ஜெட்கனெக்ட்

ஜெட் லைட் லிமிடெட்டின் சந்தைப் பெயர் ஜெட்கனெக்ட் (JetKonnect) ஆகும். முதலில் இது ஜெட் ஏர்வேஸ் கனெக்ட் என அழைக்கப்பட்டது. ஜெட் லைட் லிமிடெட் மும்பையினை மையமாகக் கொண்டு செயல்படும் விமான சேவையாகும்.[2] ஜெட் ஏர்வேஸ்க்கு சொந்தமான இந்த நிறுவனம், இந்தியாவின் பல்வேறு பெருநகரங்களை இணைப்பதில் முக்கியப் பங்காற்றுகிறது.

ஜெட்கனெக்ட்
IATAICAOஅழைப்புக் குறியீடு
S2JLLLITE JET
நிறுவல்1991 (சஹாரா ஏர்லைன்ஸ்)
மையங்கள்
இரண்டாம் நிலை மையங்கள்
கவன செலுத்தல் மாநகரங்கள்
அடிக்கடி பறப்பவர் திட்டம்ஜெட் பிரிவிலெஜ்
வானூர்தி எண்ணிக்கை19 (+ 6 orders)[1]
சேரிடங்கள்42
தாய் நிறுவனம்டெயில்வின்ட்ஸ் லிமிட்டெடு
தலைமையிடம்மும்பை, இந்தியா
முக்கிய நபர்கள்
நரேஷ் கோயல் (உரிமையாளர்)
வலைத்தளம்http://www.jetkonnect.com

வரலாறு

இந்த விமானச் சேவை செப்டம்பர் 20, 1991 ல் நிறுவப்பட்டது. இருப்பினும் இதன் செயல்பாடுகள் டிசம்பர் 3, 1993 ஆம் ஆண்டு முதல் இரு போயிங்க் 737-200 விமானங்களைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டன. சஹாரா விமான சேவையாகத்தான் இதன் செயல்பாடுகள் இருந்தன. ஆரம்ப காலத்தில் இதன் சேவைகள் வடஇந்தியாவில் மட்டும் இருந்தாலும் பின்பு இந்தியா முழுவதும் விரிவாக்கப்பட்டது. சஹாரா நிறுவனத்தின் இந்த விமானசேவை “ஏர் சஹாரா” என அக்டோபர் 2, 2000 மாற்றம் செய்யப்பட்டது. இருப்பினும் பதிவு செய்யப்பட்ட பெயராக சஹரா ஏர்லைன்ஸே இருந்தது. மார்ச் 22, 2004 ல் சர்வதேச விமான சேவையாக உயர்ந்தது. சர்வதேச விமானசேவையின் முதல் படியாக சென்னையிலிருந்து கொழும்புக்கு விமானத்தினை அனுப்பியது பின்பு லண்டன்[3], சிங்கப்பூர், மாலத்தீவுகள்[4] மற்றும் காட்மாண்டூ எனத் தனது சேவையினை பெருக்கிக்கொண்டது. இந்த விமானச் சேவையின் நிலையின்மை காரணத்தால், இதன் இந்திய உள்நாட்டு வான்வழிப் போக்குவரத்துச் சந்தைப் பங்குகளின் விலை ஜனவரி 2006 இல் 11% இருந்து ஏப்ரல் 2007 இல் 8.5% ஆகக் குறைந்தது.

ஜெட் ஏர்வேசால் வாங்கப்படல்

ஜெட் ஏர்வேஸ் ஜனவரி 19, 2006 ல் 500 மில்லியன் டாலர்கள் கொடுத்து ஏர் சஹாராவினை வாங்க முன்வந்தது.[5] ஆனால் விலை மற்றும் தலைவர் நியமனம் ஆகியவற்றில் முரண்பட்டக் காரணங்களால் அம் முயற்சி கைவிடப்பட்டது முதல் பரிசீலணையின் தோல்விக்குப் பிறகு ஏப்ரல் 12, 2007 ல் ஜெட் ஏர்வேஸ் 340 மில்லியன் டாலர்களுக்கு ஏர் சஹாராவினை வாங்கியது இத் தொகை இந்திய மதிப்பின் படி 14.50 மில்லியன் ரூபாய் ஆகும். பின்னர் ஏர் சஹாரா இனி ஜெட் லைட் என்ற பெயருடன் இயங்கும் என ஏப்ரல் 16 ஆம் தேதி ஜெட் ஏர்வேஸ் அறிவித்தது.

