51 பெகாசி

51 பெகாசி (51 Pegasi) என்பது ஒரு சூரியநிகர் விண்மீனாகும் இது புவியில் இருந்து 50.9 ஒளியாண்டு தொலைவில் பெகாசசு விண்மீன் குழுவில் உள்ளது. இதுவே முதன்முதலில் கண்டறியப்பட்ட புறவெளிக்கோள் ஆகும்.[10] இதுவே சூரியனுக்கு அடுத்ததாகக் கோள்களைக் கொண்டிருக்கக்கூடிய விண்மீன் என 1995 ஆம் ஆண்டில் கண்டறியப்பட்டது.இக்கண்டுபிடிப்பு பற்றிய தகவலை 1995, அக்டோபர் 6 ஆம் நாள் மிசல் மயோர் மற்றும் திதியே கெலோ ஆகியோர் அறிவித்தனர்[11]. இக்கண்டுபிடிப்புக்காக இவர்களுக்கு 2019 ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசு அளிக்கப்பட்டது[12].

51 பெகாசி

சிவப்புப் புள்ளி பெகாசசு விண்மீன்குழுவில் 51 பெகாசி அமையும் இருப்பைக் காட்டுகிறது.
நோக்கல் தரவுகள்
ஊழி J2000.0      Equinox J2000.0
பேரடைபெகாசசு
வல எழுச்சிக் கோணம்22h 57m 27.98004s[1]
நடுவரை விலக்கம்+20° 46′ 07.7912″[1]
தோற்ற ஒளிப் பொலிவு (V)5.49[2]
இயல்புகள்
விண்மீன் வகைG5V[3]
தோற்றப் பருமன் (B)6.16[4]
தோற்றப் பருமன் (R)5.0[4]
தோற்றப் பருமன் (I)4.7[4]
தோற்றப் பருமன் (J)4.66[4]
தோற்றப் பருமன் (H)4.23[4]
தோற்றப் பருமன் (K)3.91[2]
U−B color index+0.20[5]
B−V color index+0.67[5]
V−R color index0.37
R−I color index0.32
வான்பொருளியக்க அளவியல்
ஆரை வேகம் (Rv)−33.7 கிமீ/செ
Proper motion (μ) RA: 207.25 ± 0.31[1] மிஆசெ/ஆண்டு
Dec.: 60.34 ± 0.30[1] மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)64.07 ± 0.38[1] மிஆசெ
தூரம்50.9 ± 0.3 ஒஆ
(15.61 ± 0.09 பார்செக்)
தனி ஒளி அளவு (MV)4.51
விவரங்கள்
திணிவு1.11[3] M
ஆரம்1.237 ± 0.047[2] R
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g)4.33[6]
ஒளிர்வு1.30 L
வெப்பநிலை5571 ± 102[2] கெ
சுழற்சி21.9 ± 0.4 days[7]
அகவை6.1–8.1[8] பில்.ஆ
வேறு பெயர்கள்
51 Peg, GJ 882, HR 8729, BD +19°5036, HD 217014, LTT 16750, GCTP 5568.00, SAO 90896, HIP 113357.[9]
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata
NStEDdata
ARICNSdata
Extrasolar Planets
Encyclopaedia
data

இயல்புகள்

51 பெகாசி

இந்த விண்மீனின் தோற்றப் பருமை 5.49 ஆகும், தகுந்த காட்சிச் சூழலில் வெற்றுக்கண்ணாலேயே இதைப் பார்க்கலாம். இதற்கான பிளேம்சுடீடு பெயரீடு 51 பெகாசி. இது ஜான் பிளேம்சுடீடு தான் 1712 இல் வெளியிட்ட விண்மீன் அட்டவணையில் அளித்த பெயராகும்.

51 பெகாசி G5V விண்மீன் வகைபாட்டைச் சார்ந்ததாகும்.[3] இந்த வகைபாடு இது தன் அகட்டில் நீரகத்தை வெப்ப அணுக்கரு பிணைவால் ஆற்றலை உருவாக்கும் முதன்மை வரிசையில் அமையும் விண்மீனாகும் என்பதைச் சுட்டுகிறது. இதன் வண்ணக்கோளத்தின் விளைவுறு வெப்பநிலை5571 K. இந்நிலை 51 பெகாசிக்கு G வகை விண்மீன்களின் மஞ்சள் நிறப்பாங்கைத் தருகிறது.[13] இது சூரியனைவிட அகவை முதிர்ந்ததாகும். இதன் அக்வை 6.1–8.1பில்லியன் ஆண்டுகள் ஆகும். இதன் ஆரம் சூரியனைவிட 24% பெரியதாகும்; இதன் பொருண்மை சூரியனைவிட 11% பெரியதாகும். இந்த விண்மீன் நீரகம், எல்லியம் தவிர, சூரியனைவிட கூடுதலான பொன்மத்தன்மை தனிமங்களைப் பெற்றுள்ளது. இதைப் போல உயர் பொன்மத்தன்மையுள்ள விண்மீன்கள் கோள்களைப் பெற்றிருக்கும் வாய்ப்புள்ளது.[3] என்றாலும் 1996 இல் வானியலாளர்கள் பாலியூனசும் சொகொலோவும் விரைவிலேயே வட்டணை நேரத்தை அளந்து 51 பெகாசி விண்மீனை இக்கோள் 37 நாட்களுக்கு ஒருமுறை சுற்றுவதாகக் கண்டறிந்தனர்.[14]

முதலில் இது மாறும் விண்மீனாகக் கருதப்பட்டாலும், 1981 ஆய்வும்[15] பின்னரான நோக்கீடுகளும் இதில் வண்ணக்கோளச் செயல்பாடேதும் இல்லை என 1977ஐப் போலவே 1989 இலும் நிறுவின. மேலும் 1994 முதல் 2007 வரை நிகழ்ந்த ஆய்வுகளும் கூட இதே நிலையை உறுதி செய்தன. மேலும் இதன் மிகக் குறைவான X-கதிர் உமிழ்வும் இந்த விண்மீன் சிறும மவுண்டர் வட்டணைநேரத்தில் அமைவதாகவும் [3] இக்கால இடைவெளியில் இது குறைந்த விண்மீன் கரும்புள்ளிகளையே உருவாக்குவதும் தெரிவிக்கின்றன.

இந்த விண்மீன் புவியைச் சார்ந்து 79+11
−30
பாகைகள் சாய்வுடன் சுற்றிவருகிறது.[7]

கோள் அமைப்பு

புறவெளிக்கோள் 51 பெகாசி bயின் ஓவியம்.[16]

சுவீடன் வானியலாளர்களான மைக்கேல் மேயரும் திதியேர் குவெலாழும் 1995 அக்தோபர் 6 இல் 51 பெகாசியைச் சுற்றும் புறக்கோள் ஒன்றைக் கண்டுபிடித்ததை அறிவித்தனர்.[10] இந்தக் கண்டுபிடிப்பு டாப்ளர் கதிர்நிரலியல் ஆர விரைவு முறையால் பிரான்சு அவுத்தே மாகாணத்தில் உள்ள வான்காணகத்தில் செய்யப்பட்டது. இதற்கு எலோடீ கதிர்நிரல் அளவி பயன்பட்டது. இதைச் சான்ஃபிரான்சிசுகோ மாநிலப் பல்கலைக்கழகத்தின் ஜியோஃப்ரி மார்சியும் பெர்க்கேலியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஆர். பவுல் பட்லரும் பின்னர் 1995 அக்தோபர் 12 இல் உறுதிப்படுத்தினர். பட்லர் இதை நிறுவ கலிபோர்னியா சான் உரோசில் உள்ள இலிக் வான்காணகத்தின் ஆமிள்டன் கதிர்நிரல் அளவியைப் பயன்படுத்தியுள்ளார்.

தாய் விண்மீனின் கோளமைப்பு உறுப்பினராக 51 பெகாசி b (51 Peg b) எனும் கோள் முதலில் கண்டறியப்பட்டது. இந்தக் கோள் பெலெரொபோன் என பெயரிடப்பட்டுள்ளது. இக்கோள் கண்டறியப்பட்ட பிறகு பல குழுக்கள் இதன் நிலவலை உறுதிப்படுதியதோடு இதன் இயல்புகள் சார்ந்த பல ஆய்வுகளை நிகழ்த்தினர்.மேலும் இது தாய் விண்மீனின் அருகில் அமைந்துள்ளதையும் எனவே கோள் மேற்பரப்பு வெப்பநிலை1200 °C ஆக உள்ளதையும் இதன் பொருண்மை வியாழனைப்போல அரைப்பகுதியாக உள்ளதையும் கண்டறிந்தனர். அப்போது இவ்வளவு நெருங்கிய கோளின் தொலைவு கோளாக்க்க் கோட்பாடுகளோடு பொருந்திவரவில்லை. எனவே கோள்நகர்வு குறித்த விவாதங்கள் எழுந்தன. தாய் விண்மீனின் 79 பாகைச் சாய்வைக் கோளும் பகிர்வதாகக் கொள்ளப்பட்டது.[17] என்றாலும் பல "சூடான வியாழன்கள்" விண்மீன் அச்சுக்குச் சாய்ந்து அமைவது கண்டறியப்பட்டுள்ளது.[18]

மேலும் காண்க

விண்மீன் அமைப்புகள்
  • PSR 1257+12
  • 55 நளி (Cancri)
  • 70 கன்னி
  • 47 பெருங்கரடி
  • அப்சிலான் ஆந்திரமேடாக்கள்
  • தாவ் பூட்டிசு

பிற வான்பொருள்கள்
  • புறக்கோள்களின் பட்டியல்
  • சூரிய இரட்டை
வலைவாசல்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=51_பெகாசி&oldid=3581900" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்