கீத்தூர்ன்

கீத்தூர்ன் (டச்சு உச்சரிப்பு: [ˈɣitɦoːr(ə)n]) என்பது நெதர்லாந்தின் ஓவரேஸ்செல் மாகாணத்தில் உள்ள ஒரு கிராமமாகும். 2020-ஆம் ஆண்டு கணக்கின்படி இக்கிராமத்தில் 2,795 மக்கள் வசிக்கின்றனர். இது ஸ்டீம்வேக்கர்லன்ட் நகராட்சியில் ஸ்டீம்வேக் நகரிலிருந்து தென்மேற்கே 5 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. ஊரிலுள்ள எண்ணிலடங்கா கால்வாய்களின் வாயிலாக நீர்வழிப் போக்குவரத்தை மட்டுமே பிராதனப் போக்குவரத்தாகக் கொண்ட ஒரு கிராமமாக கீத்தூர்ன் திகழ்கிறது. "டச்சு வெனிஸ்" (டச்சு: Hollands Venetië) அல்லது "நெதர்லாந்தின் வெனிஸ்" என்று அழைக்கப்படும் இக்கிராமம், நெதர்லாந்திலிருந்து மட்டுமின்றி வெளிநாடுகளிலிருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தரும் ஒரு பிரபலமான டச்சு சுற்றுலா தலமாக விளங்குகிறது.

கீத்தூர்ன்
2014-ஆம் ஆண்டு ஊரின் தோற்றம்
2014-ஆம் ஆண்டு ஊரின் தோற்றம்
கீத்தூர்ன்-இன் கொடி
கொடி
கீத்தூர்ன்-இன் சின்னம்
சின்னம்
கீத்தூர்ன் is located in Overijssel
கீத்தூர்ன்
கீத்தூர்ன்
ஓவரேஸ்செல்லில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 52°44′20″N 6°4′41″E / 52.73889°N 6.07806°E / 52.73889; 6.07806
நாடுநெதர்லாந்து
மாகாணம்ஓவரேஸ்செல்
நகராட்சிஸ்டீம்வேக்கர்லன்ட்
பரப்பளவு
 • மொத்தம்38.47 km2 (14.85 sq mi)
ஏற்றம்−0.3 m (−1.0 ft)
மக்கள்தொகை
 (2021)[1]
 • மொத்தம்2,805
 • அடர்த்தி73/km2 (190/sq mi)
நேர வலயம்ஒசநே+1 (CET)
 • கோடை (பசேநே)ஒசநே+2 (CEST)
Postal code
8355[1]
Dialing code0521
1942-ல் கீத்தூர்ன்

வரலாறு

சில காலத்திற்கு முன்பு வரை கீத்தூர்ன் ஒரு பாதசாரி ஊராக இருந்தது. தற்போது இதற்கு விதிவிலக்குகள் செய்யப்பட்டுள்ளன. 1958-க்குப் பிறகு கீத்தூர்ன் உள்நாட்டிற்குள் மிகவும் பிரபலமான இடமாக மாறியது. டச்சுத் திரைப்படத் தயாரிப்பாளரான பெர்ட் ஹான்ஸ்ட்ரா தனது புகழ்பெற்ற நகைச்சுவைத் தயாரிப்பை கீத்தூர்ன் கிராமத்தில் எடுத்ததே இதற்குக் காரணம். கிராமத்தின் பழைய பகுதியில் சாலைகளே இருந்திருக்கவில்லை. ஊரின் அனைத்துப் போக்குவரத்தும் அங்குள்ள பல கால்வாய்களில் ஒன்றில் நடைபெற்றது. காலப்போக்கில் மிதிவண்டி ஓட்டும் பாதை மட்டுமே அங்கு கூடுதலாக அமைக்கப்பட்டது. முற்றா நிலக்கரி தோண்டுவதன் விளைவால் உருவான பள்ளத்தாக்குகளே கீத்தூர்னில் ஏரிகளாக உருவாயின.

1973-ஆம் ஆண்டு வரை கீத்தூர்ன் ஒரு தனி நகராட்சியாக இருந்தது. அதன் பின்னர் பிரிடர்வீட் நகரின் ஒரு பகுதியாக கீத்தூர்ன் மாறியது. 2001-இல் ஸ்டீம்வேக்குடன் இணைக்கப்பட கீத்தூர்ன் தனது நகராட்சி அந்தஸ்தை இழந்தது.[5]

சுற்றுலா

பழைய பாரம்பரிய கிராமமான கீத்தூர்னில் சுற்றுலா ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. இன்றுவரை படகின் மூலம் மட்டுமே முழுமையாக அணுக முடிந்த கீத்தூர்ன் கிராமம், பொதுவாக "வடக்கின் வெனிஸ்"[6] என்றும் "நெதர்லாந்தின் வெனிஸ்"[7] என்றும் அழைக்கப்படுகிறது. கீத்தூர்ன் கிராமத்தில் கால்வாய்களுக்குக் குறுக்கே 176 பாலங்கள் உள்ளன.[8]

கிராமக் காட்சிகள்

தரவுகள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கீத்தூர்ன்&oldid=3403946" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்