பிலிப் எர்பெர்ட் கோவெல்

கண்டுபிடித்த சிறுகோள்கள்: 1 [1]
4358 இலின்5 அக்தோபர் 1909MPC

பிலிப் எர்பெர்ட் கோவெல் (Philip Herbert Cowell) [2] (1870 – 1949) ஒரு பிரித்தானிய வானியலாளரும் அரசு கழக ஆய்வுறுப்பினரும் ஆவார்.[3][4][5]

இவர் இந்தியாவின் கொல்கத்தா நகரத்தில் 1870 ஆகத்து 7 இல் பிறந்தார். இவர் ஈட்டன் கல்லூரியிலும் கேம்பிரிட்ஜ் டிரினிட்டி கல்லூரியிலும் கல்வி பயின்றுள்ளார்.[6] இவர் 1896 இல் அரசு கிரீன்விச் வான்காணகத்தில் துணை முதன்மை உதவியாளரானார். பின்னர், இவர் 1910 இலிருந்து 1930 வரை எச். எம். நாவாய் வழிகாட்டு அட்டவணை அலுவலகத்தின் கண்காணிப்பாளராக ஆனார். இவர் வான்பொருள் இயக்கவியலில் குறிப்பாக, சிறுகோள், வால்வெள்ளி வட்டணை இயக்கத்தில் சிறப்புப் புலமை பெற்றார். இவர் நிலா இருப்பு பற்றிய கோட்பாட்டு, நோக்கீட்டுக் குழறுபடிகளை ஆழமாக ஆய்வு செய்தார்.

கோவெல் 1896 பிப்ரவரி 14 இல் அரசு வானியல் கழக ஆய்வுறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[7] இவர் 1897 அக்தோபர் 27 இல் பிரித்தானிய வானியல் கழக உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[8] இவர் 1906 மே 3 இல் அரசு கழக ஆய்வுறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][9] கோவெல் 1911 இல் அரசு வானியல் கழகப் பதககத்தினய்ப் பெற்றார்.

இவர்1909 இல் 4358 இலின் எனும் 10-கிலோமீட்டர் அளவுள்ள முதன்மைப் பட்டைச் சிறுகோளையும் இயூனோமியா உறுப்புப் பொருளையும் கண்டுபிடித்தார்.[10][11]

இவர்களுடைய ஆல்லே வால்வெள்ளி ஆய்வுக்காக 1910 இல் கோவெல்லும் d ஆந்திரூ கிளாடி தெ லா செரூ குரோம்மெலினும் இணைந்து பிரிக்சு யூல்சு ஜான்சன் எனும் பிரெஞ்சு வானிய்ல் கழகத்தின் மிக உயர்ந்த விருதையும் வானியல் நிறுவனத்தின் இலிண்டுமன் பரிசையும் பெற்றனர்.[12][13]

இவர் 1949 ஜூன் 6 இல் சப்போக்கில் உள்ள ஆல்டெபர்கில் இறந்தார். முதன்மைப் பட்டை 1898 கோவெல் சிறுகோள் இவரது நினைவாகப் பெயரிடப்பட்டது.[14]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்