மணிப்பூர்

இந்திய மாநிலம்

மணிப்பூர் (Manipur), வடகிழக்கு இந்தியாவிலுள்ள ஒரு மாநிலமாகும். மணிப்பூர் முன்னர் பிரித்தானிய இந்தியாவில் 1947 வரை முடியாட்சியுடன் கூடிய மணிப்பூர் இராச்சியமாக விளங்கியது. 1949-இல் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. 1956 வரை இந்தியாவின் ஒன்றியப் பகுதியாக இருந்தது. 1972-இல் தனி மாநிலத் தகுதி கிடைத்தது.

மணிப்பூர்
Kangleipak (மணிப்புரியம்)
மாநிலம்
மேலிருந்து கடிகார திசையில்: ஸ்ரீ ஸ்ரீ கோவிந்தஜீ கோயில், கங்லாஷாகளின் இரட்டைச் சிலைகள், லோக்டாக் ஏரி, இபுத்தௌ பகாங்ப லைஷாங், சனாமாஹிஸ்ட் கடவுள் பகங்பா காங்லா அரண்மனை உள்ளே, மணிப்புரி நடனம்

சின்னம்
குறிக்கோளுரை: கங்லாஷா
(டிராகன் பிரபு)
பண்: சனா லீபக் மணிப்பூர்[1]
(மணிப்பூர் தங்க நிலம்)
மணிப்பூர், இந்தியாவின் ஒரு மாநிலம்
நாடு இந்தியா
இந்தியாவுடன் இணைந்தது15 அக்டோபர் 1949[2]
தலைநகரம்இம்பால்
மாவட்டங்கள்16
அரசு
 • நிர்வாகம்மணிப்பூர் அரசு
 • ஆளுநர்[அனுசுயா உய்கே ]][3]
 • முதலமைச்சர்ந. பீரேன் சிங் (பா.ச.க.)[4]
 • சட்டப் பேரவைமணிப்பூர் சட்டமன்றம்
ஓரவை (60 தொகுதிகள்)
 • நாடாளுமன்ற தொகுதிகள்
 •  உயர் நீதிமன்றம்மணிப்பூர் உயர் நீதிமன்றம்
பரப்பளவு
 • மொத்தம்22,327 km2 (8,621 sq mi)
பரப்பளவு தரவரிசை23வது
மக்கள்தொகை (2011[5])
 • மொத்தம்28,55,794
 • தரவரிசை23வது
 • அடர்த்தி130/km2 (330/sq mi)
மொழிகள்
 • மாநில மொழிமணிப்புரியம்[6][7]
மொ.உ.உ. (2017–18)
 • ஜி.எஸ்.டி.பி.23,968 கோடி (US$3.0 பில்லியன்)
 • தனிநபர் மொ.உ.உ.75,226 (US$940)
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+05:30)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுIN-MN
ம.மே.சு. (2018) 0.696[8]
மத்திமம் · 15வது
படிப்பறிவு79.85% (16வது)
இணையதளம்manipur.gov.in

manipur.nic.in

சின்னங்கள்
சின்னம்கங்லா ஷா
மொழிமணிப்புரியம்
பாடல்"சனா லீபக் மணிப்பூர்"
(மணிப்பூர் தங்க நிலம்)
விலங்கு
சங்காய் மான் (ருசெர்வஸ் எல்டி எல்டி)
பறவை
பகட்டு வண்ணக் கோழி (சிர்மாடிகசு ஹுமியா)
Fish
பென்காபா[9]
மலர்
சிரோய் லில்லி (லிலியம் மாக்லினியா)
மரம்
யுனிங்தோ (ஃபோப் ஹைனேசியானா)
இது வட-கிழக்கு பகுதிகள் (மறுசீரமைப்பு) சட்டம், 1971 மூலம் யூனியன் பிரதேசத்தின் அந்தஸ்தில் இருந்து உயர்த்தப்பட்டது.

இதன் தலை நகரம் இம்பால். மணிப்பூர், இந்திய மாநிலங்களான நாகலாந்து, மிஸோரம், அஸ்ஸாம் என்பவற்றை முறையே, வடக்கு, தெற்கு, மேற்கு ஆகிய திசைகளிலும், கிழக்கில் மியன்மாருடன் அனைத்துலக எல்லையொன்றையும் கொண்டுள்ளது.

இந்த மாநிலத்தில் பெரும்பாலான குடிமக்கள் மைத்தி (Meitei) இனத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் (Meiteilon) மணிப்பூரி என்றழைக்கப்படும் தம் பரம்பரை மைத்தி மொழியைப் பேசி வருகின்றனர். இம்மொழி 1992ஆம் ஆண்டில் இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் ஒன்றாகச் சேர்க்கப்பட்டது.

இரண்டாம் உலகப் போரின் போது சப்பானியப் படைகளுக்கும் கூட்டுப் படைகளுக்கும் இடையே நடைபெற்ற கடும்போரின் பல சண்டைகளுக்கு இப்பிரதேசம் களமாக விளங்கிற்று. ஜப்பானிய படைகள் கிழக்காசியாவில் வெற்றி கண்டு மணிப்பூர் வரை தாக்கினர். ஆனால் இம்பால் நகரை தம் ஆட்சிக்குள் கொண்டு வர முயலும்போது அவர்கள் தோல்வியடைந்தனர். போரின் தொடர்ச்சியில் இந்நிகழ்வு ஒரு திருப்புமுனையாய் விளங்கியது. அப்போரில் காலமான இந்திய போர்வீரர்களுக்கும் கூட்டுப்படை போர்வீரர்களுக்கும் British War Graves Commission தற்போது அங்கு இரு சுடுகாடுகளை பராமரித்து வருகின்றது.

மணிப்பூர் ஒரு பதட்டமான எல்லையோர மாநிலமாகக் கருதப்படுகிறது. இந்திய குடிமக்கள் அல்லாதவர்கள் இம்மாநிலத்தினுள் செல்ல தில்லி, மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் உள்ள வட்டார அயல்நாட்டினர் பதிவு அலுவலகத்தில் கட்டுபடுத்தப்பட்ட பகுதிக்கான நுழைவு அனுமதிச் சீட்டு பெற வேண்டும். இந்த சட்டம் மணிப்பூரில் பிறந்து பிற நாடுகளில் குடியேறிய மைத்தி மக்களுக்குங்கூட பொருந்தும். இந்த சிறப்பு அனுமதியைப் பெற்றவர்கள் பத்து நாட்களுக்கு மணிப்பூரில் தங்கலாம். அக்காலகட்டத்தில் அவர்கள் குறைந்தது மூன்று சக பயணிகளுடன் சேர்ந்து அரசாங்க உத்தரவு பெற்ற பயண அதிகாரி ஏற்பாடு செய்த பயண திட்டத்தைப் பின்பற்றிச் செல்ல வேண்டும். அத்துடன், வெளிநாட்டுப் பயணிகள் விமானத்தின் மூலமாய் மட்டுமே இம்பாலினுள் அனுமதிக்கப்படுவர். அவர்கள் இம்பால் நகரத்தைத் தவிர வேறு எந்த இடத்திற்கும் செல்ல அனுமதிக்கப் பட மாட்டார்கள்.

ஆட்சிப் பிரிவுகள்

மணிப்பூர் மாவட்டங்கள்

மணிப்பூரில் 8 டிசம்பர் 2016-க்கு முன்னர் 9 மாவட்டங்கள் மட்டும் இருந்தது. பின்னர் 8 டிசம்பர் 2016-இல் 7 புதிய மாவட்டங்கள் நிறுவப்பட்டதால் தற்போது 16 மாவட்டங்கள் உள்ளது.[10]

வ எண்மாவட்டம்பரப்பளவு
(சதுர கி.மீ)
மக்கள்தலைநகரம்வரைபடக் குறியீடு
1பிஷ்ணுபூர் மாவட்டம்496237,399பிஷ்ணுபூர்BI
2சுராசாந்துபூர் மாவட்டம்4570274,143சுராசந்த்பூர்CC
3சந்தேல் மாவட்டம்3313144,182சந்தேல்CD
4கிழக்கு இம்பால் மாவட்டம்709456,113பொரோம்பாட்EI
5மேற்கு இம்பால் மாவட்டம்519517,992லம்பேல்பட்WI
6சேனாபதி மாவட்டம்3271193,744சேனாபதிSE
7தமெங்கலாங் மாவட்டம்4391140,651தமெங்கலாங்TA
8தவுபல் மாவட்டம்514422,168தவுபல்TH
9உக்ருல் மாவட்டம்4544183,998உக்ருல்UK
10ஜிரிபாம் மாவட்டம்43,818ஜிரிபாம்
11காக்சிங் மாவட்டம்1,35,481காக்சிங்https://kakching.nic.in
12காம்ஜோங் மாவட்டம்45,616காம்ஜோங்
13காங்போக்பி மாவட்டம்காங்போக்பி
14நோனி மாவட்டம்லாங்மாய்
15தேங்க்னோவ்பல் மாவட்டம்தேங்க்னோவ்பல்
16பெர்சவல் மாவட்டம்2,28547,250பெர்சல்pherzawldistrict.com

கலை மற்றும் பண்பாடு

கிருஷ்ணரின் ராசலீலை காட்சிகளை விளக்கும் மணிப்புரி நடனமாடும் பெண்கள்
மணிப்புரி நடனம்
மணிப்பூரின் பண்டைய பெனா இசைக் கருவி

கிருஷ்ணன், ராதை மற்றும் கொபியர்களுடன் ஆடும் ராசலீலையை விளக்கும், மணிப்புரி நடனம் மணிப்பூர் மாநிலத்தில் பிறந்த நடனக் கலையாகும். மணிப்புரி நடனத்தை பெண்களுடன் ஆண்களும் ஆடுகின்றனர்.

மக்கள் தொகையியல்

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மணிப்பூர் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 2,855,794 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 70.79% மக்களும், நகரப்புறங்களில் 29.21% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 24.50% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 1,438,586 ஆண்களும் மற்றும் 1,417,208 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 985 பெண்கள் வீதம் உள்ளனர். 22,327 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தில் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 128 மக்கள் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 76.94 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 83.58 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 70.26 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 375,357 ஆக உள்ளது. [11]

சமயம்

இம்மாநிலத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 1,181,876 (41.39 %) ஆகவும் இசுலாமிய சமய மக்கள் தொகை 239,836 (8.40 %) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 1,179,043 (41.29 %) ஆகவும், சமண சமய மக்கள் தொகை 1,692 (0.06 %) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 7,084 (0.25 %) ஆகவும், சீக்கிய சமய மக்கள் தொகை 1,527 (0.05 %) ஆகவும், பிற சமயத்து மக்கள் தொகை 233,767(8.19 %) ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 10,969 (0.38 %) ஆகவும் உள்ளது.

மொழிகள்

இம்மாநிலத்தின் ஆட்சி மொழியான மணிப்புரியம் மொழியுடன், வங்காளம், இந்தி மற்றும் இருபத்து ஒன்பது பழங்குடி இன மொழிகளும் பேசப்படுகிறது.

பழங்குடிகள்

மீதெய் பழங்குடி மக்கள் மணிப்பூர் மாநிலத்தின் பெரும்பான்மையின பழங்குடிகள் ஆவர். அதற்கு அடுத்து தடௌஸ் மற்றும் நாகா பழங்குடி மக்கள் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தில் உள்ளனர்.

குக்கி மற்றும் நாகா பழங்குடியின மக்களிடையே அடிக்கடி மோதல்கள் நடைபெறுகிறது.[12]

வரலாறு

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=மணிப்பூர்&oldid=3776152" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை