ஆசியத் துடுப்பாட்ட அவை

ஆசியத் துடுப்பாட்டு வாரியம் (Asian Cricket Council; ACC) என்பது ஆசியாவில் துடுபாட்டத்தை மேம்படுத்த 1983 இல் தொடங்கப்பட்ட ஒரு துடுப்பாட்ட அமைப்பாகும். பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் கீழ் இயங்கும் இந்த அமைப்பு ஆசியக் கண்டத்தின் பிராந்திய நிர்வாக அமைப்பாகும். இதில் தற்போது 24 உறுப்பு நாடுகளின் துடுப்பாட்ட வாரியங்கள் அங்கத்துவம் பெற்றுள்ளன. ஜெய் சா இதன் தற்போதைய தலைவராக உள்ளார்.[1][2]

ஆசியத் துடுப்பாட்ட அவை
Asian Cricket Council
சுருக்கம்ACC
உருவாக்கம்19 செப்டம்பர் 1983 (1983-09-19)
நோக்கம்துடுப்பாட்ட நிருவாகம்
தலைமையகம்கொழும்பு, இலங்கை
உறுப்பினர்கள்
25 அவைகள்
ஆட்சி மொழிகள்
ஆங்கிலம்
தலைவர்
இந்தியா ஜெய் சா
துணைத் தலைவர்
ஓமான் பங்கச் கிம்சி
தாய் அமைப்பு
பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை
வலைத்தளம்www.asiancricket.org

வரலாறு

1983 செப்டம்பர் 19 இல் புதுதில்லியில் இந்த அமைப்பு ஆசிய துடுப்பாட்ட மாநாடு என்ற பெயரில் தொடங்கப்பட்டது. இதன் ஆரம்பகால உறுப்பினர்கள் வங்காளதேசம், இந்தியா, மலேசியா, பாக்கித்தான், சிங்கப்பூர், இலங்கை ஆகியயாகும். 1995 இல் இதன் பெயர் ஆசியத் துடுப்பாட்ட அவை என மாற்றப்பட்டது. 2003 வரை, இதன் தலைமையகம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அவையின் தலைவர்கள், செயலாளர்களின் சொந்த நாடுகளில் சுழற்சி முறையில் இருந்து வந்தது. இந்த அமைப்பின் தற்போதைய தலைவர் ஜெய் சா, இவர் இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியத்தின் செயலாளராகவும் உள்ளார்.

ஆசியக் கிண்ணம், ஆசியத் தேர்வு வாகை, ஏசிசி கிண்ணம், மற்றும் பல்வேறு போட்டிகள் உட்பட அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட போட்டிகளின் போது சேகரிக்கப்படும் தொலைக்காட்சி வருவாயில் இருந்து கிடைக்கப்பெறும் நிதியுதவி, அவையின் உறுப்பினர் நாடுகளில் பயிற்சி, நடுவர் தெரிவு மற்றும் விளையாட்டு மருத்துவ திட்டங்களை ஆதரிக்கும் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு செலவழிக்கப்படுகிறது.

ஆசியத் துடுப்பாட அவையின் தற்போதைய தலைமையகம் இலங்கையின் கொழும்பில் 2017 ஆகத்து 20 இல் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டது.[3]

உறுப்பினர்கள்

ஆசியத் துடுப்பாட்ட அவையின் உறுப்பினர் சங்கங்கள் முழுமையான மற்றும் இணை உறுப்பினர்கள் என இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன: பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையில் முழுமையான உறுப்ப்புரிமை உள்ளோருக்கு "முழு உறுப்பினர் தகுநிலை" வழங்கப்பட்டுள்ளது. அதே வேளையில் பன்னாட்டு அவையில் இணை உறுப்பினர்களாக உள்ளோருக்கும், பன்னாட்டு அவையில் உறுப்பினர்களல்லாதோருக்கும் (கம்போடியா, தைவான், 2021 இல்) "இணை உறுப்பினர் தகுநிலை" வழங்கப்பட்டுள்ளது.[4] பிஜி, சப்பான், பப்புவா நியூ கினி ஆகியவை முன்பு ஆசிய அவையில் உறுப்பினர்களாக இருந்தன, ஆனால் 1996 இல் நிறுவப்பட்டபோது கிழக்காசிய-பசிபிக் பிராந்தியப் பேரவை தொடங்கியபோது, இந்த அவையில் இணைந்தன.[5]

முழு உறுப்புரிமை நாடுகள்

ஆசியத் துடுப்பாட்ட அவையின் தற்போதைய உறுப்பினர்கள்
இல.நாடுஅவைஐசிசி உறுப்புரிமை
(ஒப்புதல் நாள்)
ஐசிசி
உறுப்புரிமை
ஏசிசி
உறுப்புரிமை
1  இந்தியாஇந்திய வாரியம்முழு (31 மே 1926)19261983
2  பாக்கித்தான்பாக்கித்தான் வாரியம்முழு (28 சூலை 1952)19521983
3  இலங்கைஇலங்கை வாரியம்முழு (21 சூலை 1981)19651983
4  வங்காளதேசம்வங்காளதேச வாரியம்முழு (26 சூன் 2000)19771983
5  ஆப்கானித்தான்ஆப்கானித்தான் வாரியம்முழு (22 சூன் 2017)20012003

