தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருத்துவமனை, அயனாவரம்

தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருத்துவமனை என்பது தமிழ்நாடு மாநிலத்தில்[2] சென்னை[3] மாவட்டத்தின் அயனாவரம் புறநகர்ப் பகுதியில்[4] அமையப் பெற்றுள்ள ஓர் அரசு பல்நோக்கு மருத்துவமனை ஆகும்.

தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருத்துவமனை, அயனாவரம்
அமைவிடம்அயனாவரம், சென்னை, தமிழ்நாடு, இந்தியா
ஆள்கூறுகள்13°05′42″N 80°14′21″E / 13.0949°N 80.2391°E / 13.0949; 80.2391
மருத்துவப்பணிபொது மருத்துவம்[1]
வகைமுழு சேவை மருத்துவ மையம்
பட்டியல்கள்

மாத ஊதியம் ரூ.15,000க்கும் குறைவாகப் பெறும் நிறுவன ஊழியர்கள் அரசு ஈட்டுறுதி மருத்துவமனைகளில் சிகிச்சை பெறத் தகுதியுடையவர்கள்.[5] சென்னையிலுள்ள இரண்டு அரசு ஈட்டுறுதி மருத்துவமனைகளில் ஒன்று அயனாவரம் பகுதியில் இயங்குகிறது. மற்றொன்று கே. கே. நகர் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ளது.[6][7]

அமைவிடம்

கடல் மட்டத்திலிருந்து சுமார் 31.8 மீட்டர்கள் (104 அடி) உயரத்தில், (13°05′42″N 80°14′21″E / 13.0949°N 80.2391°E / 13.0949; 80.2391) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு அயனாவரம் பகுதியில் மேடவாக்கம் குளச் சாலையில்[8] இம்மருத்துவமனை அமைந்துள்ளது.

விபரங்கள்

இருதய சிகிச்சை, நரம்பியல், மகப்பேறு மருத்துவம், எலும்பியல், காது மூக்கு தொண்டை நிபுணத்துவம், கண் மருத்துவம், உடற்பயிற்சி சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை ஆகியவை இம்மருத்துவமனையின் சிறப்பு அம்சங்களாகும். இரத்த வங்கி சேவைகளும் இங்கு உண்டு. இம்மருத்துவமனையின் கீழ் தளத்தில் மருந்துகள் வழங்கும் பகுதி உள்ளது. குறிப்பிட்ட நேரக் கட்டுப்பாடுகளுடன் வெளி நோயாளிகள் பிரிவும் இங்கு இயங்குகிறது.

பல் சம்பந்தமான நோய்களைக் குணப்படுத்தும் மருத்துவத் துறையும் இங்கு உள்ளது.[9]

உசாத்துணைகள்

வெளி இணைப்புகள்

[1]

[2]

[3]

[4]

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்