இந்தி

இந்திய மொழி

இந்தி (Hindi, இந்தி: हिन्दी, நவீன தரநிலை இந்தி: मानक हिन्दी) அல்லது ஹிந்தி இந்தியாவின் வட மாநிலங்களில் பெரும்பான்மையாகப் பேசப்படும் மொழியாகும். சமஸ்கிருதம்அடிப்படையாகக் கொண்ட இம்மொழியில், உருது, பாரசீக, மற்றும் அரேபிய மொழிகளின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இந்தி இந்தியாவின் அரசு ஏற்புப் பெற்ற 22 மொழிகளுள் ஒன்று.[5] இந்திய அரசியல் அமைப்பின் பிரிவு 343 (1) இன் கீழ் இந்தி நடுவண் அரசின் அலுவலக மொழிகளுள் ஒன்றாகும்.[6] பாலிவுட் என்று அழைக்கப்படும் மும்பை படவுலகம் இந்தி உலகம் முழுவதும் பரவ காரணமாக இருக்கிறது.

இந்தி
हिन्दी, हिंदी
நாடு(கள்)இந்தியா மற்றும் பாகிஸ்தான். (இந்துஸ்தான்).
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
முதல் மொழி பேசுவோர்: ~ 49 மில்லியன் (2008)[1]
இரண்டாம் நிலை பேசுவோர்: 12–22 மில்லியன் (1999)[2]  (date missing)
தேவநாகரி, Kaithi, Latin, andseveral regional scripts.
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
 இந்தியா
Regulated byமத்திய ஹிந்தி இயக்குநரகம் (இந்தியா),[4]
மொழிக் குறியீடுகள்
ISO 639-1hi
ISO 639-2hin
ISO 639-3hin
இந்தியாவில் ஹிந்தி பேசுவோரின் பரவல்

பரவல்

இந்தி இந்தியாவின் வட பகுதி முழுவதும் பரவலாக பேசப்படுகிறது. இந்தியாவில் தில்லி, ராஜஸ்தான்,[7] அரியானா, உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், சத்திஸ்கர், இமாச்சல பிரதேசம், ஜார்கண்ட் மற்றும் பீகார் போன்ற மாநிலங்களில் பேசப்படுகிறது. பிற இந்திய மாநிலங்களில் இரண்டாவது/மூன்றாவது மொழியாக மும்மொழி திட்டத்தின் கீழ் பயிற்றுவிக்கப்படுகிறது.

பேச்சு இந்தி

எண்கள்

  1. - ஏக் (एक) = ஒன்று
  2. - 'தோ (दो) = இரண்டு
  3. - தீன் (तीन) = மூன்று
  4. - சார் (चार) = நான்கு
  5. - பாஞ்ச் (पांच) = ஐந்து
  6. - சே (छः) = ஆறு
  7. - சாத் (सात) = ஏழு
  8. - ஆட் (आठ) = எட்டு
  9. - நௌ (नौ) = ஒன்பது
  10. - தஸ் (दस) = பத்து

100 - சௌ (सौ) = நூறு

1000 - ஹசார் (हजार) = ஆயிரம்

பொதுவானவை

  • நமஸ்தே = வணக்கம்
  • கித்னா = எத்தனை ?
  • ஊப்பர் = மேலே - பொதுவாக தொடருந்தில் பயணிக்கும் போது ஊப்பர் சீட் - மேற்படுக்கை).
  • நீச்சே = கீழ் - பொதுவாக தொடருந்தில் பயணிக்கும் போது நீச்சே சீட் - கீழ்ப்படுக்கை).
  • ஜாயேகா? = போகுதா? போகுமா?- எ.கா பூபசண்டா 'சாயேகா? - பூபசண்டாரா போகுதா?)
  • ச்சாயேகா ? = வேண்டுமா ? எ.கா ச்சா சாயேகா ? - தேநீர் வேண்டுமா ?
  • கிஸ் தரஃப் - எந்தப் பக்கம்? எ.கா கிஸ் தரஃப் ஜாயேகா - எந்தப் பக்கம் போகும் ?
  • கத்தம் ஹோகயா = முடிவடைந்து விட்டது.
  • கல் - நேற்று (அல்லது) நாளை
  • ஆப்கா நாம் க்யா ஹை = உங்கள் பெயர் என்ன?
  • மேரா நாம் ராம் ஹை = என் பெயர் ராம்.
  • மே தும்ஸே ப்யார் கர்தா/கர்தீ ஹூ = நான் உன்னை காதலிக்கிறேன்.
  • டீக் ஹை = சரி
  • தன்யவாத் = நன்றி

