மும்பை

இது மகாராஷ்டிரா மாநிலத் தலைநகரமும் மற்றும் ஓர் பெருநகர மாநகராட்சியும் ஆகும்.

மும்பை (1995 வரை அதிகாரப்பூர்வமாக பம்பாய் என அழைக்கப்பட்டது) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தின் தலைநகரம் மற்றும் இந்தியாவின் நடைமுறைப்படியான நிதி மையமாகும். ஐக்கிய நாடுகள் அவையின் கூற்றுப்படி, 2018-ஆம் ஆண்டு நிலவரப்படி, தில்லிக்கு அடுத்தபடியாக இந்தியாவில் அதிக மக்கள்தொகை கொண்ட இரண்டாவது நகரமாக மும்பை உள்ளது மேலும் தோராயமாக 2 கோடி (20 மில்லியன்) மக்கள்தொகை கொண்டதாக, உலகின் எட்டாவது அதிக மக்கள்தொகை கொண்ட நகரமாக உள்ளது. 2011-ஆம் ஆண்டின் இந்திய அரசாங்க மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, பெருநகரமும்பையின் எல்லையில் வசித்த 1.25 கோடி (12.5 மில்லியன்) மக்கள்தொகையுடன், இந்தியாவின் அதிக மக்கள்தொகை கொண்ட நகரமாக மும்பை இருந்தது.[15] மும்பை மும்பை பெருநகரப் பகுதியின் மையமாக உள்ளது, 2.3 கோடி (23 மில்லியன்) மக்கள்தொகை கொண்டு உலகின் ஆறாவது அதிக மக்கள்தொகை கொண்ட பெருநகரப் பகுதியாக உள்ளது.[16] மும்பை இந்தியாவின் மேற்கு கடற்கரையில் கொங்கன் கடற்கரையில் அமைந்துள்ளது. இங்கு ஆழமான இயற்கை துறைமுகம் உள்ளது. 2008-ஆம் ஆண்டில், மும்பை ஆல்பா உலக நகரமாக அறிவிக்கப்பட்டது.[17][18] இந்தியாவில் உள்ள எல்லா நகரங்களையும் விட மும்பையில் அதிக எண்ணிக்கையிலான மில்லியனர்களும், பில்லியனர்கள் உள்ளனர்.

மும்பை

मुंबई (மராத்தி)

பம்பாய்
மாநில தலைநகரம்

சின்னம்
அடைபெயர்(கள்): தூங்கா மாநகரம், கனவுகளின் நகரம், ஏழு தீவுகள் நகரம்,[1]இந்தியாவின் ஆலிவுட்,[2] இந்தியாவின் நுழைவாயில் (மும்பை)
Map
மும்பை வரைபடம்
மும்பை is located in Mumbai
மும்பை
மும்பை
மும்பையில் இருப்பிடம்
மும்பை is located in மகாராட்டிரம்
மும்பை
மும்பை
மகாராஷ்டிராவில் இருப்பிடம்
மும்பை is located in இந்தியா
மும்பை
மும்பை
இந்தியாவில் இருப்பிடம்
ஆள்கூறுகள்: 19°04′34″N 72°52′39″E / 19.07611°N 72.87750°E / 19.07611; 72.87750
நாடு இந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
கோட்டம்கொங்கண்
மாவட்டம்மும்பை மாநகரம்
மும்பை புறநகர்
முதலில் குடியேறியது1507[சான்று தேவை]
பெயர்ச்சூட்டுமும்பா தேவி கோவில்
அரசு
 • வகைமாநகராட்சி மன்றம்
 • நிர்வாகம்பெருநகரமும்பை மாநகராட்சி
பரப்பளவு
 • மொத்தம்603.4 km2 (233.0 sq mi)
 • Metro[3]4,355 km2 (1,681.5 sq mi)
ஏற்றம்14 m (46 ft)
மக்கள்தொகை (2011)[4]
 • மொத்தம்12,478,447
 • தரவரிசைமுதல் இடம்
 • அடர்த்தி21,000/km2 (54,000/sq mi)
 • பெருநகர்[5]18,414,288
20,748,395 (Extended UA)
இனங்கள்மும்பைகர்[6]
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்கள்400 001 to 400 107
தொலைபேசி குறியீடு+91-22
வாகனப் பதிவு
  • MH-01 Mumbai(S/C), MH-02 Mumbai(W), MH-03 Mumbai(E), MH-47 Borivali
[7]
GDP (PPP)$606.625 billion[8][9][10][11]
HDI (2011) 0.846[12] (very high)
ஆட்சி மொழிமராத்தி[13][14]
இணையதளம்www.mcgm.gov.inmumbaicity.gov.in
அலுவல் பெயர்எலிபண்டா குகைகள், சத்திரபதி சிவாசி தொடருந்து நிலையம், மும்பையின் விக்டோரியன் மற்றும் ஆர்ட் டெகோ குழுமம்
வகைCultural
வரன்முறைi, ii, iii, iv
தெரியப்பட்டது1987, 2004, 2018 (11th, 28th 42nd sessions)
உசாவு எண்[1]; [2][3]
RegionSouthern Asia

மும்பையை உள்ளடக்கிய ஏழு தீவுகள் ஒரு காலத்தில் மராத்திய மொழி பேசும் கோலி மக்களின் தாயகமாக இருந்தது.[19][20] அடுத்தடுத்த பூர்வீக ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்த பம்பாயின் ஏழு தீவுகள் பின்னர் போர்த்துகல் பேரரசின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. பின்னர் இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசை கேத்தரின் திருமணம் செய்தபோது, வரதட்சணை மூலம் வந்த்த பிறகு 1661-இல் கிழக்கிந்திய நிறுவனத்திடம் வந்து சேர்ந்தது. 18-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், பம்பாய் ஹார்ன்பி வெல்லார்ட் திட்டத்தால் மறுவடிவமைப்பு செய்யபட்டது.[21] இது கடலில் இருந்து ஏழு தீவுகளுக்கு இடையில் உள்ள பகுதியை ஒருங்கிணைத்தது. முக்கிய சாலைகள் மற்றும் தொடருந்து பாதைகள் கட்டுமானத்துடன், 1845-இல் முடிக்கப்பட்ட சீரமைப்புத் திட்டத்தால், பம்பாய் அரபிக்கடலில் ஒரு பெரிய துறைமுகமாக மாறியது. 19-ஆம் நூற்றாண்டில் பம்பாய் அதன் பொருளாதாரம் மற்றும் கல்வி வளர்ச்சியால் குறிப்பிடத்தக்க ஒன்றாக வளர்த்தெடுக்கபட்டது. 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பம்பாய் இந்திய விடுதலை இயக்கத்திற்கான வலுவான தளமாக மாறியது. 1947-இல் இந்தியா விடுதலை அடைந்தவுடன், நகரம் பம்பாய் மாநிலத்துடன் இணைக்கப்பட்டது. 1960-இல், சம்யுக்தா மகாராஷ்டிரா இயக்கத்தைத் தொடர்ந்து, பம்பாயைத் தலைநகராகக் கொண்டு புதிய மகாராட்டிர மாநிலம் உருவாக்கப்பட்டது.[22]

