தமிழ்நாட்டின் மாவட்டங்கள்

இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள 38 மாவட்டங்கள்; விக்கிப்பீடியா பட்டியலிடல்.

இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், 38 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு, அவரது தலைமையில் மாவட்ட நிர்வாகப் பணிகள் கவனிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன. இவற்றுள் விதிவிலக்காக, கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகர் நாகர்கோவில், நீலகிரி மாவட்டத்தின் தலைநகர் உதகமண்டலம் என்றுள்ளன. தற்போதுள்ள மாவட்டங்கள் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு விதமாக பெயர் மாற்றம் பெற்றுவந்துள்ளன. ஒரு சில காலகட்டங்களில் மாவட்டங்களின் பெயருடன் காலம் சென்ற தமிழ்நாட்டின் தலைவர்கள் பெயரும் இணைத்துப் பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டு வந்தன. தற்போது அப்பெயர்கள் நீக்கப்பட்டு, மாவட்டங்களின் பெயர்கள் மட்டும் நிலைத்து நிற்கின்றன.

தமிழக மாவட்டங்கள்
வகைமாவட்டங்கள்
அமைவிடம்தமிழ்நாடு
எண்ணிக்கை38 மாவட்டங்கள்
மக்கள்தொகைபெரம்பலூர் – 565,223 (குறைவு); சென்னை – 4,646,732 (அதிகம்)
பரப்புகள்426 km2 (164 sq mi) சென்னை (சிறியது)  – 6,266.64 km2 (2,419.56 sq mi) திண்டுக்கல் (பெரியது)
அரசுதமிழ்நாடு அரசு
உட்பிரிவுகள்தாலுகாக்கள், வருவாய் கிராமங்கள்

மாவட்டங்களை பிரித்தல் 2019-2020

நவம்பர் 2019-இல் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தைப் பிரித்து தென்காசி மாவட்டம் (33), விழுப்புரம் மாவட்டத்தைப் பிரித்து கள்ளக்குறிச்சி மாவட்டம் (34), வேலூர் மாவட்டத்தைப் பிரித்து திருப்பத்தூர் மாவட்டம் (35) மற்றும் இராணிப்பேட்டை மாவட்டம் (36), காஞ்சிபுரம் மாவட்டத்தைப் பிரித்து செங்கல்பட்டு மாவட்டம் (37), என 5 புதிய மாவட்டங்கள் நிறுவப்பட்டன.[1][2] இப்புதிய மாவட்டங்களுக்கு 2019 நவம்பர் 16 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர்கள் நியமிக்கப்பட்டனர்.[3] பின்னர் 2020 மார்ச் 24 அன்று நாகப்பட்டினம் மாவட்டத்தைப் பிரித்து, புதியதாக மயிலாடுதுறை மாவட்டம் (38) உருவாக்கப்பட்டது.[4][5]

வரலாறு

தமிழ்நாட்டின் மாவட்டங்களின் பிரிவினை விவரிக்கும் அசைபடம் 1956 முதல் 2009 வரை
இந்திய வரைபடத்தில் உள்ள தமிழ்நாடு மாநிலம்

1947 ஆகத்து மாதம் இந்திய விடுதலை பெற்ற பின்னர், பிரித்தானிய இந்தியாவின் சென்னை மாகாணமானது, சென்னை மாநிலம் என, பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1953 முதல் 1956 வரையிலான மாநில எல்லைகள் சீரமைப்புகளின் வாயிலாக தற்போதைய எல்லைகள் உருவாக்கப்பட்டன. சென்னை மாநிலமானது, 1969ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வமாக, தமிழ்நாடு என மறுபெயரிடப்பட்டது. முந்தைய சென்னை மாகாணமானது 13 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அவை: செங்கல்பட்டு, கோயம்புத்தூர், கன்னியாகுமரி, மெட்ராஸ், மதுரை, நீலகிரி, வட ஆற்காடு, இராமநாதபுரம், சேலம், தென் ஆற்காடு, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி ஆகியனவாகும். இம்மாவட்டங்கள் கீழ்க்காணும் வகையில் பிரிக்கப்பட்டு, தற்போதைய புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.[6]

மாவட்டம் பிரிப்பு கோரிக்கை

அதிகரிக்கும் மக்கள்தொகையைக் கணக்கில் கொண்டும் மற்றும் நிர்வாக வசதிகளுக்காகவும் மாவட்டம் பிரிப்பு கோரிக்கைகள் அதிகரித்துள்ளன.

