இரகத் நுசரத் பதே அலி கான்

பாக்கித்தானிய சூபி பாடகர்

இரகத் பதே அலி கான் ( Rahat Fateh Ali Khan; பிறப்பு 9 டிசம்பர் 1974)[1] ஓர் பாக்கித்தான் பாடகராவார். கவ்வாலி, பக்தி இசையின் ஒரு வடிவமான சூபி போன்றவற்றை முதன்மையாக பாடினார். பாக்கித்தானில் அதிக சம்பளம் வாங்கும் பாடகர்களில் இவரும் ஒருவர்.[3] கவ்வாலி மட்டுமின்றி, கசல்கள் மற்றும் பிற மெல்லிசை நிகழ்ச்சிகளையும் நடத்துகிறார். பாகிஸ்தான், இந்தியா மற்றும் உலகெங்கிலும் பயணம் செய்து இவர் பல நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார்.[4]. இவர் நுசுரத் பதே அலி கானின் மருமகனும், பரூக் பதே அலி கானின் மகனும் மற்றும் கவ்வாலி பாடகர் பதே அலி கானின் பேரனும் ஆவார். கவ்வாலி தவிர, கஜல் மற்றும் இதர ஒளி இசையையும் இவர் நிகழ்த்துகிறார். இவர் ஹிந்தி சினிமா மற்றும் பாக்கித்தான் திரையுலகில் பின்னணி பாடகராகவும் பிரபலமாக இருந்தார்.[5]

உஸ்தாத்
இரகத் நுசரத் பதே அலி கான்
2014 இல் இரகத் நுசரத் பதே அலி கான்
தாய்மொழியில் பெயர்راحت فتح علی خان
பிறப்புஇரகத் நுசரத் பதே அலி கான்
9 திசம்பர் 1974 (1974-12-09) (அகவை 49)[1][2]
பைசலாபாத், பஞ்சாப், பாக்கித்தான்
தேசியம்பாகிஸ்தானியர்
பணி
  • பாடகர்
  • இசையமைப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1997–தற்போது வரை[2]
இசை வாழ்க்கை
இசை வடிவங்கள்
இசைக்கருவி(கள்)
  • குரலிசை
  • ஆர்மோனியம்
இசைத்துறையில்1997–present[2]
இணைந்த செயற்பாடுகள்

ஆரம்ப கால வாழ்க்கை

இரகத் பாக்கித்தானின் பஞ்சாபில் உள்ள பைசலாபாத்தில் பாரம்பரிய பாடகர்களைக் கொண்ட பஞ்சாபி குடும்பத்தில் பிறந்தார்.[6] பதே அலி கானின் பேரனும், புகழ்பெற்ற கவ்வாலி பாடகர் நுஸ்ரத் பதே அலி கானின் மருமகனும், பரூக் பதே அலி கானின் மகனும் ஆவார்.[7]

இவர் சிறு வயதிலிருந்தே இசையின் மீது ஆஅர்வத்தைக் காட்டினார். மேலும் மூன்று வயதிலேயே தனது மாமா மற்றும் தந்தையுடன் அடிக்கடி இசை நிகழ்ச்சிகளுக்குச் செல்வார். ஏழு வயதிலிருந்தே, தனது மாமா நுஸ்ரத் ஃபதே அலி கானிடம் கவ்வாலி பாடுவதில் பயிற்சி பெற்றார்.[8][9]

தொழில்

தனது ஒன்பது வயதில், தனது தாத்தாவின் நினைவு நாளில், முதல் முறையாக நிகழ்ச்சி நடத்தினார். பதினைந்து வயதிலிருந்தே, இவர் நுசுரத் பதே அலி கானின் நன்கு அறியப்பட்ட கவ்வாலி குழுவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தார். 1985 இல் தனது மாமாவுடன் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்தார். 'கவ்வாலி குழு'வில் தனது பங்கை நிறைவேற்றுவதோடு, வெவ்வேறு கச்சேரிகளில் தனிப்பாடல்களையும் இவர் நிகழ்த்தினார்.

இவர் பாப் (2003) திரைப்படத்தில் இடம் பெற்ற "மன் கி லகன்" பாடல் மூலம் பாலிவுட்டில் பின்னணிப் பாடகராக அறிமுகமானார்.

ஏப்ரல் 2012 இல், இரகத் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்தார். வெம்ப்லி அரங்கிலும் மான்செஸ்டர் அரங்கிலும் நிகழ்ச்சிகளை நடத்தினார். 20,000 பேருக்கும் அதிகமான பார்வையாளர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.[10][11]

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில்

சோனு நிகாமுடன் சோட்டே உஸ்தாத் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு இவர் நடுவராக இருந்தார். 2008 இல் என்டிடிவி இமேஜினில் திரையிடப்பட்ட ஜூனூன் என்ற பாடல் தொடர்பான நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவராகவும் இருந்தார்.[12][13]

2014 அமைதிக்கான நோபல் பரிசு விழாவில் நிகழ்ச்சி நிகழ்த்த அழைக்கப்பட்ட முதல் பாக்கித்தானிய கலைஞர் இவர்.[14] அதில் இவர் நுசுரத் பதே அலி கானின் கவ்வாலி பாடலான "தும்ஹே தில்லாகி" , "மஸ்த் கலந்தர்" ,"ஆவோ பர்ஹாவோ" போன்ற பாடல்களைப் பாடினார்.[15][16]

சர்ச்சை

2018 ஆம் ஆண்டில், நுசரத் பதே அலி கானின் மகள், தனது தந்தையின் பாடல்களைப் பாடும் பாடகர்களின் பதிப்புரிமை மீறலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க விரும்புவதாகக் கூறினார். இதற்கு பதிலளித்த இரகத், தான் நுசரத்தின் தத்தெடுக்கப்பட்ட வாரிசு என்றும், அவரது பாடல்களைப் பாட யாருடைய அனுமதியும் தேவையில்லை என்றும் கூறினார்.[17]

ஜனவரி 2019 இல், கான் வெளிநாட்டு நாணயத்தை கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு, இந்திய அரசின் அமலாக்க இயக்குநரகத்தால் விசாரணைக்கு அழைக்கப்பட்டார்.[18]

சான்றுகள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்