தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்

(தமிழ் நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்[1]மாநில அரசின் அதிகாரங்கள் அதன் உள் அமைப்புகளுக்கும் சென்று சேரவேண்டும் என்ற நோக்கத்தில் இந்திய அரசியல் திருத்தச் சட்டம் 1992, 73 மற்றும் 74 விதிகளின் கீழ்[1] இந்த தேர்தல் ஆணையம் தமிழகத்தில் உருவாக்கப்பட்டது.

இத்திருத்தச் சட்டத்தின்படி தேர்தல் ஆணையம் உருவாக்கும் விதமாக தமிழ்நாடு அரசு தமிழ்நாடு ஊராட்சி மன்றச் சட்டம் , 1994 என்ற சட்டத்தின் மூலம் ஏற்கனவே நடைமுறையில் இருந்த ஊராட்சி மன்றச் சட்டம், 1958, மாற்றும் விதமாக கொண்டுவரப்பட்டு அதை அமல் படுத்தியது.

உள்ளாட்சி மற்றும் நகராட்சித் தேர்தல்கள் இத்தேர்தல் ஆணையத்தின் மேற்பார்வையிலேயே நடத்தப்பெறுகின்றன.

இதன் காரணமாக தமிழகத்தில் 2001[1] இல் உள்ளாட்சித் தேர்தல்கள் இத்தேர்தல் ஆணையத்தால் வெற்றிகரமாக நடத்தப் பெற்றது.

தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையராக திரு பழனி குமார் பணியாற்றி வருகிறார்.[2]

ஆணையத்தின் கட்டமைப்பு

சென்னை, கோயம்பேடு,ஜவகர்லால் நேரு(100 அடி சாலை) சாலையில் அமைந்துள்ள தமிழகத் தேர்தல் ஆணையம்-முன் தோற்றம்

மாநிலத் தேர்தல் ஆணையம் இந்திய அரசியலமைப்பின் கீழ்வரும் விதி 243 கே சட்டப்படித் தேவையான பிரிவான 239 ன் கீழ் தமிழ் நாடு ஊராட்சி (பஞ்சாயத்து) சட்ட செயல், 1994 ன் படி யும் மற்றும் பொறுத்தமான பிரிவுகளின் கீழ்வரும் அனைத்து சட்ட செயல்களின் படி நகர உள் அமைப்புகளுக்காக ஏற்படுத்தப்பட்டது.

தமிழ் நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் ஒரு சுதந்திரமான தன்னாட்சிப் பெற்ற அரசியலைமைப்பு அமைப்பாக இந்திய அரசியல் அமைப்பு 73 மற்றும் 74 வது திருத்த செயல் 1992 ன் படி அளித்துள்ள உரிமையின் படி செயலாட்சி புரிய அதன் ஆணையருக்கு அதிகாரம் அளித்துள்ளது.

இந்திய அரசியலமைப்பு விதி 243 கே அதன் விதி 243-இசட் ஏ வோடு சேர்த்து படிக்கும் காண், அனைத்து ஊராட்சிகளுக்கும் (பஞ்சாயத்து), மற்றும் நகர உள் அமைப்புகளுக்கும் தேர்தல் நடத்த, வழி காட்ட மற்றும் கட்டுப்படுத்த அதற்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தன் முதல் செயல்பாட்டைத் துவக்கிய நாள்- ஜூலை 15, 1994.

இதன் தற்போதைய (2023) தலைமை ஆணையர் வெ. பழனி்குமார் ஆவார்.[3]

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்