சிவ நாடார் பல்கலைக்கழகம், சென்னை

சிவ நாடார் பல்கலைக்கழகம், சென்னை (Shiv Nadar University, Chennai) என்பது இந்தியாவில் தமிழ்நாட்டில் சென்னைக்கு தெற்கே 20 கிமீ தொலைவில் திருப்போரூர் அருகே உள்ள களவாக்கம் கிராமத்தில் ராஜீவ் காந்தி சாலை (தே. நெ. 49ஏ)-இல் அமைந்துள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகம் ஆகும்.

சிவ நாடார் பல்கலைக்கழகம், சென்னை
வகைதனியார்
உருவாக்கம்2018
வேந்தர்ஆர். சிறீனிவாசன்[1]
துணை வேந்தர்குமார் பட்டாச்சார்யா
அமைவிடம்
களவாக்கம், திருப்போரூர்
, ,
இந்தியா
இணையதளம்www.snuchennai.edu.in

உத்தரப்பிரதேசத்தில் உள்ள தாத்ரியில் உள்ள சிவ நாடார் பல்கலைக்கழகத்தைத் தொடர்ந்து சிவ நாடார் அறக்கட்டளையால் அமைக்கப்பட்ட இரண்டாவது பல்கலைக்கழகமான இது அக்டோபர் 2020-இல் தொடங்கப்பட்டது. ஒன்பது தசாப்தங்களில் தமிழகத்தில் சட்டம் இயற்றப்பட்ட முதல் தனியார் பல்கலைக்கழகம் இதுவாகும்.[2] இது சிவ சுப்ரமணிய நாடார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ளது.

வரலாறு

சிவ நாடார் அறக்கட்டளை 1994-இல் நிறுவப்பட்டது. இதனை எச். சி. எல். நிறுவனர் சிவ் நாடார் நிறுவினர். எச். சி. எல். நிறுவனம் அமெரிக்க டாலர் 11 பில்லியன் மதிப்புள்ள முன்னணி உலகளாவிய நிறுவனம் ஆகும். ஒரு தனியார் பல்கலைக்கழகத்தை உருவாக்குவதற்கு வசதியாக 2015-இல் எச். சி. எல். டெக்னாலஜிஸ் மற்றும் தமிழ்நாடு அரசு இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில்[3] குறிப்பாணையின் விளைவாக இந்த பல்கலைக்கழகம் உருவானது.[4] இப்பல்கலைக்கழகம் சிவ் நாடார் பல்கலைக்கழகச் சட்டம், 2018[5] மூலம் சூலை 2018 நிறுவப்பட்டது. இது சாய் பல்கலைக்கழக சட்டத்துடன் சேர்த்து,[3] ஒன்பது தசாப்தங்களில் அண்ணாமலை பல்கலைக்கழகம் சட்டத்திற்குப்பின் தமிழ்நாட்டில் சட்டமியற்றப்பட்ட முதல் தனியார் பல்கலைக்கழகமாக உருவாகியது.[2]

சிவ நாடார் பல்கலைக்கழகம் அக்டோபர் 2020-இல் தொடங்கப்பட்டது.[2] குமார் பட்டாச்சார்யா மார்ச் 2021-இல் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராக நியமிக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்