சாந்தகுமார்

இந்திய அரசியல்வாதி

சாந்தகுமார் (Shanta Kumar) (பிறப்பு: 12 செப்டம்பர் 1934) இந்திய மாநிலமான இமாச்சலப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சரும், இந்திய நடுவண் அரசின் அமைச்சராகவும் இருந்தவர். சாந்தகுமார் பாரதிய ஜனதா கட்சியின் இமாச்சலப் பிரதேச மாநிலத் தலைவர்களில் ஒருவரும் ஆவார். 1989, 1998 மற்றும் 1999-ஆம் ஆண்டுகளில் இமாச்சலப் பிரதேசத்தின் காங்கிரா மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்ற மக்களவைக்கு மூன்று முறை தேர்ந்தேடுக்கப்பட்டவர்.

சாந்தகுமார்
முதலமைச்சர், இமாச்சலப் பிரதேசம்
பதவியில்
22 சூன் 1977 – 14 பிப்ரவரி 1980
முன்னையவர்தாக்கூர் ராம் லால்
பின்னவர்தாக்கூர் ராம் லால்
பதவியில்
5 மார்ச் 1990 – 15 டிசம்பர் 1992
முன்னையவர்வீரபத்ர சிங்
பின்னவர்வீரபத்ர சிங்
இந்திய நடுவண் அரசின் உணவு மற்றும் பொதுவிநியோகம் மற்றும் நுகர்வோர் அமைச்சர்
பதவியில்
13 அக்டோபர் 1999 – 30 சூன் 2002
இந்திய நடுவண் அரசின் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர்
பதவியில்
1 சூலை 2002 – 6 ஏப்ரல் 2003
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு12 செப்டம்பர் 1934 (1934-09-12) (அகவை 89)
கர்ஜமுலா, காங்ரா மாவட்டம், பஞ்சாப் பிரித்தானிய இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்சந்தோஷ் ஷைலஜா
வாழிடம்(s)பாலம்பூர், காங்ரா மாவட்டம், இமாச்சலப் பிரதேசம்

பிறப்பு

ஜெகன்நாத் சர்மா – கௌசல்யா தேவி இணையருக்கு 12 செப்டம்பர் 1934-இல் பிரித்தானிய இந்தியாவின் காங்ரா மாவட்டத்தில், கர்ஜாமுலா எனும் ஊரில் பிறந்தவர் சாந்தகுமார்.[1]

அரசியல்

1963-இல் அரசியல் பணி துவக்கிய சாந்தகுமார் முதலில் கர்ஜமூலா கிராமப் பஞ்சாயத்தின் தலைவராகப் பதவி ஏற்றார். பின்னர் பவர்னா பஞ்சாயத்து ஒன்றியத்தின் தலைவராகவும், காங்கிரா மாவட்ட பஞ்சாயத்து குழுவின் தலைவராகவும் (1965 - 1970) பதவி வகித்தார்.[2]

சாந்தகுமார் 1972 முதல் 1985 முடிய இமாச்சலப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராகத் தொடர்ந்து பதவி வகித்தவர்.பின்னர் மீண்டும்1992 – 1992 முடிய இமாச்சலப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தவர்.பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக சாந்தகுமார் இமாச்சலப் பிரதேசத்தின் முதலமைச்சராக 1977 முதல் 1980 முடியவும், பின்னர் 1990 முதல் 1992 முடிய இரண்டு முறை பதவி வகித்தவர்.[3] 1980 முதல் 1985 முடிய இமாச்சலப் பிரதேச சட்டமன்ற எதிர்கட்சித் தலைவராக பணியாற்றியவர்.[4]

சாந்தகுமார் காங்கிரா மக்களவைத் தொகுதியிலிருந்து 1989, 1998 மற்றும் 1999 ஆகிய ஆண்டுகளில் நடந்த மக்களவைத் தேர்தல்களில் போட்டியிட்டு இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும், அடல் பிகாரி வாஜ்பாய் அமைச்சரவையில் 1999 முதல் 2004 முடிய ஊரக வளர்ச்சித் துறையில் மூத்த அமைச்சராகவும் பணியாற்றியவர்.[4]

சாந்தகுமார் 2008-இல் இமாச்சலப் பிரதேசத்திலிருந்து, இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவைக்குத் தேர்ந்தேடுக்கப்பட்டார்.[5] 2014-இல் 16வது மக்களவை உறுப்பினராக காங்ரா மக்களவைத் தொகுதியிலிருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[6]

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சாந்தகுமார்&oldid=3792652" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்