சென்னெத்ஜெம்

பண்டைக்கால எகிப்திய அரசவைக் கலைஞர்

சென்னெத்ஜெம் (Sennedjem) பண்டைய எகிப்தின் புது எகிப்திய இராச்சியத்தை ஆண்ட 19-ஆம் வம்சத்தின் பார்வோன்களான (கிமு 1290 – 1279) முதலாம் சேத்தி மற்றும் இரண்டாம் ராமேசஸ் (கிமு 1279 – 1213) ஆகியோர்களின்ஆட்சிக் காலத்தில் வாழ்ந்த அரசவைக் கலைஞர் ஆவார். இவர் தீபை நகரத்தில் பாயும் நைல் நதியின் மேற்கு கரையில் அமைந்த தேர் அல்-மதினா எனும் நகரத்தில் வாழ்ந்தவர். இவருக்கு வாய்மையின் காவலர் என்ற அரசவைப் பட்டம் உள்ளது.[2]

சென்னெத்ஜெம் மம்மியின் மரண முகமூடி [1]
T23
N35
M29Aa15
Y1
சென்னெத்ஜெம்
படவெழுத்து முறையில்

இவரது மம்மியுடன், இவரது குடும்பத்த்னரின் மம்மிகளும் 31 சனவரி 1886 அன்று தீபை நகரத்திற்கு அருகில் உள்ள தேர் அல்-மதினாவின் ஒரு கல்லறையில் கண்டுபிடிக்கப்பட்டது.[3] இவரது கல்லறையில், இவர் உயிருடன் வாழ்ந்த காலத்தில் பயன்படுத்திய நாற்காலி, மேஜை, கட்டில் போன்ற தளவாடங்கள் இருந்தது.[4]

மன்னர்களின் சமவெளியில் கண்டுபிடிக்கப்பட்ட எகிப்திய அரசவைப் பணியாளரான சென்னெத்ஜெம்மின் நினைவு உசாப்தி தற்போது சான் பிரான்ஸ்சிஸ்கோ கலைகள் அருகாட்சியகத்தில் உள்ளது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சென்னெத்ஜெம்&oldid=3497802" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்