வல்வெட்டித்துறை நகரசபை

வல்வெட்டித்துறை நகரசபை (Valvettithurai Urban Council, வல்வெட்டித்துறை நகராட்சி மன்றம்) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள வல்வெட்டித்துறை நகரப்பகுதிக்கு உரிய உள்ளூராட்சிச் சபை ஆகும். இந்த நகரசபையின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிக்குள் வீதிகள், சுகாதாரம், வடிகால்கள், வீடமைப்பு, நூலகங்கள், பொதுப் பூங்காக்கள், பொழுதுபோக்கு வசதிகள் போன்ற வசதிகளை வழங்குவதற்கு இச்சபை பொறுப்பாக உள்ளது. இந்த நகரசபைப் பகுதி 9 வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முன்னர் ஒவ்வொரு வட்டாரத்துக்கும் தனித்தனியாகப் பிரதிநிதிகள் தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்டனர். விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் கட்சிகள் சமர்ப்பிக்கும் பட்டியலில் இருந்து அக்கட்சிகள் பெறும் வாக்குகளின் விகிதாசாரத்தின் அடிப்படையில் பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்படுவர்.

வல்வெட்டித்துறை நகர சபை
வகை
வகை
உள்ளூராட்சி
தலைமை
தலைவர்
நடராசா ஆனந்தராஜ், த. தே. கூ
யூலை 2011 முதல்
துணைத் தலைவர்
உறுப்பினர்கள்9
தேர்தல்கள்
அண்மைய தேர்தல்
இலங்கை உள்ளூராட்சித் தேர்தல்கள், 2011
வலைத்தளம்
valvaicouncil.com

தேர்தல் முடிவுகள்

1983 உள்ளூராட்சித் தேர்தல்

1983 மே 18 இல் நடந்த உள்ளூராட்சித் தேர்தல்களில் வல்வெட்டித்துறை நகரசபைக்கான முடிவுகள்::[1]

கூட்டணிகளும் கட்சிகளும்வாக்குகள்%இடங்கள்
 தமிழர் விடுதலைக் கூட்டணி17394.02%9
 அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்73.80%0
 ஐக்கிய தேசியக் கட்சி42.17%0
செல்லுபடியான வாக்குகள்184100.00%9
செல்லாத வாக்குகள்0
பதிவான மொத்த வாக்குகள்184
பதிவு செய்த வாக்காளர்கள்8,954
பதிவு செய்த வாக்காளர்கள்2.05%

1998 உள்ளூராட்சித் தேர்தல்

1998 சனவரி 29 இல் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல்களில் வல்வெட்டித்துறை நகரசபைக்கான முடிவுகள்:[2][3]

கூட்டணிகளும் கட்சிகளும்வாக்குகள்%இடங்கள்
 தமிழீழ விடுதலை இயக்கம்73660.13%6
 ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி28323.12%2
 சனநாயக மக்கள் விடுதலை முன்னணி (PLOTE)15112.34%1
 ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி544.41%0
செல்லுபடியான வாக்குகள்1,224100.00%9
செல்லாத வாக்குகள்255
பதிவான மொத்த வாக்குகள்1,479
பதிவு செய்த வாக்காளர்கள்11,128
பதிவு செய்த வாக்காளர்கள்13.29%

2011 உள்ளூராட்சித் தேர்தல்கள்

23 யூலை 2011 அன்று இடம்பெற்ற தேர்தல் முடிவுகள்:[4]

கூட்டணிகளும் கட்சிகளும்வாக்குகள்%இடங்கள்
 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு2,41676.36%7
 ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி65320.64%2
 ஐக்கிய தேசியக் கட்சி932.94%0
சுயேச்சை20.06%0
செல்லுபடியான வாக்குகள்3,164100.00%9
செல்லாத வாக்குகள்230
பதிவான மொத்த வாக்குகள்3,394
பதிவில் உள்ள வாக்காளர்கள்5,550
வாக்களித்தோர்61.15%

2018 உள்ளூராட்சித் தேர்தல்கள்

10 பெப்ரவரி 2018 அன்று இடம்பெற்ற தேர்தல் முடிவுகள்:[5]

கூட்டணிகளும் கட்சிகளும்வாக்குகள்%இடங்கள்
 இலங்கைத் தமிழரசுக் கட்சி1,32231.70%7
சுயேச்சைக் குழு106925.64%4
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்65915.80%2
 ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி61914.84%2
 சிறீ லங்கா சுதந்திரக் கட்சி2305.52%1
தமிழர் விடுதலைக் கூட்டணி1874.48%1
 ஐக்கிய தேசியக் கட்சி842.01%0
செல்லுபடியான வாக்குகள்4,170100.00%19
செல்லாத வாக்குகள்42
பதிவான மொத்த வாக்குகள்4,212
பதிவில் உள்ள வாக்காளர்கள்6,055
வாக்களித்தோர்69.56%

மேற்கோள்கள்

இவற்றையும் பார்க்கவும்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்