மண்டல வாரியாக மாவட்ட கோரிக்கை

இந்த மாவட்டங்களின் மண்டல வகைப்பாடு பொதுவாக மக்கள், ஊடகங்கள், தேர்தல் பிரச்சாரங்களில் பயன்படுத்தப்படுகிறது.

மாவட்டங்கள் பட்டியல்

மண்டல வாரியாக மாவட்டங்களின் பட்டியல்

மக்கள் தொகை

தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்களின் மக்கட் தொகை 2011 ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி 7,21,38,958 ஆகும். இதில் அதிக மக்கள்தொகை உள்ள மாவட்டமாக சென்னை மாவட்டம் உள்ளது. இங்கு அதிகபட்சமாக 46,81,087 பேர் வசித்து வருகின்றனர்[18]. இம்மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி ஒரு ச.கி.மீ.க்கு 26,903 ஆக இருக்கிறது. இதன்படி மாநிலத்தில் அதிக மக்கள் அடர்த்தி பெற்ற மாவட்டமாக சென்னை உள்ளது. மாநிலத்தின் மக்கள் அடர்த்தி மிகக் குறைவாக உள்ள மாவட்டம், நீலகிரி மாவட்டம் ஆகும். நீலகிரி மாவட்டத்தின் மக்கள் அடர்த்தி ஒரு ச.கி.மீ.க்கு 288 பேர். கல்வியறிவில் கன்னியாகுமரி மாவட்டம் முதன்மையாக உள்ளது. இங்கு மாவட்டத்தின் 92.14% பேர் கல்வி அறிவு பெற்றவர்களாக உள்ளனர். கல்வியறிவில் 64.71% பெற்று, தருமபுரி மாவட்டம் கடைசி நிலையில் உள்ளது.

அட்டவணை

கீழே உள்ள அட்டவணையில், அனைத்து 38 மாவட்டங்களுக்கான புவியியல் மற்றும் மக்கட்தொகை அளவுருக்கள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன.[19]

