தமிழக அரசுத் தலைமை வழக்குரைஞர்
தமிழக அரசுத் தலைமை வழக்குரைஞர் [1] (அட்வகேட் ஜென்ரல்) (அ) சென்னை உயர் நீதிமன்றத் தலைமை வழக்குரைஞர் (அ) வழக்குரைஞர் தலைவர் மாநில ஆளுநரால் நியமிக்கப்படுகிறார். இவரே தமிழக அரசு சார்பில் வழக்குகளில் வாதாடுவார் மற்றும் அரசுக்கு சட்ட ஆலோசனைகள் வழங்குவார். உயர் நீதிமன்ற நீதிபதிகளின் நியமனத்துக்குரியத் தகுதிகளுடன் இருப்பவர்.
வரலாறு
பிரித்தானிய நிர்வாகத்திலிருந்த சென்னை மாகாண அரசாங்கத்திற்கு சட்ட விசயங்களில் ஆலோசனை வழங்குவதற்காக இருந்த ஒரு தலைமை வழக்கறிஞர் பதவியானது மெட்ராஸ் அட்வகேட் ஜெனரல் (Advocate-General of Madras) என்பது ஆகும். சென்னை மாகாணமானது 1652 முதல் 1950 வரை இருந்தது. 1858 க்கு முன்னர், கிழக்கிந்திய கம்பெனியால் சென்னை நிர்வகிக்கப்பட்ட போது, அட்வகேட் ஜெனரல் அந்த நிறுவனத்தின் மூத்த சட்ட அதிகாரியாகவும், பெரிய பிரித்தானிய இறையாண்மையின் அட்டர்னி ஜெனரலாகவும் இருந்தார். மேலும் இவர் சென்னை சட்டமன்றத்தின் அதிகாரப்பூர்வ உறுப்பினராகவும் இருந்தார்.
அட்வகேட் ஜெனரல்களின் பட்டியல்
மதராஸ் மாகாணம்
- அலெக்சாண்டர் அன்ஸ்ட்ரூதர் 1803–? 1812
- சர் சாமுவேல் டோலர் 1812-1821
- ஹெர்பர்ட் அபிங்டன் டிராப்பர் காம்ப்டன் 1822-1828 [2]
- ஜார்ஜ் நார்டன் 1828–> 1839 [3]
- டபிள்யூ. பாத்தி 1833-1834 (பொறுப்பு)
- தாமஸ் சிட்னி ஸ்மித் 1861-1863
- ஜான் புரூஸ் நார்டன் 1863-1868 [4]
- ஜான் டாசன் மேனே 1868-1872 (பொறுப்பு)
- ஹென்றி ஸ்டீவர்ட் கன்னிங்ஹாம் 1872-1877
- பேட்ரிக் ஓ'சல்லிவன் 1877-1882
- ஹேல் ஹோராஷியோ ஷெப்பார்ட் 1885-1887
- ஜேம்ஸ் ஸ்பிரிங் பிரான்சன் 1887-1897
- வி. பாஷ்யம் ஐய்யங்கார் 1897–1898 (பொறுப்பு)
- சார்லஸ் அர்னால்ட் வைட் 1898-1899 (பின்னர் மதராஸ் தலைமை நீதிபதி, 1899)
- வி. பஷ்யம் அயங்கர் 1899-1900 (பொறுப்பு)
- ஜான் எட்வர்ட் பவர் வாலிஸ் 1900-1906 (பின்னர் மதராஸ் தலைமை நீதிபதி, 1914)
- சி. சங்கரன் நாயர் 1906-1907
- பி. எஸ். சிவசுவாமி ஐயர் 1907-1912
- எஸ். ஸ்ரீனிவாச ஐயங்கார் 1912-1920
- சே. ப. இராமசுவாமி 1920-1923
- சி. மாதவன் நாயர் 1923-1924
- டி. ஆர். வெங்கடராம சாஸ்திரி 1924-1928
- அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் 1929-1944
- பி. வி. ராஜமன்னார் 1944-1945 (பின்னர் மதராஸ் தலைமை நீதிபதி, 1948)
- கே. ராஜா ஐயர் 1945-1950
சென்னை மாநிலம்
- வி. கே. திருவேங்கடாச்சாரி 1950 - 1964
- என். கிருஷ்ணசாமி ரெட்டி 1964 - 1966
- மோகன் குமாரமங்கலம் 1966 - 1967
தமிழ்நாடு
- கோவிந்த சுவாமிநாதன் 1967 - 1976
- கே. பராசரன் 1976 - 1977
- வி. பி. இராமன் 1977 - 1979
- ஆர். கிருஷ்ணமூர்த்தி 1980 - 1989
- கே. சுப்பிரமணியம் 1991 - 1994
- ஆர். கிருஷ்ணமூர்த்தி 1994 - 1996
- கே. வி. வெங்கடபதி 1996 - 2001
- என். ஆர். சந்திரன் 2001 - 2006
- ஆர். விடுதலை 2006 - 2007
- ஜி. மாசிலமணி 2007 - 2009
- பி. எஸ். இராமன் 2009 - 2011
- ஏ. நவநீதகிருஷ்ணன் 2011 - 2013
- ஏ. எல். சோமயாஜி 2013 - 2016
- ஆர். முத்துக்குமாரசாமி 2016-2017
- விஜய் நாராயண் 2017-2021
- ஆர். சண்முகசுந்தரம் 2021-