செந்தூரப்பூவே (தொலைக்காட்சித் தொடர்)
செந்தூரப்பூவே என்பது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குடும்பத் தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[1][2] இதில் பிரபல தமிழ் நடிகர் ரஞ்சித் கதாநாயகனாக நடிக்க இவருக்கு ஜோடியாக தறி என்ற தொடரில் நடித்த ஸ்ரீ நிதி என்பவர் கதாநாயகியாக நடித்துள்ளார்கள்.[3]
செந்தூரப்பூவே | |
---|---|
வகை | குடும்பம் நாடகத் தொடர் |
எழுத்து |
|
இயக்கம் | அப்துல் கபீஸ் |
நடிப்பு |
|
முகப்பிசை | செந்தூரப்பூவே |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அத்தியாயங்கள் | 340 |
தயாரிப்பு | |
தயாரிப்பாளர்கள் | திருகானம் |
ஒளிப்பதிவு | சரவணன் |
தொகுப்பு | முத்து |
ஓட்டம் | தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள் |
தயாரிப்பு நிறுவனங்கள் | கலா கம்யூனிகேஷன்ஸ் |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | விஜய் தொலைக்காட்சி |
ஒளிபரப்பான காலம் | 27 சூலை 2020 13 ஏப்ரல் 2022 | –
இத்தொடர் சூலை 27, 2020 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகி 4 அக்டோபர் 2021 ஆம் ஆண்டு முதல் நிறுத்தப்பட்டு, பின்னர் 2022 முதல் மீண்டும் ஒளிபரப்பாகி, ஏப்ரல் 13, 2022 அன்று 340 அத்தியாயங்களுடன் நிறைவுபெற்றது.[1][2]
கதை சுருக்கம்
இந்த தொடரில் வயது வித்தியாயத்தில் திருமணம் செய்யும் கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு எப்படி சந்தோசமாக வாழ்கின்றார்கள் என்பது தான் கதை.
நடிகர்கள்
முதன்மை கதாபாத்திரம்
- ரஞ்சித் - துரைசிங்கம்
- ஸ்ரீ நிதி - ரோஜா
துணைக் கதாபாத்திரம்
- நிவாஷினி - கனிமொழி (துரைசிங்கத்தின் மூத்த மகள்)
- ரியா மனோஜ் (1-24) → திவ்யதர்ஷினி - கயல்விழி துரைசிங்கம் (துரைசிங்கத்தின் இரண்டவாது மகள்)
- சாந்தி வில்லியம்ஸ் - ராஜலட்சுமி (துரைசிங்கத்தின் தாய்)
- ஸ்ரீ துர்கா (1-24) → யமுனா சின்னதுரை - பாகம்பிரியாள் (துரைசிங்கத்தின் சகோதரி)
- தர்ஷா குப்தா[4] - ஐஸ்வர்யா ராஜேந்திரன் (துரைசிங்கத்தின் உறவினர்)
- பாபு - ராஜேந்திரன் (ஐஸ்வர்யாவின் தந்தை)
- பெரோஸ் கான் - மாயா அழகு (ஐஸ்வர்யாவின் அண்ணா)
- பாண்டி ரவி - பாண்டியன் (ரோஜாவின் மாமா)
- சிமிர்தி - சாந்தி (ரோஜாவின் அத்தை)
- சுமதி ஸ்ரீ - முத்துலட்சுமி (ரோஜாவின் தாய்)
- தீபா சங்கர் - மாரியம்மா (அன்புவின் தாய்)
- திரவியம் - அன்பு (ரோஜாவின் கணவன்)
- இந்த தொடரில் இறந்துவிட்டார்
- ஜெமினி மணி - மணி
சிறப்புத் தோற்றம்
- ஆல்யா மானசா - சந்தியா
- பாக்யராஜ்
- வினோத் பாபு
- சிந்து
- குமரன் தங்கராஜன்
- சுஹாசினி
தயாரிப்பு
இந்த தொடர் 16 மார்ச் 2020 ஆம் ஆண்டு ஒளிபரப்படுவதற்காக திட்டமிடப்பட்டது. கொரோனாவைரசு காரணத்தால் 27 ஜூலை 2020 முதல் ஒளிபரப்பானது.[5]
நடிகர்களின் தேர்வு
இந்த தொடரில் பிரபல முன்னால் நடிகரான ரஞ்சித் என்பவர் 'துரைசிங்கம்' என்ற கதாபாத்திரம் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக தறி என்ற தொடரில் நடித்த ஸ்ரீ நிதி என்பவர் 'ரோஜா' என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். 'தர்ஷா குப்தா' என்பவர் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். துரைசிங்கத்தின் மகள்களாக 'நிவாஷினி' மற்றும் 'திவ்யதர்ஷினி' ஆகியோர் நடிக்கிறார்கள். இவரின் தாய் கதாபாத்திரத்தி பிரபல சின்னத்திரையை நடிகை 'சாந்தி வில்லியம்ஸ்' என்பவர் 'ராஜலட்சுமி' என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.
மதிப்பீடுகள்
கீழேயுள்ள அட்டவணையில் நீல எண்கள் மிகக் குறைந்த மதிப்பீடுகளையும் சிவப்பு எண்கள் மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் குறிக்கும்.
ஆண்டு | மிகக் குறைந்த மதிப்பீடுகள் | மிக உயர்ந்த மதிப்பீடுகள் |
---|---|---|
2020 | 4.2% | 5.4% |
3.1% | 4.3% | |
2021 | 2.4% | 3.5% |
1.2% | 2.8% |
சர்வதேச ஒளிபரப்பு
- இந்த தொடர் விஜய் தொலைக்காட்சி மற்றும் விஜய் தொலைக்காட்சி எச்டி (உயர் வரையறு தொலைக்காட்சி) மூலம் உலகம் முழுதுவதும் ((ஆசியா: இலங்கை, தென்கிழக்காசியா), ஐரோப்பா, அமெரிக்காக்கள், மத்திய கிழக்கு நாடுகள்) போன்ற நாடுகளில் பார்க்க முடியும்.
- இந்த தொடரின் பகுதிகள் ஹாட் ஸ்டார் என்ற இணைய மூலமாகவும் பார்க்க முடியும்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
விஜய் தொலைக்காட்சி : திங்கள்-வெள்ளி மாலை 6:30 மணி தொடர்கள் | ||
---|---|---|
முன்னைய நிகழ்ச்சி | செந்தூரப்பூவே | அடுத்த நிகழ்ச்சி |
காற்றுக்கென்ன வேலி | நாம் இருவர் நமக்கு இருவர் |
விஜய் தொலைக்காட்சி : திங்கள்-வெள்ளி 7:30 மணி தொடர்கள் | ||
---|---|---|
முன்னைய நிகழ்ச்சி | செந்தூரப்பூவே | அடுத்த நிகழ்ச்சி |
பாண்டியன் ஸ்டோர்ஸ் (21 செப்டம்பர் 2020 - 3 அக்டோபர் 2020) | தமிழும் சரஸ்வதியும் |
விஜய் தொலைக்காட்சி : திங்கள்-வெள்ளி 9:30 மணி தொடர்கள் | ||
---|---|---|
முன்னைய நிகழ்ச்சி | செந்தூரப்பூவே (27 சூலை 2020 - 3 அக்டோபர் 2020) | அடுத்த நிகழ்ச்சி |
அரண்மனை கிளி (11 நவம்பர் 2019 - 27 மார்ச் 2020) | பிக் பாஸ் தமிழ் 4 |