மும்பையானது இந்தியாவின் நிதி, வணிக, பொழுதுபோக்கு தலைநகரம் ஆகும். இது உலகளாவிய நிதி செயல்பாடுகளின் அடிப்படையில் உலகின் முதல் பத்து வர்த்தக மையங்களில் ஒன்றாக உளது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.16%,[23] தொழில்துறை உற்பத்தியில் 25%, இந்தியாவில் கடல்சார் வர்த்தகத்தில் 70% (மும்பை துறைமுக பொறுப்புக் கழகம் மற்றும் ஜவஹர்லால் நேரு துறைமுகம்),[24] இந்தியாவின் பொருளாதாரத்தில் மூலதன பரிவர்த்தனையில் 70% விகிதங்களை மும்பை கொண்டுள்ளது.[25] உலகின் எந்த நகரத்திலும் இல்லாத வகையில் மும்பையில் எட்டு மிகப்பெரிய பில்லியனர்கள் உள்ளனர்.[26] மேலும் 2008 இல் மும்பையின் பில்லியனர்கள் உலகின் எந்த நகரத்திலும் இல்லாத சராசரி அளவு சொத்துக்களைக் கொண்டிருந்தனர்.[27][28] இந்த நகரத்தில் பல முக்கிய இந்திய நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் பெருநிறுவன தலைமையகங்கள் உள்ளன. இது இந்தியாவின் சில முதன்மையான அறிவியல் மற்றும் அணுசக்தி நிறுவனங்களின் அமைவிடமாகவும் உள்ளது. இந்த நகரம் பாலிவுட் மற்றும் மராத்தி திரைப்படத் தொழில்களின் அமைவிடமாகவும் உள்ளது. மும்பையின் வணிக வாய்ப்புகள் இந்தியா முழுவதிலும் இருந்து வரும் புலம்பெயர்ந்தோரை ஈர்க்கின்றது.

சொற்பிறப்பியல்

மும்பை (மராத்தி: मुंबई, குசராத்தி: મુંબઈ, இந்தி : मुंबई) என்ற பெயர் மும்பா அல்லது மஹா-அம்பா என்ற சொல்லிலிருந்து வந்தது. இது பூர்வீக கோலி சமூகத்தின் குலதெய்வமான மும்பா தேவியின் பெயர். இது மகாராட்டிராத்தின் அதிகாரப்பூர்வ மொழியும், கோலி மக்களின் தாய் மொழியுமான மராத்திய மொழி பெயராகும்.[19] கோலி மக்கள் கத்தியவார் மற்றும் மத்திய குஜராத்தில் தோன்றியவர்களாவர், மேலும் சில ஆதாரங்களின்படி அவர்கள் தங்கள் தெய்வமான மும்பாவை கத்தியவாரில் (குஜராத்) இருந்து கொண்டு வந்தனர். அங்கு முப்பாதேவி இன்னும் வழிபடப்படுகிறார்.[20] இருப்பினும், மும்பையின் பெயர் மும்பா தேவியின் பெயரில் இருந்து வந்தது என்பதை மற்ற ஆதாரங்களில் மாறுபாடுகள் உள்ளன.[20]

மும்பை நகரம் அதன் பெயரைப் பெற்ற மும்பா தேவி கோவில்

நகரத்தின் மிகப் பழமையான பெயராக அறியப்பட்ட பெயர்கள் ககாமுச்சி மற்றும் கலாஜுங்க்ஜா ஆகும். இவை சில நேரங்களில் இன்னும் பயன்படுத்தப்படுகின்றன.[29][30] 1508 ஆம் ஆண்டில், போர்த்துகீசிய எழுத்தாளர் காஸ்பர் கொரியா தனது லெண்டாஸ் டா ஆண்டியா (இந்தியாவின் தொன்மங்கள்) இல் "பாம்பைம்" என்ற பெயரைப் பயன்படுத்தியுள்ளார்.[31][32] இந்த பெயர் கலிசியன் -போர்த்துகீசிய சொற்றொடரான போம் பைம், அதாவது "நல்ல சிறிய விரிகுடா"[31] என்பதிலிருந்து தோன்றியிருக்கலாம், மேலும் போம்பைம் என்பது போர்த்துகீசிய மொழியில் தற்போதும் பொதுவாக பயன்படுத்தப்படுகிறது.[32] 1516 ஆம் ஆண்டில், போர்த்துகீசிய ஆய்வாளர் துவார்த்தே பர்போசா தானா-மையம்பூ என்ற பெயரைப் பயன்படுத்தியுள்ளார். தானா என்பது பக்கத்து நகரமான தானே என்பதையும், மையம்பூ என்பது மும்பாதேவியையும் குறிக்கிறது.[31]

16 மற்றும் 17-ஆம் நூற்றாண்டுகளில் பதிவுசெய்யப்பட்ட பிற மாறுபாட்ட பெயர்கள் பின்வருமாறு: மொம்பைன் (1525), பம்பாய் (1538), பம்பை (1552), பாம்பேம் (1552), மொன்பேம் (1554), மொம்பைம் (1563), மொம்பேம் (1644), பம்பாய் (1666), பம்பைம் (1666), பாம்பே (1676), பூன் பே (1690),[32][32] பான் பஹியா.[33] 17-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் இந்நகரைக் கைப்பற்றிய பிறகு, போர்த்துகீசியப் பெயரானது பம்பாய் என்று ஆங்கில வடிவம் ஆக்கப்பட்டது.[34] குஜராத் மாகாணத்தின் ஏகாதிபத்திய திவான் அல்லது வருவாய் அமைச்சர், அலி முஹம்மது கான், மிராட்-இ அகமதியில் (1762) நகரத்தை மன்பாய் என்று குறிப்பிடுகிறார்.[31]

20-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், இந்த நகரம் மராத்தி, கொங்கணி, குஜராத்தி, கன்னடம், சிந்தி மொழிகளில் மும்பை அல்லது மம்பை என்றும், இந்தியில் பம்பாய் என்றும் குறிப்பிடப்பட்டது.[35] 1995 நவம்பரில் இந்திய அரசு அதிகாரப்பூர்வமாக[36] நகரின் பெயரை மும்பை என மாற்றியது. மகாராட்டிர மாநிலத் தேர்தலில் வெற்றி பெற்ற மராத்திய தேசியவாத கட்சியான சிவ சேனா கட்சியின் வற்புறுத்தலின் பேரில் இந்த பெயர்மாற்றம் ஏற்பட்டது. மேலும் நாடு முழுவதும் மற்றும் குறிப்பாக மகாராட்டிரத்தில் இதே போன்ற பெயர் மாற்றங்களை பிரதிபலிப்பதாக இது அமைந்தது.[37] ஸ்லேட் இதழின் கூற்றின்படி, "பாம்பே' என்பது 'மும்பை'யின் சிதைந்த ஆங்கில வடிவம் என்றும் பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் தேவையற்ற மரபுத் தொடர்ச்சி என்றும் அவர்கள் வாதிட்டனர்."[38] மேலும் ஸ்லேட்டின் கூற்றில், "மகாராட்டிர பிராந்தியத்தில் மராத்தி அடையாளத்தை வலுப்படுத்துவதற்கான ஒரு பெரிய இயக்கத்தின் ஒரு பகுதியாக பம்பாய் பெயர் மாற்றம் நிகழ்ந்தது."[39] இந்நகரத்தில் வசிக்கும் இன்னும் சிலராலும், சில இந்தியர்களாலும் பம்பாய் என்று குறிப்பிடப்பட்டாலும்,[40][41] மும்பையை என்ற பெயரை விடுத்து வேறு பெயரால் நகரத்தைக் குறிப்பிடுவது சர்ச்சைக்குரியதாக உள்ளது, இதன் விளைவாக உணர்ச்சி வெடிப்புகள், சில நேரங்களில் வன்முறை என்பது அரசியலில் இயல்பாக உள்ளது.[42][43]

மும்பைக்காரர்கள்

மும்பையில் வசிப்பவர்கள் மராத்தியில் மும்பைகர் என்று அழைக்கப்படுகிறனர். இதில் -கர் என்ற பின்னொட்டுக்கு வசிப்பவர் என்று பொருள். இந்த சொல் சில காலமாக பயன்பாட்டில் இருந்தது, ஆனால் அதிகாரப்பூர்வமாக நகரின் பெயர் மும்பை என மாற்றப்பட்ட பிறகு அது பிரபலமடைந்தது.[36] பாம்பேயிட் போன்ற பழைய சொற்களும் பயன்பாட்டில் உள்ளன.[44]

வரலாறு

ஆரம்பகால வரலாறு

கன்ஹேரி குகைகளில் முதல் நூற்றாண்டு முதல் 10-ஆம் நூற்றாண்டு வரையிலான புத்த சிற்பங்கள் மற்றும் ஓவியங்கள் உள்ளன.

மும்பை ஒரு காலத்தில் ஏழு தீவுகள் கொண்ட ஒரு தீவுக்கூட்டத்தில் உருவாக்கப்பட்டது. அந்த ஏழுதீவுகள் பம்பாய் தீவு, பரள், மசாகன், மாகிம், கொலாபா, வொர்லி, கிழவித் தீவு (ஓல்டு உமன்ஸ் ஐலாண்ட் அல்லது லிட்டில் கொலாபா என்றும் அழைக்கப்படுகிறது).[45] இந்த தீவுகளில் எப்போதிருந்து மக்கள் வாழ்கின்றனர் என்பது சரியாகத் தெரியவில்லை. வடக்கு மும்பையில் உள்ள கன்டிவலியைச் சுற்றியுள்ள கடலோரப் பகுதிகளில் காணப்படும் பிலிசுடோசின் படிவுகள் தெற்காசிய கற்காலத்திலிருந்து தீவுகளில் மக்கள் வாழ்ந்ததாக சான்றுரைக்கின்றன.[46] பொது ஊழியின் தொடக்கத்திலோ அல்லது அதற்கு முந்தைய காலத்திலோ தீவுகள் கோலி மீனவ சமூகத்தால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கலாம்.[34][47]

பொ.ஊ.மு. 3-ஆம் நூற்றாண்டில், இத்தீவுகள் மௌரியப் பேரரசின் ஒரு பகுதியாக ஆயின. தெற்கில் அப்பேரரசின் விரிவாக்கத்தின் போது, மகதத்தின் புத்த பேரரசர் அசோகரால் ஆளப்பட்டது.[48] போரிவலியில் உள்ள கான்கேரி குகைகள் பொ.ஊ. முதல் நூற்றாண்டில் எரிமலைப்பாறையில் குடையப்பட்டன.[49] மேலும் இது பண்டைய காலங்களில் மேற்கு இந்தியாவில் பௌத்தத்தின் முக்கிய மையமாக செயல்பட்டது.[50] பொ.ஊ. 150-இல் கிரேக்க புவியியலாளர் தொலெமியால் இந்த நகரம் ஹெப்டனேசியா (பண்டைய கிரேக்கம்: ஏழு தீவுகளின் கூட்டம்) என்று அறியப்பட்டது.[51] அந்தேரியில் உள்ள மகாகாளி குகைகள் பொ.ஊ.மு. முதல் நூற்றாண்டுக்கும் பொ.ஊ. 6-ஆம் நூற்றாண்டுக்கும் இடையில் குடையப்பட்டன.

பொ.ஊ.மு. 2-ஆம் நூற்றாண்டு மற்றும் பொ.ஊ. 9-ஆம் நூற்றாண்டுக்கு இடையில், தீவுகள் தொடர்ச்சியாக உள்நாட்டு வம்சங்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தன. அவை சாதவாகனர், மேற்கு சத்ரபதிகள், அபீரர், வாகடகடர், காலச்சுரிகள், கொங்கன் மௌரியர்கள், சாளுக்கியர், இராஷ்டிரகூடர் ஆகும்.[34] பின்னர் பொ.ஊ. 1260-இல் ஷிலாரார்களின் ஆளுகைக்குள் வந்தது.[21] இந்த காலகட்டத்தில் கட்டப்பட்ட நகரத்தின் பழமையான கட்டிடங்களில் சில ஜோகேஸ்வரி குகைகள் (520 - 525-இற்கு இடையில்),[52] எலிபண்டா குகைகள் (ஆறாம் மற்றும் ஏழாம் நூற்றாண்டுகளுக்கு இடையில்), வாக்கேஷ்வர் கோயில் (10-ஆம் நூற்றாண்டு),[53] பங்காங்கா குளம் (12-ஆம் நூற்றாண்டு).[54] போன்றவை ஆகும்.

ஹாஜி அலி தர்கா 1431-இல் மும்பை குஜராத் சுல்தானகத்தின் ஆட்சியின் கீழ் இருந்தபோது கட்டப்பட்டது.

மன்னர் பீமதேவன் 13-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இப்பகுதியில் தனது இராச்சியத்தை நிறுவினார். தனது தலைநகரை மஹிகாவதியில் (இன்றைய மாகிம் ) நிறுவினார்.[21] நகரத்தின் ஆரம்பகால குடியேறியவர்களான பத்தரே பிரபுக்கள் மன்னர் பீம்தேவனால் பொ.ஊ. 1298-ஆம் ஆண்டு குஜராத்தில் உள்ள சௌராஷ்டிராவிலிருந்து மஹிகாவதிக்கு அழைத்து வரப்பட்டனர்.[55] தில்லி சுல்தானகம் 1347-48-இல் தீவுகளை கைப்பற்றி 1407 வரை தன் கட்டுப்பட்டில் வைத்திருந்தது. இந்த காலகட்டத்தில், தீவுகள் குசராத்தின் முசுலீம் ஆளுநர்களால் நிர்வகிக்கப்பட்டன. அவர்கள் தில்லி சுல்தானகத்தால் நியமிக்கப்பவர்களாக இருந்தனர்.[48][51]

தீவுகள் பின்னர் 1407-இல் நிறுவப்பட்ட சுதந்திர குஜராத் சுல்தானகத்தால் ஆளப்பட்டன. சுல்தானகத்தின் ஆதரவானது பல பள்ளிவாசல்களைக் கட்டுவதற்கு வழிவகுத்தது. அதில் முக்கியமானது வொர்லியில் உள்ள ஹாஜி அலி தர்கா, 1431-இல் முஸ்லிம் துறவியான ஹாஜி அலியின் நினைவாக கட்டப்பட்டது.[56] 1429 முதல் 1431 வரை, இந்த தீவுகள் குஜராத் சுல்தானகத்திற்கும் தக்காணத்தின் பஹ்மனி சுல்தானகத்திற்கும் இடையே ஒரு சர்ச்சை ஏற்படுவதற்கு காரணமாக இருந்தன.[57][57] 1493-இல், பாமினி சுல்தானகத்தின் பகதூர் கான் கிலானி தீவுகளைக் கைப்பற்ற முயன்றார், ஆனால் தோற்கடிக்கப்பட்டார்.[51]

போர்த்துக்கேயர் மற்றும் பிரித்தானியர் ஆட்சி

போர்த்துக்கேயர்களால் கட்டப்பட்ட மத் கோட்டை, சால்சேட்டில் உள்ள மிக முக்கியமான கோட்டைகளில் ஒன்றாகும்.

கிபி. 1526-இல் நிறுவப்பட்ட முகலாயப் பேரரசு, 16-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இந்திய துணைக் கண்டத்தில் ஆதிக்கம் செலுத்தும் சக்தியாக இருந்தது.[58] முகலாயப் பேரரசர் உமாயூனின் ஆற்றலைக் கண்டு அஞ்சிய, குஜராத்தின் சுல்தான் பகதூர் ஷா, 1534 திசம்பர் 23 அன்று போர்த்துக்கேயப் பேரரசுடன் பஸ்சின் உடன்படிக்கையில் கையெழுத்திட வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானார். ஒப்பந்தத்தின்படி, பாம்பேயின் ஏழு தீவுகளும், அருகிலுள்ள மூலோபாய நகரமான பஸ்சீன் மற்றும் அதன் சார்பான பகுதிகள் போர்த்துகீசியர்களுக்கு வழங்கப்பட்டன.[34] 1535 அக்டோபர் அன்று பிரதேசங்கள் கையளிக்கபட்டன.

போர்த்துக்கேயர்கள் பம்பாயில் ரோமன் கத்தோலிக்க சமய அமைப்புகளுக்கு அடித்தளம் அமைத்து அதன் வளர்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டனர்.[34] அவர்கள் தீவுகளை பல்வேறு பெயர்களால் அழைத்தனர், இது இறுதியாக பாம்பைம் என்ற எழுத்து வடிவத்தை அடைந்தது. அவர்களின் ஆட்சியின் போது தீவுகள் பல போர்த்துகீசிய அதிகாரிகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டன. போர்த்துகேய பிரான்சிஸ்கன் சபை மற்றும் இயேசு சபைகள் நகரத்தில் பல தேவாலயங்களைக் கட்டினார்கள். அவற்றில் முக்கியமானவை மாகிமில் உள்ள செயின்ட் மைக்கேல் தேவாலயம் (1534),[48] அந்தேரியில் உள்ள செயின்ட் ஜான் தி பாப்டிஸ்ட் தேவாலயம் (1579),[59] பாந்த்ராவில் உள்ள செயின்ட் ஆண்ட்ரூ தேவாலயம் ( 1580),[60] மற்றும் பைகுல்லாவில் உள்ள குளோரியா தேவாலயம் (1632).[61] ஆகியவை ஆகும். போர்த்துக்கேயர்கள் நகரைச் சுற்றி பம்பாய் கோட்டையகம், காஸ்டெல்லா டி அகுவாடா (காஸ்டெலோ டா அகுவாடா அல்லது பாந்த்ரா கோட்டை), மத் கோட்டை போன்ற பல கோட்டைகளைக் கட்டினர். பம்பாய் மீது மேலாதிக்கம் செய்வதற்காக போர்த்துக்கேயர்களுடன் ஆங்கிலேயர்கள் தொடர்ந்து போராடினர், ஏனெனில் அவர்கள் அதன் மூலோபாய இயற்கை துறைமுகம் மற்றும் நில தாக்குதல்களில் இருந்து இயற்கையாகவே தனிமைப்படுத்தப்பட்டுள்ளது அவர்களைக் கவர்வதாக இருந்தது. 17-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இடச்சுப் பேரரசின் வளர்ந்து வரும் சக்தியானது ஆங்கிலேயர்களை மேற்கு இந்தியாவில் ஒரு முக்கியமான இடத்தைக் கொண்டிருக்க வேண்டிய நிலைக்கு கட்டாயத்துக்கு ஆளானது. 1661-ஆம் ஆண்டு மே 11-ஆம் தேதி இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு மற்றும் போர்ச்சுகல் மன்னர் நான்காம் ஜானின் மகள் பிரகன்சாவின் கேத்தரின் ஆகியோரின் திருமண ஒப்பந்தம் ஆனது. இதனால் சார்லசுக்கு கேத்தரினை திருமண வரதட்சணையின் ஒரு பகுதியாக தீவுகள் ஆங்கிலப் பேரரசின் வசம் வந்தன.[62] இருப்பினும், சால்சேட், பஸ்சைன், மசாகன், பரள், வொர்லி, சியோன், தாராவி, வடலா ஆகிய பகுதிகள் இன்னும் போர்த்துக்கேயர் வசமே இருந்தன. 1665 முதல் 1666 வரை, ஆங்கிலேயர்கள் மஹிம், சியோன், தாராவி மற்றும் வடலாவை கைப்பற்றினர்.[63]

பம்பாயில் உள்ள ஆங்கிலேயர் கோட்டையின் இரண்டு தோற்றங்கள், சி. 1665

27 மார்ச் 1668 நாளிட்ட ராயல் சாசனத்தின்படி, இங்கிலாந்து இந்த தீவுகளை ஆங்கிலேய கிழக்கிந்திய நிறுவனத்துக்கு 1668-இல் ஆண்டுக்கு £ 10 என்ற தொகைக்கு குத்தகைக்கு விடுத்தது.[21] 1661 இல் 10,000 ஆக இருந்த இதன் மக்கள்தொகை விரைவாக 1675-இல் 60,000 ஆக உயர்ந்தது.[51] 1672 அக்டோபரில் முகலாயப் பேரரசின் கடற்படைத் தளபதியான [3] [4] [5] [6] முஸ்லிம் கோலி யாகுத் கான்,[64][65][66][67][68] 1673 பெப்ரவரி 20 அன்று டச்சு இந்தியாவின் தலைமை ஆளுநரான ரைக்லாவ் வொன் கூன்சு,[69] மற்றும் 1673 அக்டோபர் 10 அன்று சித்தி கடற்படைத் தளபதி சம்பல் ஆகியோரால் தீவுகள் தாக்கப்பட்டன.[68]

1687-ஆம் ஆண்டில், ஆங்கிலக் கிழக்கிந்திய நிறுவனம் அதன் தலைமையகத்தை சூரத்திலிருந்து பம்பாய்க்கு இடம் மாற்றியது. இந்த நகரம் இறுதியில் பம்பாய் மாகாணத்தின் தலைமையகமாக மாறியது.[70] தலைமையகம் இடமாற்றப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியாவில் உள்ள அனைத்து நிறுவனத்தின் நிறுவனங்களின் தலைமையகங்களும் பம்பாயில் திறக்கபட்டன.[51] 17 ஆம் நூற்றாண்டின் இறுதியில், தீவுகள் மீண்டும் 1689-90 இல் யாகுத் கானின் ஊடுருவல்களைச் சந்தித்தன.[71] பேஷ்வா பாஜி ராவின்[72] தலைமையில் மராத்தியர்கள் 1737-இல் சால்சேட்டையும், 1739-இல் பாசைனையும் கைப்பற்றியதன் விளைவாக போர்த்துக்கேயரின் இருப்பு பம்பாயில் முடிவுக்கு வந்தது. 18-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், பம்பாய் ஒரு பெரிய வர்த்தக நகரமாக வளரத் தொடங்கியது. மேலும் இந்தியா முழுவதும் இருந்து புலம்பெயர்ந்து பெருமளவில் வந்து சேர்ந்தனர்.[21] பின்னர், ஆங்கிலேயர்கள் 1774 திசம்பர் 28 அன்று சால்சேட்டை ஆக்கிரமித்தனர். சூரத் உடன்படிக்கையின் மூலம் (1775), ஆங்கிலேயர்கள் சால்சேட் மற்றும் பஸ்சின் மீது முறையாக கட்டுப்பாட்டைப் பெற்றனர். இதன் விளைவாக முதலாம் ஆங்கிலேய-மராத்தியப் போர் ஏற்பட்டது.[73] புரந்தர் உடன்படிக்கை (1776),[74] பின்னர் சல்பாய் உடன்படிக்கை (1782) ஆகியவற்றின் மூலம் முதல் ஆங்கிலோ-மராத்தியப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக கையெழுத்திட்டதன் மூலம் ஆங்கிலேயர்கள் மராட்டியர்களின் தாக்குதலில் இருந்து பாதுகாக்க முடிந்தது.[74]

பம்பாய் துறைமுகத்தில் கப்பல்கள் (c. 1731). 18-ஆம் நூற்றாண்டின் மத்தியில் பம்பாய் ஒரு குறிப்பிடத்தக்க வர்த்தக நகரமாக உருவெடுத்தது.

1782-ஆம் ஆண்டு முதல், ஆர்ன்பி வெல்லார்ட் எனப்படும் தரைப்பாலத்தின் மூலம் பம்பாயின் ஏழு தீவுகளையும் ஒன்றிணைக்கும் நோக்கில், பெரிய அளவிலான கட்டுமானப் பொறியியல் திட்டங்களுடன் நகரம் மறுவடிவமைக்கப்பு பணிகள் துவங்கியது. இவை 1784-ஆம் ஆண்டு முடிக்கப்பட்டன.[21] 1817 ஆம் ஆண்டில், மவுண்ட்ஸ்டுவர்ட் எல்பின்ஸ்டோனின் தலைமையில் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் கிர்கி போரில் மராத்திய கடைசி பேஷ்வாவான பாஜி ராவை தோற்கடித்தது.[74] அவரது தோல்வியைத் தொடர்ந்து, தக்காணப் பீடபூமி முழுவதுமே பிரித்தானியர் ஆட்சியின் கீழ் வந்தது. மேலும் அவை பம்பாய் இராசதானியில் இணைக்கப்பட்டன. தக்காணத்தில் பிரித்தானியர் போர்த்தொடரின் வெற்றியானது, பூர்வீக சக்திகளின் அனைத்து தாக்குதல்களுக்கும் முடிவு கட்டியது.[34]

1845 வாக்கில், பெரிய அளவிலான நில மீட்பு திட்டமான ஆர்ன்பி வெல்லார்ட் திட்டத்தின் மூலம் ஏழு தீவுகளும் ஒன்றிணைந்து ஒரே நிலப்பகுதியாக மாற்றப்பட்டது.[75] 16 ஏப்ரல் 1853-இல், இந்தியாவின் முதல் பயணிகள் தொடருந்து பாதை அமைக்கபட்டது. இது பம்பாயை அண்டை நகரமான தானேவுடன் இணைத்தது.[21] அமெரிக்க உள்நாட்டுப் போரின் போது (1861-1865), பம்பாய் நகரம் உலகின் முக்கிய பருத்தி-வர்த்தகச் சந்தையாக மாறியது. இதன் விளைவாக நகரத்தின் பொருளாதாரத்தில் ஏற்றம் ஏற்பட்டு, நகரத்தின் அந்தஸ்து அதிகரித்தது.[21]

1869-இல் சுயஸ் கால்வாய் திறக்கப்பட்டது. இது பம்பாயை அரபிக்கடலில் மிகப்பெரிய துறைமுகங்களில் ஒன்றாக மாற்றியது.[21] 1896 செப்டம்பரில், பம்பாய் புபோனிக் பிளேக் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டது. அதனால் நகரில் வாரத்திற்கு 1,900 பேர் இறந்ததாக மதிப்பிடப்பட்டது.[21] இதனால் சுமார் 850,000 பேர் பம்பாயிலிருந்து வெளியேறினர் மேலும் ஜவுளித் தொழில் மோசமாக பாதிக்கப்பட்டது.[76] இந்த நகரம் பம்பாய் மாகாணத்தின் தலைநகராக இருந்தபோது, இந்திய விடுதலை இயக்கத்தின் ஒரு பகுதியான 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தையும் 1946 ராயல் இந்தியன் கடற்படை கலகத்தையும் வளர்த்தது.[21][21] .

சுதந்திர இந்தியா

மாநகராட்சி மன்ற கட்டடம், பம்பாய் 1950 (விக்டோரியா டெர்மினஸ் வலதுபுறத்தில் ஓரளவு தெரியும்)

1947-இல் இந்திய விடுதலைக்குப் பிறகு, பம்பாய் மாகாணமானது பம்பாய் மாநிலமாக மறுசீரமைக்கப்பட்டது. இந்திய ஒன்றியத்துடன் இணைக்கபட்ட பல பழைய சமஸ்தானங்கள், பம்பாய் மாநிலத்துடன் சேர்க்கபட்டதால் பம்பாய் மாநிலத்தின் பரப்பளவு அதிகரித்தது. பின்னர், இந்த நகரம் பம்பாய் மாநிலத்தின் தலைநகராக மாறியது.[77] 1950 ஏப்ரலில், மும்பை புறநகர் மாவட்டம் மற்றும் பம்பாய் நகரத்தை இணைத்து பெருநகர மாநகராட்சி உருவாக்கபட்டதன் மூலம் பம்பாய் மாநகராட்சி எல்லை விரிவுபடுத்தப்பட்டது.[78]

பம்பாயை உள்ளடக்கிய தனி மகாராட்டிர மாநிலத்தை உருவாக்கும் நோக்கம் கொண்ட சம்யுக்த மகாராஷ்டிரா இயக்கம் 1950 களில் உச்சம் கண்டது. 1955 மக்களவை விவாதங்களில், இந்த நகரத்தை தனி நகர மாநிலமாக ஆக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரியது.[79] மாநிலங்கள் மறுசீரமைப்புக் குழு தனது 1955 ஆண்டைய அறிக்கையில் பம்பாயை பொது தலைநகராக கொண்டு மகாராட்டிரா- குசராத்து ஆகிய இருமொழிவாரி மாநிலங்களை உருவாக்க பரிந்துரைத்தது. பம்பாய் குடிமக்கள் குழு, முன்னணி குஜராத்தி தொழிலதிபர்களின் வழக்கறிஞர்களின் குழு, பம்பாய்க்கு தனி நகர மாநில அந்தஸ்து அளிக்க வற்புறுத்தியது.[80]

மொழிவாரி மாநிலம் கோரிய இயக்கத்தினருக்கும் காவல் துறையினருக்கும் ஏற்பட்ட மோததில் 105 பேர் உயிரிழந்த போது ஏற்பட்ட போராட்டங்களைத் தொடர்ந்து, பம்பாய் மாநிலம் 1960 மே முதல் நாள் அன்று அன்று மொழிவாரி மாநிலமாக மறுசீரமைப்பு செய்யப்பட்டது. பம்பாய் மாநிலத்தின் குஜராத்தி மொழி பேசும் பகுதிகள் குஜராத் மாநிலமாகப் பிரிக்கப்பட்டது.[81] பம்பாய் மாநிலத்தின் மராத்தி மொழி பேசும் பகுதிகள், மத்திய மாகாணங்களில் இருந்து எட்டு மாவட்டங்கள் மற்றும் பெரார், ஹைதராபாத் மாநிலத்திலிருந்து ஐந்து மாவட்டங்கள் மற்றும் அவற்றுக்கிடையே இருந்த பல சமஸ்தானங்கள் ஒன்றிணைக்கபட்டு பம்பாயை தலைநகராக கொண்டு மகாராட்டிர மாநிலம் உருவாக்கப்பட்டது.[82] சம்யுக்த மகாராஷ்டிரா இயக்கத்தின் தியாகிகளின் நினைவாக, புளோரா நீரூற்று ஹுதாத்மா சௌக் (தியாகிகள் சதுக்கம்) என பெயர் மாற்றப்பட்டு நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டது.

சம்யுக்த மகாராஷ்டிரா இயக்கத்தின் தியாகிகளை கௌரவிப்பதற்காக கட்டப்பட்ட ஹுதாத்மா சௌக் நினைவகம் (பின்னணியில் அதன் இடதுபுறத்தில் ஃப்ளோரா நீரூற்று)

அடுத்த தசாப்தங்களில் நகரமும், அதன் புறநகர்ப் பகுதிகளும் பாரிய விரிவாக்கம் கண்டன. 1960களின் பிற்பகுதியில், நாரிமன் முனை மற்றும் குஃபே பேரேடு ஆகியவை உருவாக்கப்பட்டன.[21] பம்பாய் பெருநகரப் பிராந்திய மேம்பாட்டு ஆணையம் (பிஎம்ஆர்டிஏ) மும்பை பெருநகரப் பகுதியில் வளர்ச்சி நடவடிக்கைகளை திட்டமிடுவதற்கும் ஒருங்கிணைப்பதற்குமான ஒரு உச்ச அமைப்பாக மகாராஷ்டிரா அரசாங்கத்தால் 26 ஜனவரி 1975 அன்று நிறுவப்பட்டது.[83] 1979 ஆகத்தில், தானே மற்றும் ராய்காட் மாவட்டங்கள் முழுவதும் மாநகரம் மற்றும் தொழில்துறை வளர்ச்சிக் கழகத்தின் (சிட்கோ) மூலம் நவி பாம்பேயின் ஒரு சகோதரி நகரியம் நிறுவப்பட்டது. 50-இற்கும் மேற்பட்ட ஜவுளி ஆலைகளில் கிட்டத்தட்ட 2,50,000 தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட 1982-ஆம் ஆண்டைய பெரிய பாம்பே ஜவுளி வேலைநிறுத்தத்திற்குப் பிறகு பம்பாயில் ஜவுளித் தொழில் பெருமளவில் காணாமல் போனது. பம்பையின் செயலிழந்த பருத்தி ஆலைகள் தீவிர மறுவளர்ச்சியின் மையமாக மாறின. அதன் பொருளாதாரம் பெட்ரோ வேதிப்பொருள், மின், மின்னணு, தானுந்து ஆகிய துறைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தபோது, மும்பையில் தொழில் வளர்ச்சி தொடங்கியது.[84]

சவகர்லால் நேரு துறைமுகம், இந்தியாவின் 55-60% சரக்குக் கொள்கலன்களைக் கையாளுகிறது. இது பம்பாய் துறைமுகத்தின் நெரிசலைக் குறைக்கும் விதத்திலும், நகரத்தின் மையத் துறைமுகமாகச் செயல்படுத்தும் நோக்கிலும் 26 மே 1989 அன்று நவா ஷேவாவில் உள்ள சிறுகுடாவில் அமைக்கபட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.[85] 1990 அக்டோபர் முதல் நாளன்று பெருநகர பம்பாய் மாவட்டமானது பம்பாய் நகரம் மற்றும் பம்பாய் புறநகர் ஆகிய இரண்டு மாவட்டங்களாக பிரிக்கபட்டது. இருப்பினும் அவை தொடர்ந்து அதே மாநகராட்சி நிர்வாகத்தால் நிர்வகிக்கப்படுகின்றன.[86]

1990 முதல் 2010 வரையிலான காலக்கட்டத்தில் பம்பாயில் வன்முறையும், பயங்கரவாத நடவடிக்கைகளும் அதிகரித்தன. அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 1992-93 இந்து-முஸ்லீம் கலவரங்களால் நகரம் அதிர்ந்தது. இதில் 1,000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 1993 மார்ச்சில், இஸ்லாமிய தீவிரவாதிகள் மற்றும் பம்பாய் நிழல் உலக குற்றவாளிகள் ஒருங்கிணைந்து மேற்கொண்ட 13 குண்டுவெடிப்புகளில் 257 பேர் கொல்லப்பட்டு, 700 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 2006-ஆம் ஆண்டில், நகரின் புறநகர் தொடருந்தில் ஏழு குண்டுகள் வெடித்ததில் 209 பேர் கொல்லப்பட்டு, 700இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 2008-ஆம் ஆண்டில், ஆயுதமேந்திய பயங்கரவாதிகள் ஒருங்கிணைந்து மூன்று நாட்கள் மேற்கொண்ட பத்து தொடர்ச்சியான தாக்குதல்கல்களில் 173 பேர் கொல்லப்பட்டு, 308 பேர் காயமுற்றனர். மேலும் பல பாரம்பரிய அடையாளங்கள் மற்றும் மதிப்புமிக்க தங்கு விடுதிகளும் கடுமையான சேதம் அடைந்தன. 2011 சூலையில் ஓபரா ஹவுஸ், ஜவேரி பஜார் மற்றும் தாதர் ஆகிய இடங்களில் நிகழ்ந்த மூன்று ஒருங்கிணைந்த குண்டுவெடிப்புகள் மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களின் சமீபத்தியவையாகும். இதன் விளைவாக 26 பேர் கொல்லப்பட்டனர், 130 பேர் காயமடைந்தனர்.[87][88]

மும்பை இந்தியாவின் வர்த்தக தலைநகரமாகவும், உலகளாவிய நிதி மையமாகவும் உருவாகியுள்ளது.[89] பல தசாப்தங்களாக இது இந்தியாவின் முக்கிய நிதிச் சேவைகளின் அமைவிடமாக, உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் தனியார் முதலீடு ஆகிய இரண்டிலும் கவனம் செலுத்துகிறது.[90] ஒரு பழங்கால மீன்பிடி சிற்றூராக இருந்த இது, காலனித்துவ வர்த்தக மையமாக இருந்து, தெற்காசியாவின் மிகப்பெரிய நகரமாகவும், உலகின் மிகச் சிறந்த திரைப்படத் துறையின் தாயகமாகவும் மாறியுள்ளது.[91]

நிலவியல்

மும்பை இரண்டு மாவட்டங்களைக் கொண்டுள்ளது.
இந்தியாவின் மும்பையில் (2010) மக்கள் தொகை அடர்த்தி மற்றும் கடல் மட்டத்திலிருந்து உயரம். குறிப்பாக கடல் மட்ட உயர்வால் மும்பை பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளது.

மும்பை சால்சேட் தீவின் தென்மேற்கில் உள்ள ஒரு குறுகிய தீபகற்பத்தில் உள்ளது. இதன் மேற்கில் அரேபிய கடலும், கிழக்கில் தானே கடற்கழியும், வடக்கே வசை கடற்கழி ஆகியவை அமைந்துள்ளன. மும்பையின் புறநகர் மாவட்டம் தீபகற்பத்தின் பெரும்பகுதியை ஆக்கிரமித்துள்ளது. நவி மும்பை தானே கடற்வழிக்கு கிழக்கே உள்ளது மற்றும் தானே வசை கடற்கழிக்ககு வடக்கே உள்ளது. மும்பை இரண்டு தனித்துவமான பகுதிகளான மும்பை நகர மாவட்டம் மற்றும் மும்பை புறநகர் மாவட்டம் என அமைந்துள்ளது. இது மகாராட்டிரத்தின் இரண்டு தனி மாவட்டங்களாக உள்ளது.[92] நகர மாவட்டப் பகுதி பொதுவாக தீவு நகரம் அல்லது தெற்கு மும்பை என்றும் குறிப்பிடப்படுகிறது.[23] மும்பையின் மொத்த பரப்பளவு 603.4 கிமீ 2 (233 சதுர மைல்) ஆகும்.[93] இதில், தீவு நகரம் 67.79 கிமீ 2 (26 சதுர மைல்), பரப்பளவில் உள்ளது, புறநகர் மாவட்டம் 370 கிமீ 2 (143 சதுர மைல்), பரப்பளவைக் கொண்டுள்ளது. மொத்தம் 437.71 கிமீ 2 (169 சதுர மைல்) பரபள்ளவு பகுதியானதுபெருநகரமும்பை மாநகராட்சியின் (எம்சிஜிஎம்) நிர்வாகத்தின் கீழ் வருகின்றது. மீதமுள்ள பகுதிகள் பல்வேறு பாதுகாப்பு நிறுவனங்களுக்கு சொந்தமானவையாக, மும்பை துறைமுக பொறுப்புக் கழகம், இந்திய அணுசக்திப் பேரவை மற்றும் போரிவலி தேசிய பூங்கா ஆகியவை பெருநகராட்சியின் அதிகார வரம்பிற்கு வெளியே உள்ளன.[94] மும்பை பெருநகரப் பகுதியானது மேலும் கூடுதலாக தானே, பால்கர் மற்றும் ராய்காட் மாவட்டங்களின் சில பகுதிகளையும் உள்ளடக்கியதாக, 4,355 கிமீ 2 (1681.5 சதுர மைல்) பரப்பளவில் பரந்து உள்ளது. மும்பை இந்தியாவின் மேற்கு கடற்கரையில், கொங்கண் என்று அழைக்கப்படும் கடலோரப் பகுதியில் உல்லாஸ் ஆற்றின் முகப்பில் அமைந்துள்ளது.[34] மும்பை மேற்கு அரபிக்கடலால் சூழப்பட்டுள்ளது.[94] நகரின் பல பகுதிகள் கடல் மட்டத்திற்கு சற்று மேலே அமைந்துள்ளன. உயரமானது கடல் மட்டத்திற்கு மேலே 10 மீ (33 அடி) முதல் 15 மீ (49 அடி) வரை உள்ளது.[95] நகரம் சராசரியாக 14 மீ (46 அடி) உயரத்தில் உள்ளது.[96] வடக்கு மும்பை (சல்செட்) மலைப்பாங்கானது,[94] மற்றும் நகரின் மிக உயரமான புள்ளி 450 மீ (1,476 அடி) பவய் - கன்கேரி மலைத்தொடரில் உள்ள சல்செட்டில் உள்ளது.[97] சஞ்சய் காந்தி தேசியப் பூங்கா (போரிவலி தேசியப் பூங்கா) மும்பை புறநகர் மாவட்டத்திலும், ஒரு பகுதி தானே மாவட்டத்திலும் அமைந்துள்ளது. இது 103.09 கிமீ 2 (39.80 சதுர மைல்).பரப்பளவில் பரவியுள்ளது.[98]

நகரத்தின் நீராதாரமாக பட்சா அணை மற்றும் ஆறு பெரிய ஏரிகளான விகார், கீழ் வைத்தர்ணா, மேல் வைத்தர்னா, துளசி, தான்சா, பவய் போன்றவை உள்ளன. துளசி ஏரி மற்றும் விகார் ஏரி ஆகியவை நகர எல்லைக்குள் போரிவிலி தேசிய பூங்காவில் அமைந்துள்ளன. நகர எல்லைக்குள் உள்ள போவாய் ஏரியில் உள்ள நீராதாரமானது வேளாண்மை மற்றும் தொழில்துறை நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.[99] மூன்று சிறிய ஆறுகளான தகிசர், பொய்சார் (அல்லது போய்சார்) மற்றும் ஓசிவாரா (அல்லது ஓஷிவாரா) ஆகியவை தேசிய பூங்காவிற்குள் உருவாகின்றன. அதே நேரத்தில் மாசுபட்ட மித்தி ஆறு துளசி ஏரியிலிருந்து உருவாகிறது மேலும் விகார் மற்றும் போவாய் ஏரிகளில் இருந்து நிரம்பி வழியும் தண்ணீர் இந்த ஆற்றுசன் சேர்கின்றது.[94] நகரின் கடற்கரையானது ஏராளமான கடற்கழி மற்றும் விரிகுடாக்களால் உள்தள்ளப்பட்டுள்ளது, கிழக்கில் தானே கடற்கழியிலிருந்து மேற்கு முகப்பில் மத் மார்வ் வரை கடற்கரை நீண்டுள்ளது. சல்செட் தீவின் கிழக்குக் கடற்கரையானது பெரிய அலையாத்தித் தாவரங்கள் கொண்ட சதுப்பு நிலங்களால் சூழப்பட்டுள்ளது. இது பல்லுயிர் வளம் நிறைந்தது. மேற்கு கடற்கரை பெரும்பாலும் மணல் மற்றும் பாறைகள் நிறைந்தது.[100]

கடலுக்கு அருகாமையில் இருப்பதால் நகரப் பகுதியில் உள்ள மண் பெரும்பாலும் மணலாக உள்ளது. புறநகர்ப் பகுதிகளில், மண்ணடுக்கு பெரும்பாலும் வண்டல் மற்றும் களிமண் கொண்டதாக உள்ளது.[94] இப்பகுதியின் அடிப்படையான பாறையானது தக்காண கருப்பு எரிமலைப்பாறைகளால் ஆனவை. இவை கிரீத்தேசிய மற்றும் ஆரம்ப இயோசீன் காலத்துக்ககு முந்தையவை.[94] மும்பைக்கு அருகில் இரு நிலவடுக்குகள் இருப்பதால் நில அதிர்வுக்கு வாய்ப்புள்ள மண்டலத்தில் அமர்ந்திருக்கிறது.[101] இப்பகுதி நிலநடுக்க மண்டலம் III பகுதி என வகைப்படுத்தப்பட்டுள்ளது, அதாவது ரிக்டர் அளவுகோலில் 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ள பகுதி.[102]

காலநிலை

மும்பையில் சராசரி வெப்பநிலை மற்றும் மழைப்பொழிவு

மும்பையில் வெப்பமண்டல காலநிலை நிலவுகிறது. குறிப்பாக கோப்பென் காலநிலை வகைப்பாட்டின் கீழ் வெப்பமண்டல ஈரமான மற்றும் வறண்ட காலநிலை நிலவுகிறது.[103] இங்கு திசம்பர் முதல் பெப்ரவரி வரையில் குளிர்ந்த பருவமும், மார்ச் முதல் மே வரை வெப்பமான பருவ காலமாக இருக்கும். சூன் முதல் செப்டம்பர் இறுதி வரையிலான காலம் தென்மேற்குப் பருவமழைக் காலமாகவும், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பருவமழைக்குப் பிந்தைய பருவமாகவும் இருக்கிறது.[34]

சூன் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில், மும்பையில் தென்மேற்கு பருவமழை பெய்யும். மே மாதத்தில் பருவமழைக்கு முந்தைய மழை பெய்யும். எப்போதாவது, அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை பெய்யும். 1954 இல் 3,452 மிமீ (136 அங்குலம்) என அதிகபட்ச வருடாந்திர மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.[94] 26 சூலை 2005 அன்று ஒரே நாளில் பதிவான அதிகபட்ச மழை அளவு 944 மிமீ (37 அங்குலம்) ஆகும்.[104] நகரத்தில் சராசரி மொத்த ஆண்டு மழைப்பொழிவு 2,213.4 மிமீ (87 அங்குலம்) மற்றும் புறநகர்ப் பகுதிகளுக்கு 2,502.3 மிமீ (99 அங்குலம்) ஆகும்.[94]

சராசரி ஆண்டு வெப்பநிலை 27 °C (81 °F), மற்றும் சராசரி ஆண்டு மழைப்பொழிவு 2,213 மிமீ (87 அங்குலம்) ஆகும்.[105] நகரத்தில், சராசரி அதிகபட்ச வெப்பநிலை 31 °C (88 °F), சராசரி குறைந்தபட்ச வெப்பநிலை 24 °C (75 °F) ஆகும். புறநகர்ப் பகுதிகளில், தினசரி சராசரி அதிகபட்ச வெப்பநிலை வரம்பு 29 °C (84 °F) முதல் 33 °C (91 °F) வரை இருக்கும், அதே சமயம் தினசரி சராசரி குறைந்தபட்ச வெப்பநிலை 16 °C (61 °F) முதல் 26 °C ( 79 °F) வரை இருக்கும்.[94] அதிகபட்சமாக 1952 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி 42.2 °C (108 °F) வெப்பம் பதிவாகியுள்ளது.[106] மற்றும் குறைந்தபட்ச வெப்பமாக 7.4 °C (45 °F) 27 ஜனவரி 1962 இல் பதிவானது.[106][107]

அரிதாக வெப்பமண்டல சூறாவளிகள் நகரத்தை தாக்கியுள்ளன. மும்பையை இதுவரை தாக்கியிராத மிக மோசமான சூறாவளி 1948 மும்பை சூறாவளி ஆகும். அன்று ஜூஹூவில் மணிக்கு 151 கிமீ / (94 மைல்) வேகத்தில் காற்று வீசியது. புயலால் 38 பேர் இறந்தனர், 47 பேர் காணாமல் போயினர். புயல் 20 மணி நேரம் பம்பாயை தாக்கி நாசமாக்கியது.[108]

பருவநிலை மாற்றத்தால் மும்பையில் கடலில் அதிக அலைகளால் மற்றும் பருவமழையின்போது கனமழை மற்றும் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது. உலக வங்கியின் கூற்றின் படி, திட்டமிடப்படாத வடிகால் வசதிகள் மற்றும் முறைசாரா குடியேற்றம் ஆகியவை அடிக்கடி ஏற்படும் வெள்ளத்திற்கு முக்கிய காரணியாகும்.[109] மும்பையில் வெள்ளம் ஏற்படுவதற்கான பிற காரணங்களில், அதன் புவியியல் இருப்பிடமும் ஒரு காரணமாக உள்ளது. மும்பை நகர்ப்புறம் தீபகற்ப வடிவத்தில் உள்ளது, (ஏழு தீவுகளை இணைக்கும் நிலம் நிறைந்த பகுதி) தாழ்வான பகுதியாகவும் உள்ளது. இதன் புறநகர்ப் பகுதி உயரமான இடத்தில் உள்ளது, கடந்த சில தசாப்தங்களாக, புறநகர் பகுதியில் புதிய முறைசாரா குடியிருப்புகள் உருவாக்கப்பட்டது, மக்கள் தொகையின் விரைவான அதிகரிப்பு போன்றவை முறையற்ற கழிவு மேலாண்மை மற்றும் வடிகால் நெரிசல் ஆகியவை ஏற்படுத்தியது. இப்பகுதிகளில் இருந்து வெளியேறும் மழைநீரின் கணிசமான அளவு குடிசைகள் மற்றும் உயரமான கட்டிடங்கள் கொண்ட தாழ்வான நகர்ப்புற பகுதிகளை நோக்கி பாய்கிறது. இதன் விளைவாக, மோசமாகக் கட்டப்பட்ட சேரிகள் வெள்ளத்தால், அடித்துச் செல்லப்படுகின்றன அல்லது இடிந்து பெரும் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. மேலும் வெள்ளத்திற்குப் பின்பு நீர் தேங்கும் நிலை நீண்ட காலத்திற்கு நீடிக்கிறது. இதனால் போக்குவரத்து நெரிசல், வெள்ளத்தில் மூழ்கிய சாலைகள், தொடருந்து பாதைகளில் அடைப்பும் ஏற்படுகிறது-(மும்பையில் பலர் பயன்படுத்தப்படும் பொது போக்குவரத்து). கடந்த சில தசாப்தங்களாக, மும்பையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது, 2005 மும்பை வெள்ளத்தில் 500-1000 இறப்புகள், குடும்பங்களின் இடப்பெயர்வுகள், சேதமடைந்த உள்கட்டமைப்பு வசதிகள்-(பாரம்பரிய தளங்கள் உட்பட) மற்றும் 1.2 பில்லியன் US$ நிதி இழப்பு ஏற்பட்டது.[109] மும்பையில் வெள்ள பாதிப்பைக் குறைக்கும் செயல்பாட்டுக்கான திட்டங்களை மகாராஷ்டிர அரசு மேற்கொண்டு வருகிறது.[109][110][111]

தட்பவெப்ப நிலைத் தகவல், மும்பை (Chhatrapati Shivaji Maharaj International Airport, located in Santacruz) 1991–2020, extremes 1951–2012)
மாதம்சனபிப்மார்ஏப்மேசூன்சூலைஆகசெப்அக்நவதிசஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F)37.4
(99.3)
39.6
(103.3)
41.7
(107.1)
42.2
(108)
41.0
(105.8)
39.8
(103.6)
36.2
(97.2)
33.5
(92.3)
37.0
(98.6)
38.6
(101.5)
37.6
(99.7)
39.8
(103.6)
42.2
(108)
உயர் சராசரி °C (°F)31.2
(88.2)
31.7
(89.1)
33.1
(91.6)
33.4
(92.1)
33.7
(92.7)
32.5
(90.5)
30.4
(86.7)
30.2
(86.4)
30.9
(87.6)
33.6
(92.5)
34.1
(93.4)
32.6
(90.7)
32.3
(90.1)
தாழ் சராசரி °C (°F)16.9
(62.4)
18.1
(64.6)
21.1
(70)
24.2
(75.6)
27.0
(80.6)
26.6
(79.9)
25.5
(77.9)
25.2
(77.4)
24.9
(76.8)
23.9
(75)
21.4
(70.5)
18.4
(65.1)
22.8
(73)
பதியப்பட்ட தாழ் °C (°F)7.4
(45.3)
8.5
(47.3)
12.7
(54.9)
16.9
(62.4)
20.2
(68.4)
19.8
(67.6)
21.2
(70.2)
19.4
(66.9)
20.7
(69.3)
16.7
(62.1)
13.3
(55.9)
10.6
(51.1)
7.4
(45.3)
மழைப்பொழிவுmm (inches)0.2
(0.008)
0.2
(0.008)
0.1
(0.004)
0.1
(0.004)
7.3
(0.287)
526.3
(20.72)
919.9
(36.217)
560.8
(22.079)
383.5
(15.098)
91.3
(3.594)
11.0
(0.433)
1.6
(0.063)
2,502.3
(98.516)
ஈரப்பதம்49475159657481817663545163
சராசரி மழை நாட்கள்0.00.00.10.00.714.023.321.414.43.90.60.278.6
ஆதாரம்: India Meteorological Department[112][113]

குறிப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=மும்பை&oldid=3894302" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை