வடகிழக்கு பினாங்கு தீவு மாவட்டம்

மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் உள்ள மாவட்டம்

வடகிழக்கு பினாங்கு தீவு மாவட்டம் (ஆங்கிலம்: Northeast Penang Island District; மலாய்: Daerah Timur Laut Pulau Pinang; சீனம்: 马来西亚县份: 东北县); ஜாவி: دايره تيمور لاوت ڤولاو ڤينڠ) என்பது மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். பினாங்கு மாநிலத்தின் ஐந்து மாவட்டங்களில் இந்த மாவட்டமும் ஒன்றாகும்.

வடகிழக்கு பினாங்கு தீவு மாவட்டம்
Northeast Penang Island District
Map
வடகிழக்கு பினாங்கு தீவு மாவட்டம்
வடகிழக்கு பினாங்கு தீவு மாவட்டம் is located in மலேசியா
வடகிழக்கு பினாங்கு தீவு மாவட்டம்
      வடகிழக்கு பினாங்கு தீவு மாவட்டம்
ஆள்கூறுகள்: 5°22′21″N 100°19′03″E / 5.37250°N 100.31750°E / 5.37250; 100.31750
நாடு மலேசியா
மாநிலம் பினாங்கு
மாவட்டம்வடகிழக்கு பினாங்கு தீவு
தொகுதிபுக்கிட் குளுகோர்
அரசு
 • உள்ளூராட்சிபினாங்கு தீவு மாநகராட்சி
பரப்பளவு
 • மொத்தம்122.79 km2 (47.41 sq mi)
மக்கள்தொகை
 (2010)
 • மொத்தம்5,10,996
 • அடர்த்தி4,161.5/km2 (10,778/sq mi)
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
மலேசிய அஞ்சல் குறியீடு
100xx - 108xx
மலேசியத் தொலைபேசி எண்கள்+604
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்P

இந்த மாவட்டத்தில் அமைந்துள்ள ஜார்ஜ் டவுன் நகரம், மாவட்டத்தின் பெரிய நகரமாகவும்; பினாங்கு மாநிலத்தின் தலைநகரமாகவும் விளங்குகிறது. பினாங்குத் தீவின் வடகிழக்குப் பாதியை இந்த ’வடகிழக்கு பினாங்கு தீவு மாவட்டம்’ உள்ளடக்கியது. இந்த மாவட்டத்தின் பரப்பளவு: 122.79 கி.மீ. (47.41 சதுர மைல்).

2010-ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி 510,996 மக்கள்தொகை கொண்டது. இந்த மாவட்டம் தென்மேற்கு பினாங்கு தீவு மாவட்டத்தின் மேற்கில் எல்லையாகக் கொண்டுள்ளது.

வரலாறு

1786-ஆம் ஆண்டில், பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் (British East India Company), பினாங்குத் தீவின் கட்டுப்பாட்டைத் தன்னகப் படுத்தியது. பினாங்குத் தீவின் வடகிழக்கு முனையில் ஜார்ஜ் டவுன் நகரத்தை நிறுவியது.[1][2]

அதன் பின்னர் பல பத்தாண்டுகளாக, ஜார்ஜ் டவுன் நகரில் இருந்து பினாங்குத் தீவு நேரடியாக நிர்வாகம் செய்யப்பட்டு வந்தது. அந்தக் கட்டத்தில், பினாங்கில் எந்த ஒரு நிர்வாகப் பிரிவும் அமைக்கப்படவில்லை.

இரு மாவட்டங்களாகப் பினாங்கு தீவு

1888-ஆம் ஆண்டில், பினாங்குத் தீவின் தென்மேற்கில் உள்ள பாலிக் புலாவ் பகுதியில் ஒரு மாவட்டமும்; ஒரு நில அலுவலகமும் நிறுவப்பட்டது. இவ்வாறு தான், தென்மேற்கு பினாங்கு தீவு மாவட்டம் உருவாக்கப்பட்டது.

அந்த வகையில், அப்போதையக் காலக்கட்டத்தில், பினாங்கு தீவு இரண்டு பெரும் மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு இருந்தது. இரண்டு மாவட்டங்களும் 1890-ஆம் ஆண்டுகளில் பினாங்கின் அதிகாரப்பூர்வ வரைபடங்களில் காட்சிப்படுத்தபட்டு இருந்தன.[3]

புவியியல்

வடகிழக்கு பினாங்கு தீவு மாவட்டத்தின் நில அலுவலகம், பினாங்கு மாநிலத்தின் தலைநகரான ஜார்ஜ் டவுனின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த மாவட்டம் ஜார்ஜ் டவுனின் புறநகர்ப் பகுதிகளை உள்ளடக்கியது. அந்தப் புறநகர்ப் பகுதிகள்:

இந்த வடகிழக்கு பினாங்கு தீவு மாவட்டத்தில் பினாங்கு தீவின் மத்திய மலைத்தொடர்களும் அமைந்து உள்ளன. அந்த மலைத் தொடரில் உள்ள பினாங்கு மலை, பினாங்கு தீவில் மிக உயரமான சிகரமாகும். அந்தப் பினாங்கு மலை, இந்த மாவட்டத்திற்குள் தான் உள்ளது. பினாங்கு மலை, ஒரு முக்கியச் சுற்றுலாத் தலமாக செயல்படுகிறது.[4]

மக்கள்தொகையியல்

ஜார்ஜ் டவுன் வடகிழக்கு பினாங்கு தீவு மாவட்டத்தின் மையமாகச் செயல்படுகிறது.

கீழ்க்காணும் புள்ளிவிவரங்கள், 2010-ஆம் ஆண்டு, மலேசியாவின் புள்ளியியல் துறையால் நடத்தப்பட்ட தேசிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் வழங்கப் படுகிறது.

வடகிழக்கு பினாங்கு தீவில் உள்ள மக்கள் தொகை
இனம்மக்கள் தொகைவிழுக்காடு (%)
மலாய்க்காரர்கள்107,24320.99
இதர பூமிபுத்ரா மக்கள்2,3530.46
சீனர்கள்316,17261.87
இந்தியர்கள்51,46810.07
பிற இனத்தவர்கள்2,0830.41
மலேசியர் அல்லாத குடிமக்கள்31,6776.20
மொத்தம்510,996100.00

வடகிழக்கு பினாங்கு தீவு மாவட்டத்தின் தமிழ்ப்பள்ளிகள்

மலேசியா; பினாங்கு; வடகிழக்கு பினாங்கு தீவு மாவட்டத்தில் (North Seberang Perai District); 5 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் 864 மாணவர்கள் பயில்கிறார்கள். 92 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். மலேசியக் கல்வியமைச்சு 2020 ஜனவரி மாதம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள்.[5]

பள்ளி
எண்
இடம்பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
அஞ்சல் குறியீடுவட்டாரம்மாணவர்கள்ஆசிரியர்கள்
PBD1082ஜாலான் கெபூன் பூங்ஙாSJK(T) Azadஆசாத் தமிழ்ப்பள்ளி10350ஜார்ஜ் டவுன்8113
PBD1084கம்போங் பாருSJK(T) Rajajiராஜாஜி தமிழ்ப்பள்ளி11400ஆயர் ஈத்தாம்7611
PBD1085ஜாலான் ஸ்காட்லாண்ட்SJK(T) Ramakrishnaராமகிருஷ்ணா தமிழ்ப்பள்ளி10450ஜார்ஜ் டவுன்28825
PBD1086ஜாலான் சுங்கைSJK(T) Jalan Sungaiஜாலான் சுங்கை தமிழ்ப்பள்ளி10150ஜார்ஜ் டவுன்11119
PBD1088குளுகோர்SJK(T) Subramaniya Baratheeசுப்பிரமணிய பாரதி தமிழ்ப்பள்ளி11700குளுகோர்27324

பினாங்கு மாநிலத்தில் உள்ள மாவட்டங்கள்

புள்ளி விவரங்கள்

  • "Population Distribution and Basic Demographic Characteristics, 2010" (PDF). Department of Statistics, Malaysia. Archived from the original (PDF) on 22 May 2014.
  • "2017 Q2 statistics" (PDF). Penang Institute. Archived from the original (PDF) on 2017-12-01.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Northeast Penang Island
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்