பகார் பகுதி

பகர் (Bagar) மேலும் பகத் (Bagad ) என்பது "வறண்ட நாடு" என்று பொருள்படும் ஒரு சொல்லாகும்.[1] வடமேற்கு இந்தியா மற்றும் இந்தியாவின் எல்லையில் உள்ள தற்போதைய பாக்கித்தானின் கிழக்குப் பகுதிகளின் மணல் பரப்பை இது குறிக்கிறது.[2] உதாரணமாக, காகர் நதிக்கு வடக்கே மற்றும் பஞ்சாபின் தெற்கே பக்ரி மொழி பேசப்படும் இடம்.

பெயர்க்காரணம்

பகர் என்பது வடக்கு இராஜபுதனத்தின் புல்வெளி என்று பொருள்படும். [3] இது "பசு" ( இந்துக்களுக்கு புனிதமான ஒரு விலங்கு) என்று பொருள்படும் "பகர்" என்ற பெயரிடப்பட்ட அரபு வார்த்தையிலிருந்து வந்திருக்கலாம். [4] மேலும், "கால்நடை" என்ற அரபு வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. [5] [6] அரபு மொழியில் பக்காரா என்றால் "கால்நடை மேய்பவர்கள்" என்று பொருள். [5] [7] பகர் பாதை என்பது வறண்ட தார்ப் பாலைவனம் மற்றும் சிந்து-கங்கைச் சமவெளியின் வளமான பாங்கர் மற்றும் காதிர் பகுதிகளின் சங்கமத்தில் உள்ள அரை வறண்ட அரை வளமான மழை பெய்யும் மணல் புல்வெளிப் பகுதியைக் குறிக்கிறது. பகர் என்ற அரபுப் பெயரை ஏற்றுக்கொள்வதற்கு முன்பு, இப்பகுதி மகாபாரதத்தின் வேத காலத்திலும், ஆரம்பகால இடைக்காலத்திலும் கூட, பிருத்திவிராச் சௌகானின் இந்து ஆட்சியின் இறுதி வரையிலும் ஜங்லதேசம் என்று அழைக்கப்பட்டது.

பக்ரி மொழி

பக்ரி என்பது, இராசத்தானி, அரியான்வி மற்றும் இந்தோ-ஆரிய குடும்பத்தின் பஞ்சாபி மொழி ஆகியவற்றின் பேச்சுவ ழக்காகும். இது இராசத்தான், அரியானா மற்றும் இந்தியாவின் பஞ்சாப் மாநிலங்களின் பகர் பகுதியில் வசிக்கும் சுமார் ஐந்து மில்லியன் மக்களால் பேசப்படுகிறது [8] [9]

பாக்கிஸ்தானின், பஞ்சாப், பகவல்பூர் மாவட்டம் மற்றும் பகவல்நகர் மாவட்டத்தில் சிறிய மொழியாக பக்ரி பேசப்படுகிறது, இருப்பினும் இவை பகர் பிராந்தியத்தின் பகுதிகளாக கருதப்படவில்லை. [8] [10] [11]

பிரபலமான பக்ரி மக்கள்

இராஜீவ் காந்தியுடன் மணிராம் பக்ரி .

பக்ரி மக்கள் என்ற சொல் முதலில் ஜாட்கள், [12] [13] குஜ்ஜர்கள்[14] ராஜ்புத் மற்றும் பிஷ்னோய் மக்கள் பாகர் பிராந்தியத்தில் வாழும் மற்றும் பக்ரி மொழி பேசுபவர்களுக்குப் பயன்படுத்தப்பட்டது [15] [16] [17] [12] [18] [19] [13] [20] [21]


கும்ஹர், சுதர், நை, அகர்வால் பனியா மற்றும் மகேஸ்வரி பனியாக்கள் மற்றும் பாதிக் ("கசாப்புக் கடைக்காரர்"), பார்தி ("வேட்டைக்காரர்"), பவாரியா (அரை நாடோடிகள்) சாதிகளின் பிரிவுகளும் இப்பகுதியில் வாழ்கின்றனர். [22] [23] மணிராம் பக்ரி , ராஜ் பக்ரி, பரோன் பக்ரி போன்றவர்கள் அரியானாவைச் சேர்ந்த அரசியல்வாதிகளாகவும் பிரபலமானவர்களாகவும் இருக்கின்றனர். [24]

இதனையும் காண்க

சான்றுகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பகார்_பகுதி&oldid=3959570" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்