்கள் அச்சுருப் பெற்றன. எட்டுத்தொகையும், பத்துப்பாட்டும் தான் சங்க இலக்கிய நூல்கள். இவை பதினெண்மேற்கணக்கு நூல்கள் எனவும்; சங்கமருவிய நூல்கள் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் எனவும் பெரும்பிரிவுகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

எட்டுத்தொகை நூல்கள் (பதினெண் மேற்கணக்கு)

நூல்காலம்இயற்றியவர்
எட்டுத்தொகை நூல்கள்
நற்றிணை
குறுந்தொகை
ஐங்குறுநூறுகபிலர்
பதிற்றுப்பத்து
பரிபாடல்
கலித்தொகைநல்லந்துவனார் முதலிய பலர்
அகநானூறு பலர்
புறநானூறுபலர்

பத்துப்பாட்டு நூல்கள் (பதினெண் மேற்கணக்கு)

பத்துப்பாட்டு நூல்கள்
திருமுருகாற்றுப்படைஎட்டாம் நூற்றாண்டுநக்கீரர்
பொருநராற்றுப்படைமுடத்தாமக்கண்ணியார்
சிறுபாணாற்றுப்படை4 – 6ஆம் நூற்றாண்டுநற்றாத்தனார்
பெரும்பாணாற்றுப்படைகடியலூர் உருத்திரங்கண்ணனார்
நெடுநல்வாடை2 – 4ஆம் நூற்றாண்டுநக்கீரர்
குறிஞ்சிப் பாட்டுகபிலர்
முல்லைப்பாட்டுநப்பூதனார்
மதுரைக் காஞ்சிஇரண்டாவது, நான்காவது நூற்றாண்டுமாங்குடி மருதனார்
பட்டினப் பாலைமூன்றாம் நூற்றாண்டுகடியலூர் உருத்திரங்கண்ணனார்
மலைபடுகடாம்இரண்டாவது, நான்காவது நூற்றாண்டுபெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்
திருக்குறள்பொ.ஊ.மு. முதல் நூற்றாண்டு முதல் பொ.ஊ. ஐந்தாம் நூற்றாண்டுதிருவள்ளுவர்
நான்மணிக்கடிகைஆறாம் நூற்றாண்டுவிளம்பி நாகனார்
இன்னா நாற்பது5ஆம் நூற்றாண்டுகபிலதேவர்
இனியவை நாற்பதுஐந்தாம் நூற்றாண்டுபூதஞ்சேந்தனார்
களவழி நாற்பதுஐந்தாம் நூற்றாண்டுபொய்கையார்
திரிகடுகம்நான்கவது நூற்றாண்டுநல்லாதனார்
ஆசாரக்கோவை7ஆம் நூற்றாண்டுபெருவாயின் முள்ளியார்
பழமொழி நானூறு6ஆம் நூற்றாண்டுமூன்றுரை அரையனார்
சிறுபஞ்சமூலம்6ஆம் நூற்றாண்டுகாரியாசான்
முதுமொழிக்காஞ்சி4ஆம் நூற்றாண்டுகூடலூர் கிழார்
ஏலாதி6ஆம் நூற்றாண்டுகணிமேதாவியார்
கார் நாற்பது6ஆம் நூற்றாண்டுகண்ணன் கூத்தனார்
ஐந்திணை ஐம்பது6ஆம் நூற்றாண்டுமாறன் பொறையனார்
திணைமொழி ஐம்பது6ஆம் நூற்றாண்டுகண்ணன் சேந்தனார்
ஐந்திணை எழுபது6ஆம் நூற்றாண்டுமூவாதியார்
திணைமாலை நூற்றைம்பது6ஆம் நூற்றாண்டுகணிமேதாவியார்
கைந்நிலை6ஆம் நூற்றாண்டுபுல்லங்காடனார்
நாலடியார்7ஆம் நூற்றாண்டுசமணமுனிவர்கள் பலர்

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சங்க_இலக்கியம்&oldid=3823344" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை