மன்னர்களின் சமவெளி (கல்லறை எண் 62)

எகிப்து அரசன் துட்டன்காமினின் கல்லறை

கேவி62 என்பது எகிப்தின் மன்னர்களின் சமவெளியில் உள்ள இளம் பாரோவான துட்டன்காமனின் கல்லறையாகும். அதில் இருந்த விலை மதிப்பற்ற பண்டைய செல்வத்தால் புகழ்பெற்றது. [1] இக்கல்லறையானது 1922 ஆம் ஆண்டு ஹோவர்ட் கார்ட்டரால் கண்டுபிடிக்கப்பட்டது.

KV62
மன்னர்களின் சமவெளியில் காணப்படும்
பிற மன்னர் கல்லறைகளை ஒப்பிடுகையில்
கேவி 62 கல்லறையில் உள்ள சுவர் அல்காரங்கள் எளிமையானவை.
அமைவிடம்மன்னர்களின் சமவெளி (கிழக்கு)
ஆள்கூற்றுகள்25°44′24.8″N 32°36′04.8″E / 25.740222°N 32.601333°E / 25.740222; 32.601333
உரிமையாளர்துட்டன்காமன்

கல்லறை கண்டுபிடிப்பு

கல்லறையின் மூன்றாவது உள்ளறையில் இடப்பட்ட முத்திரை

பிரித்தானிய எகிப்தியல் ஆய்வாளரான ஹாவர்ட் கார்ட்டர் ( லார்ட் கார்னர்வோனிடம் பணியாற்றினார்) எகிப்தின் நைல் நதியோரம் இருக்கும் தீப்ஸ் பகுதியில் தனது ஆய்வை மேற்கொண்டிருந்தார். சில வாரங்கள் தேடியும் எதையும் கண்டறிய இயலவில்லை. அங்கிருந்து கிளம்பலாம் என்று முடிவெடுத்தார்கள். தங்குவதற்காகப் போடப்பட்டிருந்த கூடாரங்களை எல்லாம் கலைத்துக்கொண்டிருந்தார்கள். அப்போது அங்கே தண்ணீர் சுமந்து வந்த எகிப்தியச் சிறுவன் ஒருவன், கல்  தடுக்கிக் கீழே விழுந்தான். [2] இது என்ன கல் என்று குழுவினர் அந்தப் பகுதியைச் சற்று தோண்டினர். அது கீழே இறங்கிச் செல்லும் படிக்கட்டின் ஒரு பகுதி என்பதைக் கண்டுகொண்டனர். அந்தப் படிக்கட்டுகளை மேலும் தோண்டியபோது, பழமையான எகிப்திய ஓவிய எழுத்துகள் கொண்ட கல்வெட்டு ஒன்றைக் கண்டார் ஹோவர்ட். இது மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கல்லறையாக இருக்க வேண்டும் என்று உணர்ந்தார். இதையடுத்து தனக்கு நிதியுதவி அளித்துவந்த லார்ட் கார்னர்வோனுக்கு இது குறித்துத் தந்தி ஒன்றை அனுப்பினார். அவர் இரண்டு வாரங்களுக்குப் பிறகு நவம்பர் 23 இல் தனது 21 வயது மகள் லேடி ஈவ்லின் ஹர்பர்ட் உடன் அங்கே வந்து சேர்ந்தார்.

ஹோவர்ட், கார்னர்வோன் தலைமையில் அகழ்வாய்வாளர்கள் அந்தப் பகுதியைத் தோண்ட ஆரம்பித்தனர். கதவு ஒன்று புலப்பட்டது. கதவைத் திறப்பவர்களை சபிக்கும் வாசகங்களுடன் முத்திரையிடப்பட்ட கதவில் துட்டன்காமன் என்ற பெயரும் பொறிக்கப்பட்டிருந்தது. இதைத் தாண்டி சென்றால் கீழ்நோக்கி பாதை சென்றது. இப்பாதை சுண்ணாம்பு உடைதூள்களால் அடைக்கப்பட்டிருந்தது. இதன் வழியாக கொள்ளையர்கள் உள்ளே வந்து கொள்ளையடிப்பதைத் தடுக்கும் விதத்தில் இது அமைக்கப்பட்டிருந்தது. சுரங்கப்பாதையின் முடிவில் இரண்டாவது முத்திரையிடப்பட்ட கதவு இருந்தது, அது பழங்காலத்தில் திறக்கப்பட்டு மீண்டும் மூடி முத்திரையிடப்பட்டதாக இருந்தது. கார்ட்டர் கதவில் ஒரு துளை செய்து, உள்ளே பார்க்க மெழுகுவர்த்தியைப் பயன்படுத்தினார். "முதலில் என்னால் எதையும் பார்க்க முடியவில்லை," என்று அவர் பின்னர் எழுதினார், "மெழுகுவர்த்தி சுடரில் சுழற்சியை உண்டாக்குகிறவகையில் அறையிலிருந்து சூடான காற்று வெளியேறியது, ஆனால் இப்போது என் கண்கள் ஒளிக்கு பழகி விட்டதால், அறையின் உள்ளே இருந்தவை மெதுவாக புலப்பட்டன. விசித்திரமான விலங்குகள், சிலைகள் மற்றும் தங்கம் - எல்லா இடங்களிலும் தங்கத்தின் பளபளப்பு. " [3] [4] அப்போது கார்னாரோன் கேட்டார், "உங்களுக்கு ஏதாவது தெரிகிறதா?" அதற்கு கார்ட்டர் அளித்த பதில் "ஆமாம், அற்புதமான விஷயங்கள் ..." [3]

ஹோவர்ட் கார்ட்டர் மற்றும் அவரது கூட்டாளிகள் கல்லறையின் கதவுகளை திறக்கும் காட்சி
கேவி62 வரைபடம்
ஈமப்பேழைகளின் வலது பக்க சுவர்கள்
கல்லறையிலுள்ள ஒரு பளிங்குக் குடம்

ஆய்வு

இந்த அகழ்வின் முதல் படிக்கட்டானது 1922 நவம்பர் 4 ஆம் நாள் கண்டுபிடிக்கப்பட்டது. [5] அடுத்த நாளே படிக்கட்டுகளின் முழு தொடர்ச்சியானது கண்டறியப்பட்டது. நவம்பர் மாத முடிவில், மன்னர் அடக்கம் செய்யப்பட்ட அறையையும் கருவூலத்தையும் அணுகினர். நவம்பர் 29 ஆம் நாள், கல்லறை இருந்த அறை திறக்கப்பட்டது, இதற்கடுத்த நாள் இந்தக் கண்டுபிடிப்பு பற்றிய அறிவிப்பும், பத்திரிகையாளர் சந்திப்பும் நடந்தது. கல்லறைக் கட்டடத்தில் இருந்து முதல் பொருளானது திசம்பர் 27 அன்று வெளியே எடுக்கப்பட்டது. [6] பிப்ரவரி 16, 1923 அன்று, புதைக்கப்பட் கல்லறை திறக்கப்பட்டது, [7] மற்றும் ஏப்ரல் 5 அன்று, லார்ட் கார்னாரோன் இறந்தார். 12. பெப்ரவரி 1924 அன்று, சரபோபாகஸின் கருங்கல் மூடியால் முடப்பட்ட ஈமப்பேழையானது வெளியே எடுக்கப்பட்டது. [8] ஏப்ரல் மாதம், கார்ட்டர் தொல்பொருள் பணிக்கு வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அகழ்வாராய்ச்சியிலிருந்து வெளியேறி அமெரிக்காவிற்கு சென்றார்.

1925 சனவரியில், கார்ட்டர் கல்லறை ஆய்வுப் பணிகளை விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்தார், அக்டோபர் 13 ம் தேதி ஈமப்பேழையின் முதல் மூடியை அகற்றினார்; அக்டோபர் 23 அன்று, அவர் ஈமப்பேழையின் இரண்டாம் மூடியையும் அகற்றினார்; அக்டோபர் 28 அன்று, ஈமப்பேழையின் இறுதி மூடியை அகற்றி, மம்மியை வெளிப்படுத்தினார்; மற்றும் நவம்பர் 11 ம் தேதி, துட்டன்காமானின் எஞ்சியுள்ள ஆய்வுப் பணி தொடங்கியது.

பதையல் ஆய்வுப் பணிகள் 1926 அக்டோபர் 24, அக்டோபர் 30 மற்றும் 1927 திசம்பர் 15 ஆகியவற்றுக்கு இடைப்பட்ட காலகட்டங்களில் தொடங்கி நடந்தது. 1930 நவம்பர் 10 இல், இது கண்டுபிடிக்கப்பட்டு எட்டு ஆண்டுகள் கழித்து, கல்லறையில் எஞ்சி இருந்த பொருட்கள் கடைசியாக அகற்றப்பட்டன. [9]

புதையல்

கல்லறை உள்ள அறையை ஒட்டி புதையல் இருந்தது. இதில் 5,000 க்கும் மேற்பட்ட பொருட்கள் இருந்தன. அவற்றில் பெரும்பான்மையானவை இறுதிச்சடங்குக்கான இயற்கைப் பொருட்கள் ஆகும். இந்த அறையில் காணப்பட்ட இரண்டு பெரிய பொருள்களில் மன்னரின் உடலை வைக்கும் உருவுடைய ஈமப்பேழை மற்றும் அனுபிஸ் என்ற கடவுளின் பெரிய சிலை ஆகும். மேலும் அரசரது உள்ளுறுப்புகள் பத்திரப்படுத்தப்பட்ட துட்டன்காமனின் முக வடிவம் கொண்ட நான்கு சாடிகள், தங்கத்தாலான, கலைநயமிக்க விசிறி, செனட் என்ற சதுரங்கம் போன்ற விளையாட்டுப் பலகையும், அதற்கான காய்கள், தங்கத்தாலான சிறுத்தையின் தலை ஒன்று, ப்டா என்ற கடவுள் மற்றும் வேறு சில கடவுள்களின் சிலைகள், தங்க அரியணை, தங்கத் தேர், பளிங்குக்கல்லான அலங்கார வேலைப்பாடுகளுடைய நறுமணத் திரவியத்துக்கான சாடி, தங்கக் காலணி, மன்னரது கால் விரல்களின் மீது பொருத்தப்பட்ட தங்கக் கவசங்கள், இவை தவிர ஓவியங்கள், கலைப்பொருட்கள், நகைகள், ஆயுதங்கள் போன்றவை இருந்தன.[10] [11]

இதனையும் காண்க

குறிப்புகள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்