சுரேஷ் மேத்தா

இந்திய அரசியல்வாதி

சுரேஷ் மேத்தா (Suresh Mehta) பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த இவர், குஜராத் மாநிலத்தின் 11வது முதலமைச்சராக 1995 முதல் 1996 முடிய செயல்பட்டவர்.

சுரேஷ் மேத்தா
குஜராத் மாநிலத்தின் 11வது முதலமைச்சர்
பதவியில்
21 அக்டோபர் 1995 – 19 செப்டம்பர் 1996
முன்னையவர்கேசுபாய் படேல்
பின்னவர்குடியரசுத் தலைவர் ஆட்சி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு18 ஆகஸ்டு 1947
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி (till 2007)
குஜராத் பரிவர்த்தன் கட்சி(2007-2014)

அரசியல்

குஜராத்தின் கட்ச் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் மேத்தா பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர்களில் ஒருவராக இருந்தவர்.1995-இல் குஜராத் மாநில முதலமைச்சர் கேசுபாய் படேலின் அமைச்சரவையில் பதவி வகித்தவர் சுரேஷ் மேத்தா. அக்டோபர் 1995-இல் சங்கர்சிங் வகேலாவின் எதிர்ப்பால், கேசுபாய் படேல் முதல்வர் பதவியிலிருந்து விலகியதன் பின்னர் சுரேஷ் மேத்தா, குஜராத்தின் 11வது முதலமைச்சராக அக்டோபர் 1995 முதல் செப்டம்பர் 1996 முடிய பதவி வகித்தவர்.

சங்கர்சிங் வகேலா பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலகி இராஷ்டிரிய ஜனதா கட்சியை துவக்கிய போது, சுரேஷ் மேத்தாவின் ஆட்சி கலைக்கப்பட்டு, குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைப் படுத்தப்பட்டது.மீண்டும் , 1998-இல் குஜராத் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட கேசுபாய் படேல் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி அரசில், சுரேஷ் மேத்தா தொழில் துறை அமைச்சராக 2002 முடிய பதவி வகித்தார்.[1] 2007 குஜராத் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர், 8 டிசம்பர் 2007-இல் குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோதியின் தலைமையை எதிர்த்து பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலகி கேசுபாய் படேல் துவக்கிய இராஷ்டிரிய ஜனதா கட்சியில் இணைந்தார்.[2]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சுரேஷ்_மேத்தா&oldid=3992484" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்