சந்திரகாந்த் கவ்லேகர்

இந்திய அரசியல்வாதி

சந்திரகாந்த் கவ்லேகர் (Chandrakant Kavlekar)(பிறப்பு 7 மே 1971) என்பவர் சந்திரகாந்த் 'பாபு' கவ்லேகர் என்றும் அழைக்கப்படுபவர் கோவா மாநில இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் கோவாவின் முன்னாள் நகர மற்றும் கிராம திட்டமிடல், விவசாயம், காப்பகங்கள், தொல்லியல், தொழிற்சாலைகள் மற்றும் கொதிகலன்கள் துறை அமைச்சராக உள்ளார்.[1] இவர் கோவா சட்டமன்றத்தில் நான்கு முறை சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளார்.[2] இவர் குயுபெம் தொகுதியைச் சார்ந்தவர்.[3][4][5]

சந்திரகாந்த் கவ்லேகர்
துணை முதலமைச்சர் (கோவா)
பதவியில்
13 சூலை 2019 – 15 மார்ச் 2022
முன்னையவர்விஜய் சர்தேசாய்
தொகுதிகுயுபெம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு7 மே 1971 (1971-05-07) (அகவை 53)
பேதுல் கோவா, இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி (11 சூலை 2019 முதல்)
பிற அரசியல்
தொடர்புகள்
இந்திய தேசிய காங்கிரசு (11 சூலை 2019 வரை)
வேலைஅரசியல்வாதி

2017ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வேட்பாளர் பிரகாஷ் வெலிப்பை எதிர்த்து பாபு கவ்லேக்கர் வெற்றி பெற்றுத் தொடர்ந்து நான்காவது முறையாகச் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2019, சூலை 11 அன்று, இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியிலிருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார். சூலை 13, 2019 முதல் இவர் கோவா மாநில துணை முதல்வராக இருந்தார்.[6]

மேற்கோள்கள்

 

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்