பைஜ்நாத், உத்தராகண்டம்

பைஜ்நாத் (Baijnath) என்பது இந்தியாவின் உத்தராகண்டம் மாநிலத்தின் குமாவுன் கோட்டத்தில் பாகேசுவர் மாவட்டத்தில் கோமதி ஆற்றங்கரையில் உள்ள ஒரு சிறிய நகரமாகும். நகரம் அதன் பழங்கால கோயில்களுக்கு மிகவும் பிரபலமானது.[1] அவை உத்தராகண்டத்திலுள்ள இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்தால் தேசிய முக்கியத்துவத்தின் நினைவுச்சின்னங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.[2] இந்திய அரசின் "சுதேசி தரிசனத் திட்டத்தின்" கீழ் குமாவுனிலுள்ள 'சிவா ஹெரிடேஜ் சர்க்யூட்' மூலம் இணைக்கப்பட்ட நான்கு இடங்களில் பைஜ்நாத்தும் ஒன்று.[3] இத் திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்ட பிற இடங்கள்: ஜெகேஷ்வர் கோயில்கள், அல்மோராவிலுள்ள கதார்மல் சூரியக் கோயில், சம்பாவத் மாவட்டத்திலுள்ள தேவிதுரா.[4][5]

பைஜ்நாத்
நகரம்
பைஜ்நத்தின் வான் காட்சி
பைஜ்நாத் கோயில்கள்
பைஜ்நாத் ஏரி
மேலிருந்து கீழ்: பைஜ்நத்தின் வான் காட்சி, பைஜ்நாத் கோயில்கள், பைஜ்நாத் ஏரி
பைஜ்நாத் is located in உத்தராகண்டம்
பைஜ்நாத்
பைஜ்நாத்
உத்தராகண்டம் மாநிலத்தில் பைஜ்நாத்தின் அமைவிடம்
பைஜ்நாத் is located in இந்தியா
பைஜ்நாத்
பைஜ்நாத்
பைஜ்நாத் (இந்தியா)
ஆள்கூறுகள்: 29°55′N 79°37′E / 29.92°N 79.62°E / 29.92; 79.62
மாநிலம்உத்தராகண்டம்
மாவட்டம்பாகேசுவர்
Establishedபொ.ச. 850
தோற்றுவித்தவர்நரசிங்க தேவ்
மொழிகள்
 • அலுவல்இந்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
வாகனப் பதிவுஉகே 02
இணையதளம்uk.gov.in

அன்றைய கார்த்திகேயபுரம் என்று அழைக்கப்பட்ட பைஜ்நாத், நவீன கால நேபாள மாநிலமான தோட்டி, இந்தியாவின் உத்தராகண்டத்திலுள்ள குமாவுன் பகுதி கார்வால் நாடு ஆகியவற்றின் ஒருங்கிணைந்த பகுதிகளை உள்ளடக்கிய ஒரு பகுதியை ஆட்சி செய்த கத்யூரி மன்னர்களின் இருக்கையாகும்.

வரலாறு

இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் கோயில் தளத்தில் விளம்பரப் பலகை. 9 முதல் 12 ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் கத்யூரி அரசர்களால் கோயில் கட்டப்பட்டதைப் பற்றி விவரிக்கிறது.

இப்பகுதியின் முதல் நிரந்தர குடியேற்றம் கார்வீர்பூர் அல்லது கர்பிர்பூர் என்ற நகரமாகும்.[6][7] இந்த நகரத்தின் இடிபாடுகள் கத்யூரி மன்னர் நரசிங் தேவ் தனது தலைநகரை இப்பகுதியில் நிறுவ பயன்படுத்தப்பட்டன.[8][9] பொ.ச. 7 முதல் 13ஆம் நூற்றாண்டு வரை இப்பகுதியை ஆண்ட கத்யூரி வம்சத்தின் தலைநகராக பைஜ்நாத் இருந்தது.

ஒன்றினைந்த கத்யூரி இராச்சியத்தின் கடைசி அரசன் பீர்தேவ் இறந்த பிறகு 13ஆம் நூற்றாண்டில் இராச்சியம் சிதைந்து 8 வெவ்வேறு சுதேச அரசுகளுக்கு வழிவகுத்தது.[10][11][12] கத்யூரி மன்னர்களின் சந்ததியினர், 1565வரை அல்மோராவின் மன்னர் பால கல்யாண் சந்த் பைஜ்நாத்தை குமாவுனுடன் இணைக்கும் வரை பைஜ்நாத் கத்யூரிகளின் ஆட்சியில் இருந்தது.[13]

நேபாளத்தின் கூர்காக்கள் தங்கள் இராச்சியத்தை மேற்கு நோக்கி காளி ஆற்றின் குறுக்கே விரிவுபடுத்தி, அல்மோராவை ஆக்கிரமித்து,[14] குமாவுன் இராச்சியத்தின் இருக்கை மற்றும் குமாவுனின் பிற பகுதிகளை 1791இல் கைப்பற்றினர். கூர்க்காக்கள் 1814இல் ஏற்பட்ட ஆங்கிலேய-நேபாளப் போரில்[15] கிழக்கிந்திய நிறுவனத்திடம் தோல்வியடைந்தனர்.[16][17][18] இதையடுத்து 1816இல் ஏற்பட்ட சுகௌலி உடன்படிக்கையின் ஒரு பகுதியாக குமாவுனை ஆங்கிலேயரிடம் ஒப்படைக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது.[19]:594[20]

1901ஆம் ஆண்டில் 148 பேர் என்ற அளவில் மக்கள் தொகை கொண்ட ஒரு சிறிய கிராமமாக இது இருந்தது.[21]

நிலவியல்

பைஜ்நாத் ஏரி

பைஜ்நாத் உத்தரகண்ட் மாநிலத்தின் பாகேசுவர் மாவட்டத்தில், பாகேசுவர் நகரிலிருந்து 20 கி.மீ வடமேற்கே 29.92 ° வடக்கிலும் 79.62 ° கிழக்கிலும் அமைந்துள்ளது.[22]. இதன் சராசரி உயரம் 1,130 மீட்டர் (3,707 அடி) ஆகும். கோமதி ஆற்றின் இடக் கரையில் குமாவுன் இமயமலையின் கத்யூர் பள்ளத்தாக்கில் பைஜ்நாத் அமைந்துள்ளது. அருகிலுள்ள கிராமங்களில் தங்கோலி, கக்ரிகோல், ஆட், தீட் பஜார், புராரா, நோகர் போன்றவையும் அடங்கும்.

கோயில் வளாகத்திற்கு அருகிலுள்ள ஒரு செயற்கை ஏரித் திட்டம் 2007-2008 இல் அறிவிக்கப்பட்டது.[23] இது உத்தராகண்ட முதல்வராக இருந்த ஹரீஷ் ராவத் அவர்களால் 14 சனவரி 2016 அன்று நிறைவு செய்யப்பட்டு திறக்கப்பட்டது.[24] இந்த ஏரியில் "தங்க மகாசீர்" மீன்கள் நிறைந்துள்ளன. இந்த இடத்தில் மீன்பிடித்தல் கண்டிப்பாக தடைசெய்யப்பட்டிருந்தாலும், இந்த ஏரி ஒரு முக்கிய சுற்றுலா அம்சமாகும். கரூர் அருகிலுள்ள பழமையான சந்தைகளில் ஒன்றாகும்.

பாரம்பரியம்

பைஜ்நாத் கோயில்
பைஜ்நாத் கோயில்கள்

பைஜ்நாத்தில் பார்வையிட வேண்டிய மிக முக்கியமான இடங்களில் ஒன்று பன்னிரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட வரலாற்று மற்றும் மத முக்கியத்துவம் வாய்ந்த பைஜ்நாத் கோயிலாகும். இது கி.பி 1150ஆம் ஆண்டில் குமாவுன் கத்யூரி மன்னரால் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது, பொ.ச. 12 மற்றும் 13ஆம் நூற்றாண்டுகளில் உத்தராஞ்சலை ஆண்ட கத்யூரி மன்னர்களின் தலைநகரமும் ஆகும். இந்துப் புராணங்களின்படி, சிவனும், பார்வதியும் கோமதி ஆறும் கருர் கங்கையும் சங்கமிக்கும் இடத்தில் திருமணம் செய்து கொண்டதால் இந்த கோயில் முக்கியத்துவம் வாய்ந்தது. மருத்துவர்களின் இறைவனான வைத்யநாதருக்கு அர்ப்பணிக்கப்பட்ட பைஜ்நாத் கோயில் கத்யூரி மன்னர்களால் சிவன், பிள்ளையார், பார்வதி, சண்டிகேசுவரர், குபேரன், சூரிய தேவன், பிரம்மா ஆகியோரின் சிலைகளுடன் கட்டப்பட்ட கோயில்களின் வளாகமாகும். பைஜ்நாத் நகரம் கோயிலிலிருந்து அதன் பெயரை பெறுகிறது. கோமதி ஆற்றின் இடது கரையில் 1,126 மீ உயரத்தில் கல்லில் கட்டப்பட்டுள்ளன. பார்வதியின் அழகிய சிலை அமைந்துள்ள பிரதான கோயில் கருப்பு கல்லில் கட்டப்பட்டுள்ளது. ஒரு கத்யூரி இராணியின் உத்தரவின் பேரில் கட்டப்பட்ட கற்களால் ஆன படிகள் ஆற்றங்கரையிலிருந்து கோயிலை அணுகுகிறது.

போக்குவரத்து

பந்த்நகர் விமானநிலையம் அருகிலுள்ள விமான நிலையமாகும். காத்கோடம் இரயில் நிலையம் அருகிலுள்ளது. பாகேசுவர் - குவால்தாம் மற்றும் அல்மோரா - கோபேசுவர் சாலையின் சந்திப்பில் பைஜ்நாத் அமைந்துள்ளது.

இது உத்தராகண்டம் போக்குவரத்துக் கழகத்தின் 'குமாவுன் தரிசனம்' சேவையால் ஹல்துவானி, பீம்தால், அல்மோரா மற்றும் ராணிகேத் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது .[25]

தனக்பூர் முதல் பாகேசுவர் வரை ஒரு இரயில் பாதையை அமைப்பது குறித்து அரசிடம் ஒரு திட்டம் இருக்கிறது. இது நடைமுறைப்படுத்தப்பட்டால் இந்த மாவட்டத்தை விரைவான தேசிய இணைப்பிற்கு கொண்டு வந்து விரைவில் மிகப் பெரிய சுற்றுலா ஈர்ப்பாக மாறும்.[26][27][28]

படத் தொகுப்பு

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்