அகிம்சை பட்டு

அகிம்சை பட்டு (Ahimsa Silk) என்பது பட்டுப்பூச்சி இனப்பெருக்கம் மற்றும் அறுவடைக்கான ஒரு முறையாகும். இம்முறையில் உள்நாட்டுப் பட்டுப்பூச்சிகளைவிட, வனத்தில் காணப்படும் பட்டு அந்துப்பூச்சிகள் இனப்பெருக்கம் செய்யப் பயன்படுத்தப்படுகின்றன. இது பட்டுப்புழுவின் உருமாற்றத்தை அந்துப்பூச்சி நிலைக்கு வரை அனுமதித்து பட்டு கூடுகள் அறுவடை செய்யப்படுகின்றன. ஆனால் பெரும்பாலான பட்டு அறுவடைக்குப் பட்டுப்புழுக்கள் அவற்றின் கூட்டுப்புழு பருவத்தில் கொல்லப்பட வேண்டும். அகிம்சை பட்டு உற்பத்தியில் எந்த விலங்குகளும் பாதிக்கப்படுவதில்லை அல்லது கொல்லப்படவில்லை. இது விலங்குகளுக்குத் தீங்கு விளைவிக்க விரும்பாவதவர்களின் பட்டுத்தெரிவாக அமைகிறது.

செயல்முறை

பட்டுப்புழு கூடு வெட்டப்பட்ட நிலையில்

இம்முறையில் கூட்டுப்புழுவானது அந்துப்பூச்சியாக மாற அனுமதிக்கப்படுகிறது, பின்னர் பட்டு கூடானது பட்டு தயாரிக்கப் பயன்படுகிறது.

பாம்பிக்ஸ் மோரி (மல்பெரி பட்டுப்புழு அல்லது மல்பெரி பட்டு அந்துப்பூச்சி) அகிம்சை பட்டு உருவாக்குவதற்கு விருப்பமான இனம் என்றாலும், அகிம்சை பட்டு உற்பத்தி செய்ய வேறு பல இனங்களும் உள்ளன. ஆனால் இவை அவசியமான இனமாக வரையறுக்கப்படவில்லை. அகிம்சை முறை பட்டு உற்பத்தியில் பயன்படுத்தப்படும் மற்ற வகை பட்டுப்புழுக்கள் அய்லாந்தசு பட்டுப்புழு மற்றும் பல வகையான துசார் அல்லது டசார் அந்துப்பூச்சிகளாகும் (சீனா துசார் அந்துப்பூச்சி, இந்திய டசார் அந்துப்பூச்சி மற்றும் முகா அந்துப்பூச்சி).[1]

ஐலாந்தசு துணைச் சிற்றினமான சாமியா சிந்தியா ரைசினி, ஆமணக்கு பீன் அல்லது இலைகள் அல்லது மரவள்ளி இலைகள் உண்ணக்கூடியன. இது எரி பட்டு எனப்படுகிறது. எரி பட்டு இந்த குறிப்பிட்ட பூச்சிகளின் பட்டு கூட்டிலிருந்து தயாரிக்கப்படுகிறது. மேலும் சாதாரண வெப்ப சிகிச்சையை விடக் குறைவான வன்முறை முறைகளைப் பயன்படுத்திப் பட்டுத் தயாரிக்கப்படுகிறது. ஆனால் எரி பட்டுத் தரம் பெரும்பாலும் பாம்பிக்ஸ் மோரி அந்துப்பூச்சியின் சந்ததியினரால் உருவாக்கப்பட்ட பட்டுகளை விடத் தாழ்ந்ததாகக் காணப்படுகிறது.[2]

அகிம்சை பட்டு தாசர் மற்றும் துசா பட்டு ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படலாம். அந்துப்பூச்சிகளை அவற்றின் பட்டு கூடுகளை சொந்த வடிவமைப்புகளுக்கு விட்டுவிடுகிறது.

பண்புகள்

அகிம்சை பட்டின் முக்கிய பண்புகள் வன்முறை கருத்தின் அடிப்படை கொள்கைகளிலிருந்து பெறப்படுகின்றன. இந்தப் பட்டு உயிரினங்களுக்குத் தீங்கு விளைவிக்காமல் தயாரிக்கப்படுகிறது. ஆனால் சில நேரங்களில் கண்களை இழக்கக்குட்டிய ஆபத்துக்களும் உள்ளன. எனவே இவை பாதுகாக்கப்பட வேண்டும். இந்த இலட்சியங்களைச் சமண மதம், இந்து மதம் மற்றும் புத்த சமயம் போன்ற மதங்கள் பின்பற்ற வேண்டுகோள் விடுக்கின்றன. அகிம்சை வாழ்க்கை முறை ஆதரவாளர்கள் சமீபத்தில் தங்கள் வாழ்க்கை முறைக்கு ஏற்ப அகிம்சை பட்டு இருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.

ஒரு குறுகிய கால பொருளாதார நிலைப்பாட்டிலிருந்து, பட்டுப்புழுக்கள் வளர அனுமதிக்க 10 கூடுதல் நாட்கள் தேவைப்படுவதால், அகிம்சைப் பட்டுக்கான வாதத்தை உருவாக்குவது கடினம். மேலும் அந்துப்பூச்சிகளும் பட்டு கூட்டிலிருந்து வெளியேறுகின்றன. வன்முறையற்ற முறையில் கிடைக்கும் பட்டு அதிக விலையில் உள்ளது. சாதாரண பட்டு கூட்டின் விலையினை விட அகிம்சை பட்டின் விலை இரண்டு மடங்கு அதிகம்.[3]

மேலும் காண்க

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=அகிம்சை_பட்டு&oldid=3442405" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்