அயோடின்-129

அயோடின்-129 (Iodine-129 (129I) என்பது அயோடினின் இயற்கையில் விளையும் சமதானி ஆகும். அத்துடன் அணு உலைகளில் தோற்றுவிக்கப்படும் ஒரு கழிவுப் பொருளும் ஆகும். இதன் அரைவாழ்வுக் காலம் 15.7 மில்லியன் ஆண்டுகளாகும். இதன் காரணமாக இதனைக் கையாளுவது மிகவும் அபாயகரமானதும் கடினமானதுமாகும். இப்போது அயோடின்-129 கண்ணாடியில் கலந்து பூமிக்கடியில் புதைக்கப்படுகிறது. 129I ஒரு சிக்கலற்ற 128I ஆக மாற்றப்படுகிறது. இதற்கு வேண்டப்படுவதெல்லாம் ஆய்வுக் கூட லேசர் கதிர்களே. பேராசிரியர் கென் லெடிங்காம் (KEN Ledingham ) மற்றும் அவரது துணைவர்கள் I-129 ஐ லேசர் கதிர்களால் தாக்கி I-128 ஆக மாற்றியுள்ளார்கள். இதன் அரை ஆயுள் 25 நிமிடங்களே ஆகும். இதனை எளிதில் கையாளமுடியும். ஒரு மணி நேரத்தில் களைந்து விடலாம்.

இந்த மாற்றத்தினை பெரிய அளவில் நிகழ்த்த ஆய்வுகள் நடக்கின்றன. மேலும் லேசரைப் பயன்படுத்தி தனிம மாற்றம் செய்ய முடியும் என்பது தெளிவாகியுள்ளது. இதனால் பெட் (PET) போன்ற கருவிகளுக்கு ஐசோடோப்புகளை இனிவரும் நாட்களில் சைக்ளோட்ரான்களின் உதவி இல்லாமலே லேசர் துணையுடன் பெறலாம். சுற்றுச் சூழலைப் பாதிக்காமலே அணு உலைக் கழிவுகளை கையாளலாம்

129I அணுக்கரு உலையில் யுரேனியம், புளூட்டோனியம் ஆகியவற்றின் அணுக்கருப் பிளவு மூலம் தோற்றுவிக்கப்படுகிறது. 1950கள், 60களில் மேற்கொள்ளப்பட்ட அணுகுண்டு சோதனைகளின் போது பெருமளவு அயோடின்-129 வளிமண்டலத்திற்கு வெளியேறின.

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=அயோடின்-129&oldid=1418923" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்