மோர்பியசு, வாழும் காட்டேரி
மோர்பியசு, வாழும் காட்டேரி (ஆங்கில மொழி: Morbius, the Living Vampire)[1] என்பது மார்வெல் காமிக்சு நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஒரு அமெரிக்க வரைகதை புத்தகத்தில் வரக்கூடிய கனவுருப்புனைவு மீநாயகன் கதாபாத்திரம் ஆகும். இந்தக் கதாபாத்திரத்தை ராய் தோமசு[2] மற்றும் கில் கேன் ஆகியோரால் உருவாக்கப்பட்டது. இவரின் முதல் தோற்றம் அக்டோபர் 1971 இல் வெளியான 'தி அமேசிங் இசுபைடர் மேன்' #101 என்ற கதையில் தோற்றுவிக்கப்பட்டது.[3][4]
மோர்பியசு, வாழும் காட்டேரி | |
---|---|
வெளியீடு தகவல் | |
வெளியீட்டாளர் | மார்வெல் வரைகதை |
முதல் தோன்றியது | தி அமேசிங் இசுபைடர் மேன் #101 (அக்டோபர் 1971) |
உருவாக்கப்பட்டது | ராய் தோமசு கில் கேன் |
கதை தகவல்கள் | |
மாற்று முனைப்பு | டாக்டர் மைக்கேல் மோர்பியஸ் |
இனங்கள் | காட்டேரி |
குழு இணைப்பு | மிட்நைட் சன்ஸ் லெஜியன் ஆஃப் மான்ஸ்டர்ஸ் ஷீல்ட் |
குறிப்பிடத்தக்க கூட்டாளிகள் | டாக்டர். மோர்கன் மைக்கேல்ஸ் நிகோஸ் மைக்கேல்ஸ் |
திறன்கள் |
|
இவர் இசுபைடர் மேனின் திகில் அடிப்படையிலான கதையில் ஒருவராகவும், வேட்டைக்காரன் பிளேட்டின் எதிரியாகவும் அவரது ஆரம்ப நிலை இருந்தபோதிலும், மோர்பியஸ் தனது சொந்த தொடரில் ஒரு மோசமான மற்றும் சோகமான குறைபாடுள்ள கதாநாயகன் ஆவார். இவரது உண்மையான அடையாளம், முன்னாள் விருது பெற்ற உயிர்வேதியியல் வல்லுநர் ஆனா மைக்கேல் மோர்பியஸ் உடல் ரீதியான குணநலன்களால் ஈர்க்கப்பட்டார், அரிய இரத்த நோயைக் குணப்படுத்தும் நோக்கில் தோல்வியுற்ற உயிர்வேதியியல் பரிசோதனைக்குப் பிறகு காட்டேரியாக மாறுகின்றார்.
இந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்கும் விதமாக நடிகர்களான ஜாரெட் லெடோ மற்றும் மேட்டு சுமித்து ஆகியோர் சோனியின் இசுபைடர் மேன் பிரபஞ்சத்தின்[5] திரைப்படமான மோர்பியசு[6] (2021) என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்கள்.[7]
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
- Morbius at the Marvel Universe wiki
- Brief bio at Insania 1998