எண்.மாவட்டம்குறியீடுதலைநகரம்நிறுவப்பட்டதுமுந்தைய மாவட்டம்பரப்பளவு (கி.மீ²)மக்கள் தொகை (2011 கணக்கெடுப்பின் படி)தாலுகா/வட்டம்[20]வரைபடம்
மக்கள் தொகை[21]மக்கள் தொகை அடர்த்தி (2011 கணக்கெடுப்பின் படி) (கி.மீ²)
1.அரியலூர்ARஅரியலூர்23 நவம்பர் 2007பெரம்பலூர்1949.317,54,894390
2.செங்கல்பட்டுCGLசெங்கல்பட்டு29 நவம்பர் 2019காஞ்சிபுரம்2,944.962,556,244868
3.சென்னைCHசென்னை1 நவம்பர் 1956ஆரம்பகால 13 மாவட்டங்களுள் ஒன்று (முன்னாள் பெயர் "மெட்ராஸ் மாவட்டம்")4264,646,73226,076
4.கோயம்புத்தூர்COகோயம்புத்தூர்1 நவம்பர் 1956ஆரம்பகால 13 மாவட்டங்களுள் ஒன்று4,723[22]3,458,045732
5.கடலூர்CUகடலூர்30 செப்டம்பர் 1993தென் ஆற்காடு மாவட்டம்3,6782,605,914709
6.தருமபுரிDHதருமபுரி2 அக்டோபர் 1965சேலம்4,497.7715,06,843335
7.திண்டுக்கல்DIதிண்டுக்கல்15 செப்டம்பர் 1985மதுரை6,266.6421,59,775345
8.ஈரோடுERஈரோடு31 ஆகத்து 1979கோயம்புத்தூர்5,722[23]22,51,744394
9.கள்ளக்குறிச்சிKLகள்ளக்குறிச்சி26 நவம்பர் 2019விழுப்புரம்3,520.3713,70,281389
10.காஞ்சிபுரம்KCகாஞ்சிபுரம்1 சூலை 1997செங்கல்பட்டு (சென்னை மாகாணம்)1,655.9411,66,401704
11.கன்னியாகுமரிKKநாகர்கோவில்1 நவம்பர் 1956ஆரம்பகால 13 மாவட்டங்களுள் ஒன்று (திருவாங்கூர்-கொச்சினிலிருந்து மாற்றப்பட்டது)1,67218,70,3741,119
12.கரூர்KRகரூர்30 செப்டம்பர் 1995திருச்சிராப்பள்ளி2,895.5710,64,493357
13.கிருட்டிணகிரிKRகிருட்டிணகிரி9 பிப்ரவரி 2004தருமபுரி5,14318,79,809366
14.மதுரைMDUமதுரை1 நவம்பர் 1956ஆரம்பகால 13 மாவட்டங்களுள் ஒன்று3,741.7330,38,252812
15.மயிலாடுதுறைமயிலாடுதுறை7 ஏப்ரல் 2020நாகப்பட்டினம்1,1729,18,356784
16.நாகப்பட்டினம்NGநாகப்பட்டினம்18 அக்டோபர் 1991தஞ்சாவூர்1,3976,97,069498
17.நாமக்கல்NMநாமக்கல்1 சனவரி 1997சேலம்3,36317,26,601513
18.நீலகிரிNIஉதகமண்டலம்1 நவம்பர் 1956ஆரம்பகால 13 மாவட்டங்களுள் ஒன்று2,452.57,35,394300
19.பெரம்பலூர்PEபெரம்பலூர்30 செப்டம்பர் 1995திருச்சிராப்பள்ளி1,7525,65,223320
20.புதுக்கோட்டைPUபுதுக்கோட்டை14 சனவரி 1974தஞ்சாவூர் மற்றும் திருச்சிராப்பள்ளி4,66316,18,345347
21.இராமநாதபுரம்RAஇராமநாதபுரம்1 நவம்பர் 1956ஆரம்பகால 13 மாவட்டங்களுள் ஒன்று4,089.5713,53,445331
22.இராணிப்பேட்டைRNஇராணிப்பேட்டை28 நவம்பர் 2019வேலூர்2,234.3212,10,277542
23.சேலம்SAசேலம்1 நவம்பர் 1956ஆரம்பகால 13 மாவட்டங்களுள் ஒன்று5,20534,82,056669
24.சிவகங்கைSIசிவகங்கை15 மார்ச் 1985மதுரை மற்றும் இராமநாதபுரம்4,08613,39,101328
25.தென்காசிTSதென்காசி22 நவம்பர் 2019திருநெல்வேலி2916.1314,07,627483
26.தஞ்சாவூர்TJதஞ்சாவூர்1 நவம்பர் 1956ஆரம்பகால 13 மாவட்டங்களுள் ஒன்று3,396.5724,05,890708
27.தேனிTHதேனி25 சூலை 1996மதுரை3,06612,45,899406
28.தூத்துக்குடிTKதூத்துக்குடி20 அக்டோபர் 1986திருநெல்வேலி4,62117,50,176379
29.திருச்சிராப்பள்ளிTCதிருச்சிராப்பள்ளி1 நவம்பர் 1956ஆரம்பகால 13 மாவட்டங்களுள் ஒன்று4,40727,22,290618
30.திருநெல்வேலிTIதிருநெல்வேலி1 நவம்பர் 1956ஆரம்பகால 13 மாவட்டங்களுள் ஒன்று3842.3716,65,253433
31.திருப்பத்தூர்TUதிருப்பத்தூர்28 நவம்பர் 2019வேலூர்1,797.9211,11,812618
32.திருப்பூர்TPதிருப்பூர்22 பிப்ரவரி 2009கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு5,186.3424,79,052478
33.திருவள்ளூர்TLதிருவள்ளூர்1 சூலை 1997செங்கல்பட்டு (சென்னை மாகாணம்)342437,28,1041,089
34.திருவண்ணாமலைTVதிருவண்ணாமலை30 செப்டம்பர் 1989வட ஆற்காடு மாவட்டம்6,19124,64,875398
35.திருவாரூர்TRதிருவாரூர்18 அக்டோபர் 1991தஞ்சாவூர்2,16112,64,277585
36.வேலூர்VEவேலூர்30 செப்டம்பர் 1989வட ஆற்காடு மாவட்டம்2030.1116,14,242795
37.விழுப்புரம்VLவிழுப்புரம்30 செப்டம்பர் 1993தென் ஆற்காடு மாவட்டம்3725.5420,93,003562
38.விருதுநகர்VRவிருதுநகர்15 மார்ச் 1985மதுரை மற்றும் இராமநாதபுரம்4,28819,42,288453

முந்தைய மாவட்டங்கள்

வரைபடம்மாவட்டம்ஆண்டுகள்பின்னர் வந்த மாவட்டங்கள்
செங்கல்பட்டு1956–1997காஞ்சிபுரம், செங்கல்பட்டு(2019 முதல்) மற்றும் திருவள்ளூர்
வட ஆற்காடு1956–1989திருவண்ணாமலை, வேலூர், இராணிப்பேட்டை(2019 முதல்) மற்றும் திருப்பத்தூர்(2019 முதல்)
தென் ஆற்காடு1956–1993கடலூர், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி (2019 முதல்)

இதனையும் காண்க

மேற்கோள்கள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை