புரோப்பைல் குழு

புரோப்பைல் குழு (propyl group) என்பது புரோப்பேனிலிருந்து (C3H8) தருவிக்கப்பட்ட ஒரு மூன்று கார்பன் ஆல்கைல் பதிலி ஆகும். இதன் மூலக்கூற்று வாய்ப்பாடு –CH2CH2CH3 ஆகும். பெரும்பாலும் இதை Pr என்று சுருக்கி அழைப்பார்கள். தனிமம் பிரசியோடைமியத்திற்கும் இதுதான் குறியீடு என்பதை கவனித்தில் கொள்ள வேண்டும். புரோப்பேனிலிருந்து விளிம்பு நிலையிலுள்ள ஒரு ஐதரசன் அணுவை நீக்குவதால் புரோபைல் குழு கிடைக்கிறது [1].

இடமிருந்து வலமாக : புரோப்பைல் குழுவின் இரண்டு மாற்றிய வடிவங்களான புரோப்பைல் மற்றும் 1-மெத்திலெத்தில் (ஐசோபுரோப்பைல்), மற்றும் மூன்றாவதான வளையபுரோப்பைல் குழு

புரோப்பேனின் விளிம்புநிலை கார்பனுக்குப் பதிலாக மைய கார்பன் அணுவின் ஐதரசன் அணுவை நீக்கம் செய்வதால் புரோபைல் குழுவின் மாற்றிய வடிவத்தைப் பெறலாம். இம்மாற்றிய வடிவத்தை 1-மெத்திலெத்தில் அல்லது ஐசோபுரோபைல் என்ற பெயரால் அழைப்பர். ஒவ்வொரு கார்பன் அணுவுக்கும் ஒரு பதிலியென நான்கு பதிலிகளை இடம்பெறச் செய்ய மைய கார்பன் அணுவுடனுள்ள ஐதரசன் அணு என்-புரோபைல் குழுவின் சேர்விட கார்பன் அணுவுக்கு நகர்கிறது. இது –CH(CH3)2 என்ற அமைப்பு வாய்ப்பாட்டால் குறிப்பிடப்படுகிறது [2].

நேர்கோட்டு புரோப்பைல் முன்னொட்டு ’என்’ சேர்க்கப்பட்டு என்–புரோபைல் என்று அழைக்கப்படுகிறது. என் முன்னொட்டு குறிக்கப்படாமல் இருந்தால், அங்குள்ள எந்த கார்பனின் ஐதரசன் அணு நீக்கப்பட்டது என்பதை அறியமுடியாது. அதாவது தன்னிச்சையாக அது ஒர் ஐசோபுரோபைலாக இருக்கலாம் என்று கருதிவிடமுடியாது [3]. கூடுதலாக வளைய புரோபைல் என்ற மூன்றவது புரோபைல் குழுவையும் கூற முடியும். இது மற்ற இரண்டு வடிவங்களின் மாற்றியம் கிடையாது. இதனுடைய மூலக்கூறு வய்ப்பாடு -C3H5 ஆகும்.

உதாரணங்கள்

என்-புரோபைல் அசிட்டேட்டு என்பது ஓர் எசுத்தர் ஆகும். இதைல் புரோபைல் குழு மைய ஆக்சிசன் அணுவுடன் இணைந்துள்ளது.

புரோபைல் அசிட்டேட்டின் வேதிக் கட்டமைப்பு.

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=புரோப்பைல்_குழு&oldid=3564239" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்