துணைநிலை உறுப்பினர்கள் (ஒநாப, இ20ப தகுநிலையுடன்)

ஆசியத் துடுப்பாட்ட அவையின் தற்போதைய துணைநிலை உறுப்பினர்கள்
இல.நாடுஐசிசி உறுப்புரிமைஐசிசி
உறுப்புரிமை
ஏசிசி
உறுப்புரிமை
1  ஆங்காங்துணைநிலை19691983
2  நேபாளம்துணைநிலை19961990
3  ஓமான்துணைநிலை20002000
4  ஐக்கிய அரபு அமீரகம்துணைநிலை19901984

துணைநிலை உறுப்பினர்கள் (இ20ப தகுநிலையுடன்)

ஆசியத் துடுப்பாட்ட அவையின் தற்போதைய உறுப்பினர்கள்
இல.நாடுஐசிசி உறுப்புரிமைஐசிசி
உறுப்புரிமை
ஏசிசி
உறுப்புரிமை
1  பகுரைன்துணைநிலை20012003
2  பூட்டான்துணைநிலை20012001
3  சீனாதுணைநிலை20042004
4  ஈரான்துணைநிலை20032003
5  குவைத்துணைநிலை20032005
6  மலேசியாதுணைநிலை19671983
7  மாலைத்தீவுகள்துணைநிலை19981996
8  மங்கோலியாதுணைநிலை2021N/A
9  மியான்மர்துணைநிலை20062005
10  கத்தார்துணைநிலை19992000
11  சவூதி அரேபியாதுணைநிலை20032003
12  சிங்கப்பூர்துணைநிலை19741983
13  தஜிகிஸ்தான்துணைநிலை20212012
14  தாய்லாந்துதுணைநிலை20051996
15  கம்போடியாதுணைநிலை20222012

மங்கோலியா 2021 சூலை 18 அன்று ஐசிசி உறுப்பினராக அனுமதிக்கப்பட்டது, ஆனால் இன்னும் எந்த பிராந்திய அமைப்பின் உறுப்புரிமையையும் அது பெறவில்லை. இருப்பினும், ஆசிய நாடாக இருப்பதால், ஏசிசியில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐசிசி உறுப்பினரல்லாதோர்

ஆசியத் துடுப்பாட்ட அவையின் தற்போதைய உறுப்பினர்கள்
இல.நாடுஐசிசி உறுப்புரிமைஐசிசி
உறுப்புரிமை
ஏசிசி
உறுப்புரிமை
1  சீனக் குடியரசுபொருத்தமில்லை2012

கிழக்காசிய-பசிக்கில் இணைந்த முன்னாள் உறுப்பினர்கள்

கிழக்காசிய-பசிக்கில் இணைந்த முன்னாள் ஆசிய உறுப்பினர்கள்
இல.நாடுஐசிசி உறுப்புரிமைஐசிசி
உறுப்புரிமை
ஏசிசி
உறுப்புரிமை
1  பிஜிதுணைநிலை19651996
2  சப்பான்துணைநிலை19891996
3  பப்புவா நியூ கினிதுணைநிலை (ஒநாப தகுநிலை)19731996

முன்னாள் உறுப்பினர்கள்

ஆசியத் துடுப்பாட்ட அவையின் முன்னாள் உறுப்பினர்கள்
இல.நாடுஐசிசி உறுப்புரிமைஐசிசி
உறுப்புரிமை
ஏசிசி
உறுப்புரிமை
1  புரூணைபொருத்தமில்லை2002–20151996

வரைபடம்

பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் ஆசிய உறுப்பினர்கள்.
     முழு ஐசிசி உறுப்பினர்கள் (5)
     துணைநிலை ஐசிசி உறுப்பினர்கள் (ஒநாப தகுநிலையுடன் (3))
     துணைநிலை ஐசிசி உறுப்பினர்கள் (15)
     ஐசிசி உறுப்பினரல்லாத ஏசிசி உறுப்பினர்கள் (2)
     முன்னாள் ஐசிசி உறுப்பினர்கள் (1)
     முன்னாள் ஏசிசி உறுப்பினர்கள் (தற்போதைய கிழக்காசிய-பசிபிக் உறுப்பினர்கள் (3) – பப்புவா நியூ கினி, பிஜி காட்டப்படவில்லை
     ஐசிசி உறுப்ப்னர்கள் (ஏனைய சங்கங்களின் உறுப்பினர்கள்)
     உறுப்பினரல்லாதோர்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்