கொடைக்கானல் காட்டுயிர் உய்விடம்

கொடைக்கானல் காட்டுயிர் உய்விடம் (Kodaikanal Wildlife Sanctuary)என்பது பழனி மலைகள் காட்டுப் பகுதியில் அமைந்துள்ளது. 20ஆண்டுகாலப் பரிந்துரைகளுக்குப் பிறகு 2013இல் துவக்கப்பட்டது.

அமைவிடம்

இவ் உய்விடம் திண்டுக்கல்,தேனி மாவட்டப் பகுதியில் 608.95 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ளது.

காட்டுவகைகள்

முட்புதர் காடு, இலையுதிர் காடு, பசுமைமாறாக் காடு, ஈர இலைக்காடு, மழைக்காடு, சோலைக்காடு, மலையுச்சிப் புல்வெளி எனப் பலவகையான காடுகள் உள்ளன.

உயிரினங்கள்

யானை, வேங்கைப் புலி,சிறுத்தை, செந்நாய்,கரடி,வரையாடு, நரை அண‍ல்,மலபார் மலையணில்,கடமான் அல்லது மிளா, கேளையாடு,காட்டெருது உள்ளிட்ட பல வகை பாலூட்டி இனங்களும் பல அரியவகைத் தாவர இனங்களும், 100 வகை பறவையினங்களும் இங்கு காணப்படுகின்றன. மேற்குத் தொடர்ச்சி மலையின் ஓரிடவாழ் பறவைகளான நீலகிரி காட்டுப்புறா, நீலகிரி நெட்டைக்காலி, குட்டை இறக்கையன் போன்ற அரியவகைப் பறவைகளும் இப்பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ளன. [1]

மேற்கோள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்