பக்மின்ஸ்டர்ஃபுலரின்

பக்மின்ஸ்டர்ஃபுலரின் என்பது C60ஐ வாய்ப்பாடாகக் கொண்ட ஒரு புலரின் சேர்மம் ஆகும். இதன் மூலக்கூறு ஒரு காற்பந்தைப் போன்ற கூண்டாகத் தோற்றமளிக்கும். இம்மூலக்கூறில் இருபது அறுகோணிகளும் பன்னிரண்டு ஐங்கோணிகளும் இருக்கும். இவற்றின் மூலைகளில் ஒவ்வொரு கார்பன் அணு காணப்படும். இதனை ஹரோல்ட் குரோடோ, ஜேம்ஸ்.ஆர்.ஹீத், சீன் ஓ பிரையன், ரொபர்ட் கேர்ல் மற்றும் ரிச்சர்ட் ஸ்மல்லி ஆகியோர் 1985 ஆம் ஆண்டு ரைஸ் பல்கலைக்கழகத்தில் உருவாக்கினர். இதற்காக குரோடோ, கேர்ல் மற்றும் ஸ்மல்லி ஆகியோருக்கு 1996ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு கிடைத்தது. இதுவே இயற்கையில் அதிகமாகக் காணப்படும் புலரீன் மூலக்கூறாகும். ஏனெனில் இதனை அடுப்புக் கரியில் அவதானிக்க முடியும். இதன் கண்டறிதலானது வேதியியலில் புலரின் பற்றிய ஆய்வுகளுக்கு வித்திட்டது.

பக்மின்ஸ்டர்ஃபுலரின்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
(C60-Ih)[5,6]fullerene
வேறு பெயர்கள்
பக்கிபால்; புலரீன்-C60; [60]புலரீன்
இனங்காட்டிகள்
99685-96-8 Y
Beilstein Reference
5901022
ChEBICHEBI:33128 Y
ChemSpider110185 Y
InChI
  • InChI=1S/C60/c1-2-5-6-3(1)8-12-10-4(1)9-11-7(2)17-21-13(5)23-24-14(6)22-18(8)28-20(12)30-26-16(10)15(9)25-29-19(11)27(17)37-41-31(21)33(23)43-44-34(24)32(22)42-38(28)48-40(30)46-36(26)35(25)45-39(29)47(37)55-49(41)51(43)57-52(44)50(42)56(48)59-54(46)53(45)58(55)60(57)59 Y
    Key: XMWRBQBLMFGWIX-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C60/c1-2-5-6-3(1)8-12-10-4(1)9-11-7(2)17-21-13(5)23-24-14(6)22-18(8)28-20(12)30-26-16(10)15(9)25-29-19(11)27(17)37-41-31(21)33(23)43-44-34(24)32(22)42-38(28)48-40(30)46-36(26)35(25)45-39(29)47(37)55-49(41)51(43)57-52(44)50(42)56(48)59-54(46)53(45)58(55)60(57)59
    Key: XMWRBQBLMFGWIX-UHFFFAOYAU
  • InChI=1S/C60/c1-2-5-6-3(1)8-12-10-4(1)9-11-7(2)17-21-13(5)23-24-14(6)22-18(8)28-20(12)30-26-16(10)15(9)25-29-19(11)27(17)37-41-31(21)33(23)43-44-34(24)32(22)42-38(28)48-40(30)46-36(26)35(25)45-39(29)47(37)55-49(41)51(43)57-52(44)50(42)56(48)59-54(46)53(45)58(55)60(57)59
    Key: XMWRBQBLMFGWIX-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள்Image
பப்கெம்123591
  • c12c3c4c5c1c6c7c8c2c9c1c3c2c3c4c4c%10c5c5c6c6c7c7c%11c8c9c8c9c1c2c1c2c3c4c3c4c%10c5c5c6c6c7c7c%11c8c8c9c1c1c2c3c2c4c5c6c3c7c8c1c23
பண்புகள்
C60
வாய்ப்பாட்டு எடை720.66 g·mol−1
தோற்றம்கருமையான ஊசி போன்ற படிகங்கள்
அடர்த்தி1.65 g/cm3
உருகுநிலைsublimates at ~600 °C[1]
நீரில் கரையாது
கட்டமைப்பு
படிக அமைப்புFace-centered cubic, cF1924
புறவெளித் தொகுதிFm3m, No. 225
Lattice constanta = 0.14154 nm
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

பெயரீடு

இதன் பெயரானது கண்டுபிடிப்பாளரும் எதிர்காலத்தைப் பற்றி விவரிப்பவருமான பக்மின்ஸ்டர் புலருக்கு கௌரவம் அளிக்கும் முகமாக இடப்பட்டுள்ளது.

உருவாக்கல்

1990ஆம் ஆண்டு W.கிராட்ச்மர் மற்றும் D. R. ஹஃப்மான் ஆகியோர் பெருமளவில் பக்மின்ஸ்டர்ஃபுலரினை உருவாக்கும் முறையைக் கண்டுபிடித்தனர்; இதனால் கிலோகிராம் அளவுகளிலும் இதனை உருவாக்க முடிந்தது. ஹீலிய வாயுச் சுற்றுச்சூழலில் தூய காரீய மின்முனைகள் மூலம் பெறப்படும் கரியிலிருந்து இம்முறை மூலம் பக்மின்ஸ்டர்ஃபுலரின் உருவாக்கப்பட்டது. இவ்வாறு பெறப்படும் கரியை கரிம சேர்வையில் கலக்கும் போது 75% C60 ஐப் பெற முடியும்.

பயன்பாடு

C60 திண்மம்
  • பக்மின்ஸ்டர்ஃபுலரின் மூலக்கூற்றுடன் அதிகளவான ஐதரசன் மூலக்கூறுகளை இணைக்க முடியும். இதனால் ஐதரசன் எரிபொருளில் இதனைப் பயன்படுத்தக் கூடிய சாத்தியக் கூறு உள்ளது.
  • இது HIV எனப்படும் எயிட்ஸ் நோயை உண்டாக்கும் தீ நுண்மத்தின் ஒரு நொதியமான HIV-1 புரோடீஸின் தொழிற்பாட்டைத் தடுக்கக் கூடியது. இதனால் இது மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகின்றது.

மேற்கோள்கள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்