மோர்பியசு

மோர்பியசு (Morbius) என்பது 2022 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும். இந்த படம் மார்வெல் வரைகதையில் வரும் மோர்பியசு, வாழும் காட்டேரி[3] எனும் கதாப்பாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு கொலம்பியா பிக்சர்ஸ் மற்றும் மார்வெல் மகிழ்கலை[4] போன்ற நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க, சோனி பிக்சர்ஸ் இரிலீசிங் மூலம் விநியோகம் செய்யப்படுகின்றது.[5][6]

மோர்பியசு
இயக்கம்டேனியல் எசுபினோசா
தயாரிப்பு
கதை
  • மாட் சசாமா
  • பர்க் சார்ப்லெசு
மூலக்கதை
இசைஜான் எக்ஸ்ட்ராண்ட்
நடிப்பு
ஒளிப்பதிவுஆலிவர் வூட்[2]
கலையகம்
விநியோகம்சோனி பிக்சர்ஸ் இரிலீசிங்
வெளியீடுசனவரி 28, 2022 (2022-01-28)(ஐக்கிய அமெரிக்கா)
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$75–83 மில்லியன்
மொத்த வருவாய்$126.4 மில்லியன்

இது சோனியின் இசுபைடர் மேன் பிரபஞ்சத்தின் மூன்றாவது படமாகும். மாட் சசாமா மற்றும் பர்க் சார்ப்லெசு ஆகியோரின் திரைக்கதையில் டேனியல் எசுபினோசா என்பவர் இயக்கத்தில், ஜாரெட் லெடோ,[7][8] மேட்டு சுமித்து,[9] அட்ரியா அர்ஜோனா,[10] ஜாரெட் காரிசு,[11] அல் மாட்ரிகல் மற்றும் இடரிசு கிப்சன்[12][13] போன்ற பலர் நடித்துள்ளார்கள். இப் படத்தில் ஒரு அரிய இரத்த நோயை குணப்படுத்த முயன்ற கதாநாயகன் பிறகு மோர்பியசு என்ற ஒரு ஒரு காட்டேரியாக மாறுகிறான்.[14]

2018 இல் வெனம்[15] திரைப்படம் வெளியான பிறகு இசுபைடர் மேன்[16] கதாபாத்திரங்களால் ஈர்க்கப்பட்ட ஒரு புதிய பகிர்ந்த பிரபஞ்சத்திற்கான திட்டங்களை அறிவித்த பிறகு, சோனி நிறுவனம் மோர்பியசை அடிப்படையாகக் கொண்டு ஒன்றை திரைப்படத்தை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. பின்னர் மாட் சசாமா மற்றும் பர்க் சார்ப்லெசு ஆகியோரால் நவம்பர் 2017 க்குள் ஒரு திரைக்கதையை எழுதப்பட்டது. அதை தொடர்ந்து இயக்குனர் டேனியல் எசுபினோசா[17] மற்றும் நடிகர் ஜாரெட் லெடோ[18] ஆகியோர் ஜூன் 2018 இல் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டனர். இப்படத்தின் படப்பிடிப்புகள் பிப்ரவரி 2019 இல் ஆரபிக்கப்பட்டு ஜூன் 2019 க்குள் முடிவடைந்தது.

மோர்பியசு படம் ஜூலை 2020 இல் வெளியிட திட்டமிடப்பட்டது ஆனால் பின்னர் கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக மார்ச் 10, 2022 அன்று மெக்சிகோ நகரத்தில் உள்ள பிளாசா கார்சோவில் திரையிடப்பட்டது, மேலும் ஏப்ரல் 1, 2022 அன்று அமெரிக்காவில் வெளியிடப்பட்டது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=மோர்பியசு&oldid=3415368" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்