விண்மீன் வகைப்பாடு

வானியலில் விண்மீன் வகைப்பாடு என்பது விண்மீன்களை அதனது நிறமாலையைக் கொண்டு வகைப்பாடு செய்யப்படுவதாகும். விண்மீனின் நிறமண்டலத்தில் ஏற்படும் அயனாக்கம் மற்றும் வெப்பநிலை மாற்றங்கள் காரணமாக நிறங்கள் வேறுபடுகின்றன. வெற்றுக் கண்ணால் விண்மீன்களைப் பொதுவாகப் பார்க்கும் போது வெண்ணிறமானவை போலத் தோன்றினாலும் அவற்றை உற்று நோக்கினால் அல்லது தொலைக்காட்டியின் உதவி கொண்டு நோக்கினால் நிற வேறுபாடுகளைக் கண்டறிய முடியும். சிவப்பு, நீலம், மஞ்சள் போன்ற நிறங்களில் விண்மீன்கள் ஒளிர்கின்றன.

இவ்வகைப்பாடு O, B, A, F, G, K, M ஆகிய இலத்தீன் குறியீடுகளால் குறிக்கப்படுகின்றன. இங்கு “O “ வெப்பம் மிகவும் கூடியது, “M” வெப்பம் குறைந்தது. “O” விலிருந்து “M” இற்குச் செல்லுகையில் வெப்பம் குறைந்து கொண்டு செல்கின்றது. எ.கா: Oவை விட Bக்கு வெப்பம் குறைவு. ( இவ்வரிசைக்கிரமத்தை நினைவில் நிறுத்த: "Oh, be a fine girl/guy, kiss me" ). இவற்றின் நிறங்கள்: O "நீலம்", B "வெளிர் நீலம்", A "வெள்ளை", F "வெளிர் மஞ்சள்", G "மஞ்சள்", K "செம்மஞ்சள்" அல்லது ஆரஞ்சு, M "சிவப்பு".

மேக்நாத் சாகா எனும் இந்திய வானியற்பியலாளர் அயனியக்க சமன்பாடு மூலம் விண்மீன்களில் சில தனிமங்கள் அயனி நிலையில் இருக்கின்றன என்ற கோட்பாட்டை விளக்கினார். இதன் மூலம் விண்மீன்களின் வெப்ப நிலையைக் கண்டறியலாம். தனிமங்களின் அயனியக்கத்தில் வெப்பத்தின் தாக்கம் பெரும் பங்கு வகிக்கிறது.

கார்வார்ட் நிறமாலை வகைப்பாடு

கார்வார்ட் (Harvard) நிறமாலை வகைப்பாடு ஒரு ஒற்றைப்பரிமாண வகைப்பாட்டு நடைமுறையாகும். விண்மீன்களின் புறப்பரப்பின் வெப்பநிலை 2 தொடக்கம் 40 கிலோ கெல்வின் (kK) வரை (2,000 தொடக்கம் 40,000 கெல்வின்) வேறுபடுகின்றது. வெப்பநிலையைப் பொறுத்து அதிகூடிய வெப்பநிலையில் இருந்து வெப்பநிலை குறைந்த விண்மீன்கள் பட்டியலிடப்படுகின்றன:

வகைவெப்பநிலை[1]
(கெல்வின்கள்)
வழங்குமுறை நிறம்தோன்றும் நிறம்[2][3][4]நிறை[1]
(சூரிய நிறை)
ஆரை[1]
(சூரிய ஆரை)
ஒளிர்வளவு[1]
(வெப்பவீச்சளவு)
ஐதரசன்
வரிகள்
(நீரக ஒளிவரி)
அனைத்து விண்மீன் தொடர்ப்
பின்னம்
O≥ 33,000 Kநீலம்நீலம்≥ 16 M≥ 6.6 R≥ 30,000 Lமந்தமானது~0.00003%
B10,000–33,000 Kநீலம் - நீல வெள்ளைநீல வெள்ளை2.1–16 M1.8–6.6 R25–30,000 Lஇடைத்தரமானது0.13%
A7,500–10,000 Kவெள்ளைவெள்ளை - நீல வெள்ளை1.4–2.1 M1.4–1.8 R5–25 Lவலிமையானது0.6%
F6,000–7,500 Kமஞ்சள் வெள்ளைவெள்ளை1.04–1.4 M1.15–1.4 R1.5–5 Lஇடைத்தரமானது3%
G5,200–6,000 Kமஞ்சள்மஞ்சள் வெள்ளை0.8–1.04 M0.96–1.15 R0.6–1.5 Lமந்தமானது7.6%
K3,700–5,200 Kஆரஞ்சுமஞ்சள் ஆரஞ்சு0.45–0.8 M0.7–0.96 R0.08–0.6 Lமிகவும் மந்தமானது12.1%
M≤ 3,700 Kசிவப்புஆரஞ்சு சிவப்பு≤ 0.45 M≤ 0.7 R≤ 0.08 L76.45%

யேர்க் நிறமாலை வகைப்பாடு

மோர்கன்-கீனன் விண்மீன் வகைப்பாடு

யேர்க் நிறமாலை வகைப்பாடு அல்லது மோர்கன்-கீனன் (Morgan-Keenan) வகைப்பாடு என்பது தற்போது புழக்கத்தில் உள்ள புதிய வகைப்பாடாகும், இதில் நிறமாலைக்குரிய எழுத்துக்கள் ஒவ்வொன்றும் மேலும் 0 தொடக்கம் 9 வரையிலான எண்களால் விரிவாக்கப்படுகின்றன, இவை இரண்டு விண்மீன்கள் வகுப்புக்களுக்கு இடையிலான நிற எல்லையைச் சுட்டும் பத்தின் கூறுகளாகும், அதாவது G,G1, G2, G3....G9,K எனும் இவ்வரிசையில் G5 என்றால் Gக்கும் Kக்கும் இடையே உள்ள பத்தில் ஐந்தாவது பகுதியாகும், G2 என்றால் Gக்கும் Kக்கும் இடையே உள்ள பத்தில் இரண்டாவது பகுதியாகும். ஒரு (G) வகுப்பில் உள்ள விண்மீன்களில் இரண்டு வெவ்வேறு விண்மீன்களை (G2, G7) ஒப்பிடுகையில் குறைந்த எண் கொண்ட விண்மீன், கூடிய எண் கொண்டதைவிட வெப்பம் மிகுந்தது ஆகும் (G2>G7).

மோர்கன்-கீனன் வகைப்பாட்டில் பயன்படுத்தும் இன்னுமொரு பரிமாணம் ஒளிர்வளவு ஆகும், இது I, II, III, IV, V ஆகிய உரோமன் எழுத்துக்களால் குறிக்கப்படுகின்றது. இது பொதுவாக விண்மீனின் அளவை (ஆரையை) அளக்கப்பயன்படுகின்றது. வகுப்பு I என்பது பெரும் பூதம் என்றும், வகுப்பு III பூதம் என்றும், V எனும் வகுப்பு குள்ளன் அல்லது முதன்மைத் தொடர் விண்மீன்கள் என்றும் பொதுவாக அழைக்கப்படுகின்றது. நமது சூரியன் G2V எனும் நிறமாலை வகுப்பில் உள்ளது; மஞ்சள் நிற, ஆரஞ்சு நிறத்தை நோக்கி பத்தில் இரண்டு பகுதி கொண்ட முதன்மைத் தொடர் விண்மீன் என்று இதனைக் குறிபெயர்க்கலாம்.

ஒளிர்வளவைப் பொறுத்து பின்வருமாறு விண்மீன்கள் அழைக்கப்படுகின்றன:

  • 0 மிகைஒளிர் பூதம் (hypergiants)
    • I மீஒளிர் பூதம் (supergiants)
    • Ia-0
    • Ia
    • Iab
    • Ib
  • II ஒளிர் பூதம் (bright giants)
  • III இயல்பொளிர் பூதம் (normal giants)
    • IIIa
    • IIIab
    • IIIb
  • IV தாழ் ஒளிர் பூதம் (subgiants)
    • IVa
    • IVb
  • V முதன்மைத் தொடர் விண்மீன்கள் (குள்ளர்கள்) (main sequence stars (dwarfs) )
    • Va,
    • Vab
    • Vb,
    • "Vz",
  • VI தாழ் குள்ளர்கள் (subdwarfs.)
  • VII வெண் குள்ளர்கள் white (dwarfs.)

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=விண்மீன்_வகைப்பாடு&oldid=3228659" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை