பதினெண் கீழ்க்கணக்கு

குறைந்த அடிகளுடைய 18 நூல்களின் தொகுப்பு. தமிழ் இலக்கியம்.
தமிழ் இலக்கியம்
சங்க இலக்கிய நூல்கள்
அகத்தியம்தொல்காப்பியம்
பதினெண்மேற்கணக்கு
எட்டுத்தொகை
நற்றிணைகுறுந்தொகை
ஐங்குறுநூறுபதிற்றுப்பத்து
பரிபாடல்கலித்தொகை
அகநானூறுபுறநானூறு
பத்துப்பாட்டு
திருமுருகாற்றுப்படைபொருநராற்றுப்படை
சிறுபாணாற்றுப்படைபெரும்பாணாற்றுப்படை
முல்லைப்பாட்டுமதுரைக்காஞ்சி
நெடுநல்வாடைகுறிஞ்சிப்பாட்டு
பட்டினப்பாலைமலைபடுகடாம்
பதினெண்கீழ்க்கணக்கு
நாலடியார்நான்மணிக்கடிகை
இன்னா நாற்பதுஇனியவை நாற்பது
களவழி நாற்பதுகார் நாற்பது
ஐந்திணை ஐம்பதுதிணைமொழி ஐம்பது
ஐந்திணை எழுபதுதிணைமாலை நூற்றைம்பது
திருக்குறள்திரிகடுகம்
ஆசாரக்கோவைபழமொழி நானூறு
சிறுபஞ்சமூலம்முதுமொழிக்காஞ்சி
ஏலாதிகைந்நிலை
சங்கநூல் தரும் செய்திகள்
தமிழ்ச் சங்கம்சங்கம் மருவிய காலம்
சங்க காலப் புலவர்கள்சங்ககால நிலத்திணைகள்
சங்க கால ஊர்கள்சங்க கால மன்னர்கள்
சங்க கால நாட்டுமக்கள்சங்க காலக் கூட்டாளிகள்
சங்ககால விளையாட்டுகள்சங்ககால மலர்கள்

தமிழகத்தில் சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்ட 18 நூல்களைச் சேர்த்து பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் தனித்தனியான வெவ்வேறு புலவர்களால் பாடப்பட்டவை.

நூல்வகைகள்

பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் குறித்த வாய்பாட்டுப் பாடல்:

"நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப்
பால்கடுகம் கோவை பழமொழி மாமூலம்
இன்னிலைய காஞ்சியோ டேலாதி என்பவே
கைந்நிலைய வாம்கீழ்க் கணக்கு." [1]

இந்தப் பாடல் குறிப்பிடும் நூல்கள்

  1. நாலடியார்
  2. நான்மணிக்கடிகை
  3. இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று)
  4. இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று)
  5. கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று)
  6. களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று)
  7. ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று)
  8. ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று)
  9. திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று)
  10. திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று)
  11. முப்பால் (திருக்குறள்)
  12. திரிகடுகம்
  13. ஆசாரக் கோவை
  14. பழமொழி நானூறு
  15. சிறுபஞ்சமூலம்
  16. கைந்நிலை
  17. முதுமொழிக் காஞ்சி
  18. ஏலாதி

இந்தப் பாடலில் கைந்நிலை என்பது ஒழுக்கத்தைக் குறிக்கும்.

வாய்ப்பாட்டுப் பாடலில் பாட வேறுபாடு

நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப்
பால்கடுகம் கோவை பழமொழி மாமூலம்
இன்னிலைய காஞ்சியுட னேலாதி யென்பதூஉம்,
கைந்நிலையு மாங்கீழ்க் கணக்கு

இந்தப் பாடலில் இனிய நிலையை உடைய காஞ்சி என்று அடைமொழியாகக் கொள்ளப்பட்டுக் கைந்நிலை என்பது தனி நூலாகக் கொள்ளப்படும்.