எழுத்துக்கள்

இந்தி மொழி தேவநாகரி (देवनागरी लिपि தேவநாகரி லிபி) எழுத்துக்களில் எழுதப்படுகிறது. தேவநாகரி உயிரொலிகளையும், 33 மெய்யொலிகளையும் கொண்டுள்ளது. இது இடது பக்கத்தில் இருந்து வலமாக எழுதப்படுகிறது.

இந்தி சொற்களும் அவற்றின் தமிழ் கருத்துக்களும்

தமிழ்இந்திதமிழ் கருத்து
பாபுबापूஅப்பா
மா(ன்)माँஅம்மா
பாயிभाईசகோதரன்
பஹன்बहनசகோதரி
பையாभैयाஅண்ணன்
தீதீदीदीஅக்கா
மே(ன்)मैंநான்
இந்தி சொற்களும் அதன் தமிழ் கருத்துக்களும் [a]
இந்திதமிழ்தமிழ் கருத்து
बिजलीபிஜ்லீமின்சாரம்
क्रयக்ரயவாங்குதல்
खोलनाகோல்னாதிறத்தல்
पूर्वபூர்வகிழக்கு
वाहनவாஹன்கார், வாகனம்
लालலால்சிவப்பு
घोड़ाகோடாகுதிரை
कुछ नहींகுச் நஹீஒன்றும் இல்லை
पक्षीபக்ஷீபறவை
गर्मகர்ம்சூடு
जबஜப்அப்போது
कहानी की भाषाகஹானீ கீ பாஷாபேச்சு மொழி
पतला खानபத்லா கான்மெல்லிய கான்
बुद्धाபுத்தபுத்தர்
कालाகாலாகறுப்பு
शीतलஷீதல்குளிர்
खरगोशகர்கோஷ்முயல்
ईर्ष्याஈர்ஷ்யாபொறாமை
सुननाஸுன்னாகேள்
तथ्यதத்யஉண்மை
कछुआகச்சுஆஆமை
चित्रசித்ரசித்திரம்
लड़ाईலடாஈசண்டை, போர்
रस्सीரஸ்ஸீகயிறு
बहुत करीबபஹுத் கரீப்மிக நெருக்கமான, உறவு
लोहाலோஹாஇரும்பு, உலோகம்
छविசவிபடம்
समूहஸமூஹ்சமூகம்
मोड़மோட்திரும்பு
भयानकபயானக்கெட்ட, பயங்கரமான
मस्तिष्कமஸ்திஷ்க்மூளை
मुर्गाமுர்காகோழி
कीमतகீமத்விலை
हंसीஹன்ஸீசிரிப்பு
हवाஹவாகாற்று
आम कमराஆம் கம்ராபொதுவறை, அலுவலகம்
शोरஷோர்சத்தம், குரல்
पठनபட்னபடித்தல்
शरीरஷரீர்உடல்
बिन्दुபிந்துபுள்ளி
बिल्लीபில்லீபூனை
मकड़ीமக்டிபூச்சி
पुरानाபுராணாபழைய
कर सकताகர் சக்தாமுடியும், இணைதல்
दस हजारதஸ் ஹஜார்பத்தாயிரம்
चोरசோர்திருடன்
निखात निधिநிகாத் நிதிபுதையல்
देशதேஷ்நாடு
दवाதவாமருந்து
दो जोड़ीதோ ஜோடீஇரண்டு சோடி
संबंधஸம்பந்த்தொடர்பு

ஆதாரங்கள்

வெளியிணைப்புகள்

இந்தி பற்றிய மேலதிக தகவல்களைப் பார்க்க தொடர்புடையத் திட்டங்கள்:

விக்சனரி விக்சனரி
நூல்கள் விக்கிநூல்
மேற்கோள் விக்கிமேற்கோள்
மூலங்கள் விக்கிமூலம்
விக்கிபொது
செய்திகள் விக்கிசெய்தி


Wikipedia
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் இந்திப் பதிப்பு

பொது

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=இந்தி&oldid=3883978" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை