போத்தன்னா

தெலுங்குக் கவிஞர்

பம்மேரா போத்தனா (Bammera Pothana) (1450-1510) பாகவத்தை சமசுகிருதத்திலிருந்து தெலுங்கிற்கு மொழிபெயர்த்ததற்காக அறியப்பட்ட மிகவும் பிரபலமான ஒரு தெலுங்குக் கவிஞர் ஆவார். இவர் சமசுகிருத அறிஞரும் ஆவார்.[1] இவரது படைப்பான சிறீமத்பாகவதமு, தெலுங்கில் போத்தன்னா பாகவதம் என்று பிரபலமாக அழைக்கப்படுகிறது.[2]

போத்தன்னா
பம்மேரா கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள போத்தன்னாவின் உருவச் சிலை
பம்மேரா கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள போத்தன்னாவின் உருவச் சிலை
பிறப்பு1450 (1450)
பம்மேரா கிராமம்
இறப்பு1510 (அகவை 59–60)
தொழில்கவிஞர், உழவர்
வகைசமயம்

ஆரம்ப கால வாழ்க்கை

போத்தன்னா பம்மேரா கிராமத்தில் ஒரு நியோகி பிராமணக் குடும்பத்தில்[3] பிறந்தார்.

இலக்கிய வாழ்க்கை

சிறுவயதிலேயே மன்னன் சிறீசிங்க பூபாலனின் துணைவியான போகினியைப் புகழ்ந்து எழுதப்பட்ட போகினி தண்டகம் என்ற கவிதையை எழுதினார்.[4] வீரபத்ர விஜயமு என்ற இவரது இரண்டாவது படைப்பு சிவபெருமானின் அங்கமான வீரபத்திரரின் சாகசங்களை விவரிக்கிறது. தட்சனின் யாகத்தை அழித்ததே முக்கிய கருப்பொருள்.

துன்புறுத்தல்

இராசகொண்டாவின் (இன்றைய நல்கொண்டா மாவட்டம்) பத்ம நாயக்க மன்னன் போத்தன்னாவை தனக்கு 'ஆந்திர மகா பாகவதத்தை' அர்ப்பணிக்கக் கேட்டுக்கொண்டான். மன்னரே ஒரு அறிஞர் மற்றும் நன்கு அறியப்பட்ட சமசுகிருத நாடகமான உருத்ரநவசுதாகரா உட்பட பல படைப்புகளை எழுதியவர்.[5] ஆனால், போத்தன்னா மன்னனின் கட்டளைக்குக் கீழ்ப்படிய மறுத்து, இராமனுக்கு பாகவதத்தை அர்ப்பணித்தார்.

மேற்கோள்கள்

மேலும் படிக்க

  • P, Chenchiah; Raja Bhujanga Rao. A History of Telugu Literature. India: Oxford University press.

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Pothana
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=போத்தன்னா&oldid=3815002" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்