மலேசிய சுங்கத் துறை

மலேசிய சுங்கத் துறை அல்லது அரச மலேசிய சுங்கத் துறை (மலாய்: Jabatan Kastam Diraja Malaysia (JKDM); ஆங்கிலம்: Royal Malaysian Customs Department; (RMC); சீனம்: 马来西亚皇家关税局) என்பது மலேசிய நிதி அமைச்சின் கீழ் இயங்கும் ஓர் அரசு துறை அமைப்பாகும்.

மலேசிய சுங்கத் துறை
Royal Malaysian Customs Department
Jabatan Kastam Diraja Malaysia
மலேசிய சுங்கத் துறையின் சின்னம்
மலேசிய சுங்கத் துறையின் சின்னம்
துறையின் கண்ணோட்டம்
உருவாக்கம்1931
முந்தைய துறைகள்
  • சுங்கத் துறை ஒன்றியம்
    (Customs Union)
  • நீரிணைக் குடியேற்ற சுங்கம் கலால் துறை
    (Straits Settlement Customs and Excise Department)
  • மலாயா கூட்டமைப்பு மாநிலங்களின் சுங்க மற்றும் கலால் துறை
    (Federated Malay States Customs and Excise Department)
  • அரச மலேசிய சுங்கம் மற்றும் கலால்
    (Royal Malaysian Customs and Excise)
  • அரச மலேசிய சுங்கம் மற்றும் கலால் துறை
    (Royal Malaysian Customs and Excise Department)
அதிகார வரம்பு அமைப்பு
தேசிய நிலை
(செயல்பாட்டு எல்லை)
மலேசியா
செயல்பாட்டு அதிகார வரம்புமலேசியா
சட்ட அதிகார வரம்புதேசிய நிலை
ஆட்சிக் குழுமலேசிய அரசாங்கம்
செயல்பாட்டு அமைப்பு
தலைமையகம் மலேசியா புத்ராஜெயா
அமைச்சர்s
துறை நிருவாகி
  • சசுலி சொகான், தலைமை இயக்குநர்
அமைச்சுமலேசிய நிதி அமைச்சு
இணையத்தளம்
www.customs.gov.my

மலேசிய நாட்டில் வரி வசூலிக்கப் படுவதில் (Indirect Tax Collector) முக்கிய அமைப்பாகச் செயல்படுகிறது. அத்துடன் வரிகள் தொடர்பான வணிகச் சட்டங்களை அமல்படுத்துவதிலும் (Enforcing Trade Laws); அந்தச் சட்டங்களைச் செயல் படுத்துவதிலும்; தலையாயத் துறையாக விளங்குகிறது.

வரலாறு

மலாக்கா சுல்தானகம் (Malacca Sultanate) மற்றும் ஜொகூர்-ரியாவ் சுல்தானகம் (Johor Riau Sultanate) ஆகிய சுல்தானகங்கள் உச்சக் கட்டத்தில் இருந்த போதே மலாயாவில் வரி நிர்வாக அமைப்பும் இருந்தது. மலாக்கா சுல்தானகத்தின் காலத்தில், வெளிநாட்டு மற்றும் உள்ளூர் வணிகர்களை உள்ளடக்கிய வரிச் சட்டங்களுடன்; கடல் துறைமுகச் சட்டங்களும் (Maritime and Harbour Laws) இருந்தன.[1]

அந்தக் காலக் கட்டத்தில் வரி வசூலிப்பதும் மற்றும் அனைத்து வரி தொடர்பான விசயங்களுக்கும் கருவூலத் தலைவர் (Penghulu Bendahari) பொறுப்பு வகித்தார்.[2]

தலைமை இயக்குநர்

அரச மலேசிய சுங்கத் துறையின் உயர் நிர்வாகமானது சுங்கத் தலைமை இயக்குநரால் (Director General of Customs) வழிநடத்தப் படுகிறது. அவருக்கு 3 துணைத் தலைமை இயக்குநர்கள் உதவுகிறார்கள்.

  • துணைத் தலைமை இயக்குநர் - அமலாக்கப் பிரிவு
    • (Deputy Director General of Customs Enforcement Division)
  • துணைத் தலைமை இயக்குநர் - உள்நாட்டு வரி பிரிவு
    • (Deputy Director General of Customs /Inland Tax Division)
  • துணை முதன்மை இயக்குநர் - மேலாண்மை பிரிவு
    • (Deputy Chief Director of Customs Management Division)

துறைப் பிரிவுகள்

  • அமலாக்கப் பிரிவு
    • (Enforcement Division)
  • உள்நாட்டு வரிப் பிரிவு
    • (Inland Tax Division)
  • தகவிணக்கப் பிரிவு
    • (Compliance Division)
  • சுங்கப் பிரிவு
    • (Customs Division)
  • தொழில்நுட்பப் பிரிவு
    • (Technical Services Division)

பொறுப்புகள்

  • இறக்குமதி வரி, ஏற்றுமதி வரி, கலால் வரி, விற்பனை வரி, சேவை வரி, அசாதாரண இலாப வரி, வாகனங்கள் வரி, புறப்பாடு வரி, வருவாய் இல்லா வரி, மாநிலங்களின் வருவாய், அறக்கட்டளை வரி, சுற்றுலா வரி ஆகியவற்றை உள்ளடக்கிய வரி மற்றும் சுங்க வரி வடிவிலான வருவாயைச் சேகரிப்பது;
  • தொழில்துறை மற்றும் வணிகத் துறைகளுக்கு ஊக்குவிப்பு வழங்குதல்; மற்றும் வர்த்தக வசதிகளை வழங்குதல்; இவை வருவாய் ஈட்டுவதை நோக்கமாகக் கொண்டவை;
  • சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை அமல்படுத்துதல்

மேற்கோள்கள்

மேலும் காண்க

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்