பெருநகர சென்னை மாநகராட்சியின் மண்டலங்கள்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

பெருநகர சென்னை மாநகராட்சியின் மண்டலங்கள், தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்தின் தலைநகரமான சென்னையில் அமைந்த பெருநகர சென்னை மாநகராட்சி 1688-இல் நிறுவப்பட்டது.[1][2][3] பெருநகர சென்னை மாநகராட்சி, 15 மண்டலங்களும் 200 வார்டுகளையும் கொண்டது.[4]

வரலாறு

சென்னை மாவட்டத்தின் 3 வருவாய் கோட்டங்களும், 16 வருவாய் வட்டங்களும்

2011-க்கு முன்னர் சென்னை மாநகராட்சியை விரிவாக்கம் செய்வதற்கும் முன், 174 km2 (67 sq mi) பரப்பளவு கொண்டிருந்தது; சென்னை மாநகராட்சியுடன் 42 உள்ளாட்சி அமைப்புகளை இணைத்த பின்னர் பெருநகர சென்னை மாநகராட்சியின் பரப்பளவு 426 km2 (164 sq mi) ஆக இரட்டிப்பு ஆனது.

சென்னை மாநகராட்சியுடன், திருவள்ளூர் மாவட்டத்தின் 7 நகராட்சிகளும், 3 பேரூராட்சிகளும், 13 ஊராட்சி ஒன்றியப் பகுதிகளும் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தின் 2 நகராட்சிகளும்; 5 பேரூராட்சிகளும், ஊராட்சி ஒன்றியத்தின் 12 கிராம ஊராட்சிகளும் இணைக்கப்பட்டது.[5]

பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட நகராட்சிகள்

சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட 9 நகராட்சிகள் விவரம்:ஆலந்தூர், அம்பத்தூர், கத்திவாக்கம், மாதவரம், மதுரவாயல், மணலி, திருவொற்றியூர், உள்ளகரம்-புழுதிவாக்கம் மற்றும் வளசரவாக்கம் ஆகும்.

பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பேரூராட்சிகள்

சின்னசேக்காடு, புழல், போரூர், நந்தம்பாக்கம், மீனம்பாக்கம், பெருங்குடி, பள்ளிக்கரணை மற்றும் சோழிங்கநல்லூர்

சென்னை பெருநகர மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட 25 கிராம ஊராட்சிகள்

இடையன்சாவடி, சடையன்குப்பம், கடப்பாக்கம், தீயம்பாக்கம், வைக்காடு, மாத்தூர், வடபெரும்பாக்கம், சூரப்பட்டு, கதிர்வேடு, மஞ்சம்பாக்கம், கொசப்பூர், நொளம்பூர், நெற்குன்றம்,ராமாபுரம், முகலிவாக்கம், மௌலிவாக்கம், மணப்பாக்கம், கொட்டிவாக்கம், பாலவாக்கம், காரப்பாக்கம், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், ஒக்கியம்-துரைப்பாக்கம், மடிப்பாக்கம், ஜல்லடியான்பேட்டை, செம்மண்சேரி, உத்தண்டி.[5]

விரிவாக்கப்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சி 4.41 மில்லியன் வாக்காளர்களுடன், 15 மண்டலங்களும், 200 வார்டுகளையும் கொண்டுள்ளது.[6]பெருநகர சென்னை மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளை 93 வார்டுகளிலும், பழைய சென்னை மாநகராட்சியின் 155 வார்டுகளை, புதிய 107 வார்டுகளில் நிர்வகிக்கப்படுகிறது.[7] செப்டம்பர் 2011-ன் நிலவரப்படி பெருநகர சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளில், 26 வார்டுகள் பட்டியல் சமூகத்திற்கும், பட்டியல் பழங்குடி மக்களுக்கும், 58 வார்டுகள மகளிருக்கும் இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.[7]

மண்டலங்கள்

பெருநகர சென்னை மாநகராட்சியின் விரிவாக்கத்திற்குப் பின்னர் உள்ள 15 மண்டலங்கள்
வ.எண்.மண்டலம்வார்டுகள்சட்டமன்றத் தொகுதிகள்மக்களவைத் தொகுதிதாலுக்காமாவட்டம்
1திருவொற்றியூர்1–14திருவொற்றியூர்வட சென்னைதிருவொற்றியூர்சென்னை
2மணலி15–21திருவொற்றியூர் /மாதவரம்/பொன்னேரிவட சென்னை/திருவள்ளூர்திருவொற்றியூர்/மாதவரம்/பொன்னேரிசென்னை
3மாதவரம்22–33 மாதவரம்திருவள்ளூர்மாதவரம்சென்னை
4தண்டையார்பேட்டை34–48திருவொற்றியூர்/பெரம்பூர்/ஆர். கே. நகர்வட சென்னைதண்டையார்பேட்டைசென்னை
5இராயபுரம்49–63இராயபுரம்/துறைமுகம்வட சென்னை/மத்திய சென்னைஎழும்பூர்/புரசைவாக்கம்சென்னை
6திரு. வி. க. நகர்64–78திரு. வி. க. நகர்/பெரம்பூர்/கொளத்தூர்/எழும்பூர்வட சென்னைபெரம்பூர் /அயனாவரம்/புரசைவாக்கம்சென்னை
7அம்பத்தூர்79–93அம்பத்தூர்ஸ்ரீபெரும்புதூர்அம்பத்தூர்சென்னை
8அண்ணா நகர்94–108அண்ணா நகர்/வில்லிவாக்கம்/எழும்பூர்மத்திய சென்னைஅயனாவரம்/அமைந்தகரைசென்னை
9தேனாம்பேட்டை109–126ஆயிரம்விளக்கு /தி.நகர்/சேப்பாக்கம்மத்திய சென்னைமயிலாப்பூர்சென்னை
10கோடம்பாக்கம்127–142தி. நகர்/சைதாப்பேட்டை/விருகம்பாக்கம்தென் சென்னைமாம்பலம்/கிண்டி/எழும்பூர்சென்னை
11வளசரவாக்கம்143–155மதுரவாயல்/ஆலந்தூர்ஸ்ரீபெரும்புதூர்மதுரவாயல்/ஆலந்தூர்சென்னை
12ஆலந்தூர்156–167ஆலந்தூர்ஸ்ரீபெரும்புதூர்ஆலந்தூர்சென்னை
13அடையாறு168–180மயிலாப்பூர்/வேளச்சேரிதென் சென்னைமயிலாப்பூர்/வேளச்சேரிசென்னை
14பெருங்குடி181–191சோழிங்கநல்லூர்தென் சென்னைசோழிங்கநல்லூர்சென்னை
15சோழிங்கநல்லூர்192–200சோழிங்கநல்லூர்தென் சென்னைசோழிங்கநல்லூர்சென்னை

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Specific

வெளி இணைப்புகள்



🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்