இன்னிலை, கைந்நிலை, நூல்களில் எது பதினெண்கீழ்க்கணக்கு தொகுப்பில் சேரவேண்டும்

  • இன்னிலை அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நாற்பொருள் மேல் 45 வெண்பாப் பாடல்களைக் கொண்ட நூல். இதன் ஆசிரியர் பொய்கையார். "இன்னிலை" நூலைத் திரு.வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் அச்சிற் பதிப்பித்தார்.
  • "கைந்நிலை" என்ற நூலை இயற்றியவர் மாறோக்கத்து முள்ளிநாட்டு நல்லூர்க் காவிதியார் மகனார் புல்லங்காடனார். இதனை ஆசிரியர் திரு. அனந்தராமையர் அவர்கள் அச்சில் பதிப்பித்தார். இதில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐந்திணை மேல் பாடப்பட்ட 60 பாடல்கள் உள்ளன.

இன்னுரை நூலுக்கு உரை எழுதும் சங்குப் புலவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.[2]

இன்னிலை, கைந்நிலை வேறுபாடு
வேறுபாடுஇன்னிலைகைந்நிலை
பொருள்புறம்அகம்
ஆசிரியர்பொய்கையார்மாறோக்கத்து முள்ளிநாட்டு நல்லூர்க் காவிதியார் மகனார் புல்லங்காடனார்
பாடல்கள்4560

பகுப்பு

இன்னிலை சேர்க்கப்பட்டுள்ள நிலையில் இத்தொகுதியில் அடங்கியுள்ள நூல்களுள் பெரும்பாலானவை நீதி நூல்களாகும். பதினொன்று நூல்கள் இவ்வகையைச் சார்ந்தவை. ஆறு நூல்கள் அகத்திணை சார்பானவை. ஒன்று புறத்திணை நூல். இந் நூல்கள் அனைத்தும் சிறு பாடல்களால் ஆனவை. கூடிய அளவாக நான்கு அடிகளை மட்டுமே கொண்டவை.[3][4]

நீதி நூல்கள்

  1. நாலடியார்
  2. நான்மணிக்கடிகை
  3. இன்னா நாற்பது
  4. இனியவை நாற்பது
  5. திருக்குறள்
  6. திரிகடுகம்
  7. ஏலாதி
  8. பழமொழி நானூறு
  9. ஆசாரக்கோவை
  10. சிறுபஞ்சமூலம்
  11. முதுமொழிக்காஞ்சி

அகத்திணை நூல்கள்

  1. ஐந்திணை ஐம்பது
  2. திணைமொழி ஐம்பது
  3. ஐந்திணை எழுபது
  4. திணைமாலை நூற்றைம்பது
  5. கார் நாற்பது
  6. கைந்நிலை

புறத்திணை நூல்

  1. களவழி நாற்பது

பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் அட்டவணை

வரிசைஎண்நூல்பெயர்பாடல் எண்ணிக்கைபொருள்ஆசிரியர்
1.நாலடியார்400அறம்/நீதிசமண முனிவர்கள்
2.நான்மணிக்கடிகை101அறம்/நீதிவிளம்பி நாகனார்
3.இன்னா நாற்பது40+1 (கடவுள் வாழ்த்து)அறம்/நீதிகபிலர்
4.இனியவை நாற்பது40+1அறம்/நீதிபூதஞ்சேந்தனார்
5.திருக்குறள்1330அறம்/நீதிதிருவள்ளுவர்
6.திரிகடுகம்100அறம்/நீதிநல்லாதனார்
7.ஏலாதி80அறம்/நீதிகணிமேதாவியார்
8.பழமொழி நானூறு400அறம்/நீதிமுன்றுரை அரையனார்
9.ஆசாரக்கோவை100+1அறம்/நீதிபெருவாயின் முள்ளியார்
10.சிறுபஞ்சமூலம்104அறம்/நீதிகாரியாசான்
11முதுமொழிக்காஞ்சி10*10அறம்/நீதிகூடலூர்க்கிழார்
12.ஐந்திணை ஐம்பது50அகம்பொறையனார்
13.ஐந்திணை எழுபது70அகம்மூவாதியார்
14.திணைமொழி ஐம்பது50அகம்கண்ணன் சேந்தனார்
15.திணைமாலை நூற்றைம்பது150அகம்கணிமேதையார்
16.கைந்நிலை60அகம் புல்லங்காடனார்
17.கார்நாற்பது40அகம்கண்ணங் கூத்தனார்
18.களவழி நாற்பது40+1புறம்பொய்கையார்

மேற்கோள்கள்

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை