விக்கிமீடியா பொதுவகம்

இணையத்தில் இருக்கும் கட்டற்ற ஊடகக் கோப்பகம்

விக்கிமீடியா பொதுவகம் (Wikimedia Commons) அல்லது பொது எனப்படுவது கட்டற்ற உள்ளடக்கம் உடைய படங்கள், ஒலிக் கோப்புக்கள், காணொலிகள் மற்றும் ஏனைய ஊடகங்கள் கொண்ட இணையக் களஞ்சியம் ஆகும்.[1] இது விக்கிமீடியா நிறுவனத்தின் திட்டமாகும்.

விக்கிமீடியா பொதுவகம்
Wikimedia Commons
விக்கிமீடியா பொதுவக சின்னம்
வலைதளத்தின் தோற்றம்
விக்கிமீடியா பொதுவக திரைபிடிப்பு
விக்கிமீடியா பொதுவக முதற் பக்கம் திரைபிடிப்பு
வலைத்தள வகைஊடகக் களஞ்சியம்
தோற்றுவிப்புசெப்டம்பர் 7, 2004; 19 ஆண்டுகள் முன்னர் (2004-09-07)
உரிமையாளர்விக்கிமீடியா நிறுவனம்
உருவாக்கியவர்விக்கிப்பீடியா சமூகம்
வணிக நோக்கம்இல்லை
பதிவு செய்தல்விரும்பினால் (கோப்புக்களைப் பதிவேற்றலாம்)
உள்ளடக்க உரிமம்கட்டணமில்லா பொது உரிமம்
தற்போதைய நிலைஇணையத்தில்
உரலிcommons.wikimedia.org


விக்கிமீடியா பொது மில்லியன் கோப்புக்கள் நினைவினையொட்டி உருவாக்கப்பட்ட விக்கிமீடியா சின்னம் ஒட்டுகலையில் அமைந்துள்ளது

விக்கிமீடியா பொதுவகத்தில் உள்ள கோப்புக்களை விக்கிப்பீடியா, விக்கிநூல்கள், விக்கிமூலம், விக்கியினங்கள், விக்கிசெய்தி, விக்கிப்பயணம் உட்பட்ட சகல விக்கிமீடியாத் திட்டங்களிலும், சகல மொழிகளிலும் பயன்படுத்த முடியும்.[2] அல்லது இணையத் தொடபற்ற பாவனைக்காக தரவிறக்கம் செய்ய முடியும். மார்ச் 2021 இன்படி, இக்களஞ்சியம் 70 மில்லியனுக்கு மேற்பட்ட ஊடகக் கோப்புக்களைக் கொண்டுள்ளது.[3] சூலை 2013 இல், பொது 100,000,000 தொகுப்புக்களை எட்டியது.[4]

படிமங்களின் எண்ணிக்கை

மூலம்: commons:Commons:Milestones

  • நவம்பர் 30, 2006, 1 மில்லியன் கோப்புக்கள்
  • ஒக்டோபர் 9, 2007, 2 மில்லியன் கோப்புக்கள்
  • சூலை 16, 2008, 3 மில்லியன் கோப்புக்கள்
  • பெப்ரவரி 16, 2008, 10,000,000 தொகுப்புக்கள்
  • மார்ச் 4, 2009, 4 மில்லியன் கோப்புக்கள்
  • செப்டம்பர் 2, 2009, 5 மில்லியன் கோப்புக்கள்
  • சனவரி 27, 2010, 1 மில்லியன் பயனர்களும் 8 மில்லியன் பக்கங்களும்
  • சனவரி 31, 2010, 6 மில்லியன் கோப்புக்கள்
  • சூலை 17, 2010, 7 மில்லியன் கோப்புக்கள்
  • சனவரி 1, 2011, 8 மில்லியன் கோப்புக்கள்
  • பெப்ரவரி 23, 2011, 9 மில்லியன் கோப்புக்கள்
  • ஏப்ரல் 15, 2011, 10 மில்லியன் கோப்புக்கள்
  • செப்டம்பர் 21, 2011, 11 மில்லியன் கோப்புக்கள்
  • சனவரி 13, 2012, 12 மில்லியன் கோப்புக்கள்
  • சூன் 4, 2012, 13 மில்லியன் கோப்புக்கள்
  • செப்டம்பர் 23, 2012, 14 மில்லியன் கோப்புக்கள்
  • திசம்பர் 4, 2012, 15 மில்லியன் கோப்புக்கள்
  • பெப்ரவரி 2, 2013, 16 மில்லியன் கோப்புக்கள்
  • மே 16, 2013, 17 மில்லியன் கோப்புக்கள்
  • சூலை 14, 2013, 100,000,000 தொகுப்புக்கள்[4]
  • ஆகத்து 15, 2013, 18 மில்லியன் கோப்புக்கள்
  • ஒக்டோபர் 20, 2013, 19 மில்லியன் கோப்புக்கள்
  • சனவரி 25, 2014, 20 மில்லியன் கோப்புக்கள்
  • சனவரி 13, 2016: 30 மில்லியன் கோப்புக்கள்
  • சூன் 21, 2017: 40 மில்லியன் கோப்புக்கள்
  • ஒக்டோபர் 7, 2018: 50 மில்லியன் கோப்புக்கள்
  • மார்ச் 18, 2020: 60 மில்லியன் கோப்புக்கள்
  • பிப்ரவரி 15, 2021: 70 மில்லியன் கோப்புக்கள்
  • சனவரி 11, 2022: 80 மில்லியன் கோப்புக்கள்
  • சனவரி 10, 2023: 90 மில்லியன் கோப்புக்கள்
  • தற்போதைய எண்ணிக்கை: commons:Special:Statistics

ஆண்டின் சிறந்த படிமம்

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகம் பற்றிய மேலதிக தகவல்களைப் பார்க்க தொடர்புடையத் திட்டங்கள்:

விக்சனரி விக்சனரி
நூல்கள் விக்கிநூல்
மேற்கோள் விக்கிமேற்கோள்
மூலங்கள் விக்கிமூலம்
விக்கிபொது
செய்திகள் விக்கிசெய்தி


🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை