அமலாக்க இயக்குனரகம்

பொருளாதார குற்றங்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளும் இந்திய அரச அமைப்பு

அமலாக்கப் பிரிவு அல்லது அமலாக்க இயக்குநரகம் (Directorate General of Economic Enforcement or Enforcement Directorate [ED]) (இந்தி: प्रवर्तन निदेशालय) என்பது இந்தியாவில் பணமோசடி தடுப்பு சட்டம், 2002 மற்றும் அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம், 1999 போன்ற பொருளாதாரச் சட்டங்களை கண்காணிக்கவும், நடவடிக்கைகளை மேற்கொள்வதும் இதன் பணியாகும்.[1] அமலாக்கப் பிரிவு, இந்திய அரசின் நிதி அமைச்சகத்தின்கீழ் செயல்படும் வருவாய்த் துறையின் கீழ் இயங்கும் புலனாய்வு மற்றும் சட்ட அமலாக்க அமைப்பு ஆகும். அமலாக்க இயக்குனரகத்தில் இந்திய ரிசர்வ் வங்கி, செபி, வருமானவரி, சுங்கம் மற்றும் கலால் வரித்துறை அதிகாரிகள் ஆகியோர்களைக் கொண்டு இயங்குகிறது. இது இந்திய அரசால் 11 மே 1956 அன்று நிறுவப்பட்டது.

அமலாக்க இயக்குநரகம்
प्रवर्तन निदेशालय
சுருக்கம்ED
துறையின் கண்ணோட்டம்
உருவாக்கம்1 மே 1956
(67 ஆண்டுகள் முன்னர்)
 (1956-05-01)
சட்ட ஆளுமைஇந்திய அரசு முகமை
அதிகார வரம்பு அமைப்பு
செயல்பாட்டு அதிகார வரம்புஇந்தியா
ஆட்சிக் குழுநிதி அமைச்சகம், இந்திய அரசு
Constituting instruments
செயல்பாட்டு அமைப்பு
தலைமையகம்புது தில்லி, இந்தியா
அமைச்சர்
துறை நிருவாகி
அமைச்சுநிதி அமைச்சகம், வருவாய்த் துறை
இணையத்தளம்
enforcementdirectorate.gov.in

வெளிநாட்டு பணப் பரிவர்த்தனைகளை கண்காணிக்கும் பொருட்டு இயற்றப்பட்ட அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம், 1999, பணமோசடி தடுப்பு சட்டம், 2002 மற்றும் தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிகள் சட்டம் ஆகியவைகளை நடைமுறைப்படுத்த அமலாக்க இயக்குநரகம் செயல்படுகிறது.

நோக்கம்

அமலாக்கப் பிரிவு இயக்குநரகத்தின் முதன்மையான மூன்று பணிகள், வெளிநாட்டு பணப்பரிவர்த்தனை மேலாண்மைச் சட்டம் (FEMA), மற்றும் கணக்கில் வராத பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றுவதை தடுக்கும் சட்டம், 2002 (PMLA) மற்றும் தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிகள் சட்டம் ஆகிய மூன்று சட்டங்களை அமல்படுத்துவதும், நாட்டில் கருப்புப் பணத்தை ஒழிப்பதேயாகும்.[2]

அமைப்பு

தலைமை இயக்குநர் ஒருவர் தலைமையில், அமலாக்கப்பிரிவின் தலைமையிடம் புதுதில்லியிலும், இதன் பத்து மண்டல அலுவலகங்கள், மண்டல இயக்குநர்களின் தலைமையில் மும்பை, கொல்கத்தா, சண்டிகர், சென்னை, அகமதாபாத், பெங்களூரு, கொச்சி மற்றும் ஹைதராபாத் நகரங்களில் செயல்படுகிறது. அமலாக்க இயக்குநரகத்தின் துணை மண்டல அலுவலகங்கள், இணை இயக்குநர்களின் தலைமையில், ஆக்ரா, ஸ்ரீநகர், ஜெய்ப்பூர், வாரணாசி, ஹைதராபாத், குவகாத்தி, மற்றும் பஞ்சிம் ஆகிய இடங்களில் செயல்படுகிறது.[3]

அமல் படுத்தும் சில சட்டங்கள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை