தமீம் இக்பால்

வங்காளதேசத் துடுப்பாட்டக்காரர்

தமீம் இக்பால்கான்: (Tamim Iqbal Khan, வங்காள மொழி: তামিম ইকবাল খান பிறப்பு: மார்ச்சு 20, 1989) வங்காளதேசம் துடுப்பாட்ட அணியின் ஆரம்ப துடுப்பாட்டக்காரராவார்,மற்றும் முன்னாள் தேர்வுத் துடுப்பாட்டத் தலைவர் ஆவார். இவர் வங்காளதேசத் துடுப்பாட்ட அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம் , பன்னாட்டு இருபது20 மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார். 2007 ஆம் ஆண்டு முதல் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 2008 ஆம் ஆண்டு முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் விளையாடினார். இடதுகை மட்டையாளரான இவர் துவக்கவீரராக களம் இறங்குகிறார். வங்காளதேச சிறந்த மட்டையாளர்களில் ஒருவராக அறியப்படுகிறார். டிசம்பர் 2010 முதல் செப்டம்பர் 2011 ஆம் ஆண்டு வரை இவர் அணியின் உதவித் தலைவராக இருந்துள்ளார். இவர் தேர்வுத் துடுப்பாட்டம் , பன்னாட்டு இருபது20 மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் ஆகிய மூன்று வடிவங்களிலும் நூறு ஓட்டங்கள் அடித்துள்ளார். மேலும் சர்வதேச போட்டிகளில் 10,000 ஓட்டங்களை அடித்துள்ளாஅர். இதன்மூலம் 10,000 ஓட்டங்கள் அடித்த முதல் வங்காளதேச வீரர் எனும் சாதனை படைத்தார்.[1] சனவரி 23 , 2018 இல் சேர்-இ-பங்களா துடுப்பாட்ட அரங்கத்தில் நடைபெற்ற சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் 6,000 ஓட்டங்களை எடுத்தார்.இது அந்த மைதானத்தில் இவர் எடுக்கும் 2, 515 ஆவது ஓட்டமாகும். இதன்மூலம் ஒரே மைதானத்தில் அதிக ஓட்டங்கள் எடுத்தவர் எனும் சாதனையைப் படைத்தார். இதற்கு முன் சனத் ஜயசூரியா ஆர். பிரேமதாச அரங்கத்தில் 2,514 ஓட்டங்கள் அடித்ததே சாதனையாக இருந்தது.[2][3] வங்காளதேச சிட்டாகொக் பிரதேசத்தில் பிறந்த இவர் வங்காளதேசம் தேசிய அணி, ஆசிய லெவன் அணி, வங்காளதேச துடுப்பாட்ட ஏ அணி, வங்காளதேச 19இன் கீழ் அணிகளில் இவர் அங்கத்துவம் பெறுகின்றார்.

தமீம் இக்பால்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்தமீம் இக்பால்கான்
உயரம்5 அடி 11 அங் (1.80 m)
மட்டையாட்ட நடைஇடதுகை
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 50)சனவரி 4 2008 எ. நியூசிலாந்து
கடைசித் தேர்வுசூன் 5 2010 எ. இங்கிலாந்து
ஒநாப அறிமுகம் (தொப்பி 83)பிப்ரவரி 9 2007 எ. சிம்பாப்வே
கடைசி ஒநாபபிப்ரவரி 19 2011 எ. இந்தியா
ஒநாப சட்டை எண்29
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2004-இன்றுசிட்டாகொக்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகைதேர்வுஒ.நாமுதல்ஏ-தர
ஆட்டங்கள்199040104
ஓட்டங்கள்14452,7102,9283,103
மட்டையாட்ட சராசரி40.1330.1140.6629.83
100கள்/50கள்4/83/176/204/18
அதியுயர் ஓட்டம்151154151154
வீசிய பந்துகள்2461326
வீழ்த்தல்கள்0000
பந்துவீச்சு சராசரி
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0000
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0n/a0n/a
சிறந்த பந்துவீச்சுN/A0/6
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
8/–25/–20/–32/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், பிப்ரவரி 21 2011

ஆரம்பகால வாழ்க்கை

தமீம் இக்பால் கான், இக்பால் கான் மற்றும் நுஸ்ரத் கான் இக்பால் ஆகியோரின் மகனாக துறைமுக நகரமான சிட்டகாங்கில் பிறந்தார் . [4] அவரது தந்தைவழி கான் மரபினைச் சேர்ந்த ஒரு செல்வந்த குடும்பம் ஆகும். இவர்கள் பாக்கித்தானில் இருந்து குடிபெயர்ந்து வந்தவர்கள் ஆவர்.[4]

தமீம் இக்பால் நஃபீஸ் இக்பாலின் சகோதரர் மற்றும் அக்ரம் கானின் மருமகன் ஆவார், இருவரும் வங்களாதேச துடுப்பாட்ட அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியவர்கள் ஆவர். [4] தமீமின் தந்தை இக்பால் தனது மகன்களுக்கு பயிற்சியளிப்பதற்கும் துடுப்பாட்டத்தில் சிறந்து விளங்குவதற்கும் சிறிய துடுப்பாட்டப் போட்டிகளை நடத்தினார். [5] முன்னாள் தேசிய அணி துடுப்பாட்ட வீரரான அவரது சகோதரர் நஃபீஸ் ஒரு நேர்காணலில், "தமீம் மிகவும் திறமையானவர். தமீம் 12 அல்லது 13 வயதாக இருந்தபோது, அணியில் இலக்கு 150 அக இருந்தபோது இவர் மட்டுமே 148 ஓட்டங்கள் எடுத்தார்" எனத் தெரிவித்தார்.[5]

சிட்டகாங்கில் நடைபெற்ற பிரமாண்ட விழாவுடன் அவர் ஆயிஷா சித்திகாவை ஜூன் 2013 இல் திருமணம் செய்தார். இந்த நிகழ்வில் முன்னாள் பிரதமர் கலீடா ஜியாவும் கலந்து கொண்டார். இவரின் முதல் மகன் முகமது அர்ஹாம் இக்பால் 28 பிப்ரவரி 2016 அன்று பிறந்தார். மேலும், அவருக்கு அலிஷாபா இக்பால் கான் எனும் மகள் 19 நவம்பர் 2019 அன்று பிறந்தார்.

தேர்வுத் துடுப்பாட்டம்

2008 ஆம் ஆண்டில் வங்காளதேசத் துடுப்பாட்ட அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது . சனவரி 4 இல் துனதினில் நடைபெற்ற நியூசிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்.[6] இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 88 பந்துகளில் 53 ஓட்டங்கள் எடுத்து மார்டினின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதில் 9 நான்குகள் அடங்கும். பின் இரண்டாவது ஆட்டப்பகுதியில் 128 பந்துகளில் 84 ஓட்டங்கள் எடுத்து மில்சின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதில் 12 நான்குகள் மற்றும் 1 ஆறு அடங்கும்.இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி 9 இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[7]

2018 ஆம் ஆண்டில் இலங்கைத் துடுப்பாட்ட அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது [6]. பெப்ரவரி 8 இல் தாக்காவில் நடைபெற்ற இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான இரண்டாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் விளையாடினார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 3 பந்துகளில் 4 ஓட்டங்கள் எடுத்து லக்மலின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதில் 1 நான்குகள் அடங்கும். பின் இரண்டாவது ஆட்டப்பகுதியில் 7 பந்துகளில் 2 ஓட்டங்கள் எடுத்து பெராராவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் இலங்கை அணி 215 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[8]

விசுடன் துடுப்பாட்ட வீரர்

மார்ச் 2010 இல் இங்கிலாந்துக்கு எதிரான முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியின் போது, தமீம் 86 ஓட்டங்கள் எடுத்தார்  . இதன் மூலம் அவர் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் 1,000 ஓட்டக்களை விரைவாக எட்டிய வங்காளதேச மட்டையாளர் ஆனார்.இவர் 19 போட்டிகளில் இந்தச் சாதனையினை எடுத்தார்.[9] தேர்வுத் துடுப்பாட்ட வரலாற்றில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் சக வீரர் முகமது அஷ்ரஃபுல் ஆகியோருக்குப் அடுத்தபடியாக 1,000 ஐ எட்டிய மூன்றாவது இளைய வீரர் என்ற பெருமையையும் பெற்றார் .[10]

அந்த ஆண்டு மே மாதம், வங்காளதேச மேலும் இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளுக்காக இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது . அவரது அணி 2–0 என்ற கணக்கில் தோல்வியடைந்தாலும், தமீம் ஒவ்வொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் நூறு ஓட்டங்களை அடித்தார். [11] இங்கிலாந்துக்கு எதிரான அவரது பங்களிப்பிற்காக , 2011 ஆம் ஆண்டில் விஸ்டன் துடுப்பாட்ட வீரர்களின் 'பட்டியலில் நான்கு துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக தமீம் தேர்ந்தெடுக்கப்பட்டார். [12] அக்டோபரில் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்த கிரேம் ஸ்வான் மற்றும் வீரேந்தர் சேவாக் ஆகியோரை விட விஸ்டனின் ஆண்டின் சிறந்த தேர்வுத் துடுப்பாட்ட வீரராக தேர்வு செய்யப்பட்டார். விருதுக்கான தகுதி காலத்தில், தமீம் 837 ஓட்டங்கள் எடுத்தார்.   ஏழு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் சராசரியாக 59.78 ஓட்டங்கள் எடுத்தார். முந்தைய ஆண்டு ஷாகிப் அல் ஹசன் பெயரிடப்பட்டதால், வங்காளதேச வீரர் ஒருவர் இந்த விருதை வென்றது இது இரண்டாவது முறையாகும். [11] நவம்பர் தொடக்கத்தில் வங்காளதேச துடுப்பாட்ட வாரியம் அறிவித்த மத்திய ஒப்பந்தங்களைப் பெற்ற 16 வீரர்களில் ஒருவராக இவர் இருந்தார்.[13]

சான்றுகள்

வெளியிணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=தமீம்_இக்பால்&oldid=3719593" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்