ஜெட்கனெக்ட்டாக மாற்றம்

மார்ச் 20, 2012 ல் ஜெட்லைட், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்குள் ஒன்றானது. இதன் மூலம் ஜெட்கனெக்ட் ஒரு தனிப்பட்ட விமானசேவை நிறுவனமாக வெளிப்பட்டது.[6]

இலக்குகள்

அக்டோபர் 2013 ன் படி, ஜெட்கனெக்ட் பின்வரும் நகரங்களுக்கு தனது சேவையினைப் புரிகிறது.[7]

  • அந்தமான் நிக்கோபர் தீவுகள்
  • ஆந்திர பிரதேசம்
    • ராஜ முந்திரி – ராஜமுந்திரி வானூர்தி நிலையம்
    • விசாகப்பட்டினம் – விசாகப்பட்டினம் வானூர்தி நிலையம்
  • அசாம்
    • திபுர்கார்க் – மோஹன்பாரி வானூர்தி நிலையம்
    • கவுகாத்தி – லோக்பிரியா கோபிநாத் பார்டோலி பன்னாட்டு வானூர்தி நிலையம்
    • ஜோர்காட் – ஜோர்ஹாட் வானூர்தி நிலையம்
    • சில்ஜார் – சில்ஜார் வானூர்தி நிலையம்
  • பீகார்
    • பாட்னா – லோக் நாயக் ஜெயபிரகாஷ் வானூர்தி நிலையம்
  • சத்தீஸ்கர்
    • ராய்பூர் – ராய்பூர் வானூர்தி நிலையம்
  • டெல்லி
    • இந்திரா காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம்
  • கோவா
    • தபோலிம் வானூர்தி நிலையம்
  • குஜராத்
    • அஹமதபாத் – சர்தார் வல்லபாய் படேல் பன்னாட்டு வானூர்தி நிலையம்
    • ராஜ்கோட் – ராஜ்கோட் வானூர்தி நிலையம்
    • வடோதரா – வடோதரா வானூர்தி நிலையம்
  • ஜம்மு மற்றும் காஷ்மீர்
    • ஜம்மு – ஜம்மு வானூர்தி நிலையம்
    • ஸ்ரீநகர் – ஸ்ரீநகர் வானூர்தி நிலையம்
  • ஜார்கண்ட்
    • ராஞ்சி – பிர்சா முண்டா வானூர்தி நிலையம்
  • கர்நாடகா
    • பெங்களூர் – பெங்களூர் பன்னாட்டு வானூர்தி நிலையம்
    • மங்களூர் – மங்களூர் பன்னாட்டு வானூர்தி நிலையம்
  • கேரளா
    • கொச்சி – கொச்சி பன்னாட்டு வானூர்தி நிலையம்
    • கோழிக்கோடு – கோழிக்கோடு பன்னாட்டு வானூர்தி நிலையம்
    • திருவனந்தபுரம் – திருவனந்தபுரம் பன்னாட்டு வானூர்தி நிலையம்
  • மத்திய பிரதேசம்
    • இந்தூர் – தேவி அஹில்யாபி ஹோல்கர் வானூர்தி நிலையம்
    • போபால் – ராஜா போஜ் வானூர்தி நிலையம்
  • மஹாராஷ்டிரா
    • அவுரங்கபாத் – ஜிக்கல்தான விமான நிலையம்
    • மும்பை – சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம் (மையம்)
    • நாக்பூர் – டாக்டர். பாபாசாகிப் அம்பேத்கர் சர்வதேச விமான நிலையம்
    • புனே – புனே வானூர்தி நிலையம்
  • மணிப்பூர்
    • இம்பால் – துளிஹால் பன்னாட்டு வானூர்தி நிலையம்
  • மிசோராம்
    • ஐஸ்வால் – லெக்புயி வானூர்தி நிலையம்
  • ஒடிசா
    • புவனேஸ்வர் – பிஜூ பட்நாயக் வானூர்தி நிலையம்
  • பஞ்சாப்'
    • அமிர்தசரஸ் – ஸ்ரீ குருராம் தாஸ் ஜீ பன்னாட்டு வானூர்தி நிலையம்
  • ராஜஸ்தான்
    • உதய்பூர் – மஹரானா பிரதாப் வானூர்தி நிலையம்
  • தமிழ்நாடு
    • சென்னை – சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம்
    • கோயம்புத்தூர் – கோயம்புத்தூர் வானூர்தி நிலையம்
    • திருச்சிராப்பள்ளி – திருச்சிராப்பள்ளி பன்னாட்டு வானூர்தி நிலையம்
  • தெலுங்கானா
    • ஹைதராபாத் – ராஜிவ் காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம்
  • திரிபுரா
    • அகர்டாலா – அகர்டாலா வானூர்தி நிலையம்
  • உத்தர பிரதேசம்
    • கோரக்பூர் – கோரக்பூர் வானூர்தி நிலையம்
  • மேற்கு வங்காளம்
    • பக்டோக்ரா – பக்டோக்ரா வானூர்தி நிலையம்
    • கொல்கத்தா – நேதாஜி சுபாஷ் சந்திரா போஸ் பன்னாட்டு வானூர்தி நிலையம் (மையம்)

விமான குழு விவரங்கள்

இந்தியாவின் 55 இடங்களுக்கான விமானசேவையினை ஜெட் கனெக்ட் விமான சேவை செய்கிறது. போயிங்க் 737 ரக, 15 விமானங்களைக் கொண்ட குழுவாக ஜெட் கனெக்ட் செயல்படுகிறது.[8]

குறிப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஜெட்கனெக்ட்&oldid=3930452" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்