கொத்து

கொத்து என அழைக்கப்படும் இவ்வகை உணவானது, பரோட்டாவை சிறிய அளவில் உதிர்த்து, சூடான கல்லில் வெங்காயம், கறிவேப்பிலை, தக்காளியோடு கலந்து நன்கு கொத்தி அதில் முட்டையை உடைத்து ஊற்றி, கொஞ்சம்  சால்னாவையும் ஊற்றி மேலும் கொத்துவார்கள். கடைசியில் மிளகு சேர்த்து பரிமாறுவார்கள். மிக சூடாக உண்ணுவதற்கு அருமையாக இருக்கும்.  இதை முட்டை பரோட்டா என்றும் கூறுவார்கள். இப்போது இதில் சிக்கன் துண்டுகளையும், மட்டன் துண்டுகளையும் கூட சேர்த்து கொத்தி, சிக்கன் கொத்து, மட்டன் கொத்து என்று பல்வேறு விதங்களில் பரிமாறுகின்றனர். சைவ கொத்துப்பரோட்டாவில், முட்டைக்கு பதில் முட்டைகோஸ், காரட் மற்றும் குடை மிளகாய் போன்ற காய்கறிகளை சேர்ப்பார்கள்.[1][2]

கொத்து
கொத்து
மாற்றுப் பெயர்கள்கொத்து
பரிமாறப்படும் வெப்பநிலைMain course
தொடங்கிய இடம்இலங்கை, இந்தியா, பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான்
பரிமாறப்படும் வெப்பநிலைசூடாக
முக்கிய சேர்பொருட்கள்கோதுமை, மைதா ரொட்டி

வரலாறு

பெரும்பாலான மக்கள் பரோட்டா உணவுகளின் ஆரம்பமாக இலங்கை என உறுதியாக சொன்னாலும் பெயர்க்காரணத்தைக் கொண்டு இந்தியாவையும் பூர்வீகமாகக் கொள்ளலாம். ஆனால் பரோட்டா உணவுகளின் பூர்வீகத்தைப் பற்றிய உறுதியான ஆதாரம் எங்கும் இல்லை.வட இந்தியாவில் 'பராத்தா', மொரீஷியஸில் 'பராட்டா’, மியான்மரில் 'பலாட்டா’ என பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டாலும்'பராத்தா' என்கிற வார்த்தையின் மூலம் சமஸ்கிருதத்தில் இருக்கலாம் என நம்பப்படுகிறது. வேத காலத்தில், 'புரோதாஷா' என்கிற உணவை, யாகம் செய்யும்போது அக்னி பகவானுக்குப் படைப்பார்களாம். அதில் பருப்பையும் நறுக்கிய காய்களையும் சேர்த்து செய்திருப்பார்களாம். அந்த 'பு-ரோ-தா-ஷம்'தான் 'பராத்தா' ஆனது என நம்பப்படுகிறது. ஏனெனில் தொடக்கத்தில் பரோட்டா செய்யப் பயன்பட்டது நெய்தான். வெகு நாட்களுக்குப் பிறகுதான் மற்ற எண்ணெய்களைப் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள்.

கொத்து பரோட்டா சிறப்புகள்

தென் தமிழகத்தின் மாவட்டங்களான மதுரை விருதுநகர் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் மிகப் பிரபலமாக விளங்கும் இவ்வுணவுப் பொருளானது மிகச் சிறப்பான முறையில் சமைக்கப்பட்டு சுவையாக பரிமாறப்படும் சிறந்த மாலை நேர உணவாகும்.[3][4]

தமிழகத்தில் மட்டுமல்லாது இந்தியாவின் பிற பகுதிகளிலும் இலங்கையிலும் கிடைக்கப்பெறும் எளிய மக்களின் உணவாகும்.[5] சாலையோரங்களில் உள்ளதட்டுக் கடை என அழைக்கப்படும் மாலை நேர உணவங்களில் இது பரவலாக தயாரிக்கப்படுகிறது.சமீப காலமாக மற்றொரு தென்னிந்திய உணவான இட்லியும் இம்முறையில் கொத்து இட்லி என சமைக்கப்பட்டு விற்கப்படுகிறது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கொத்து&oldid=4015029" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்