உலா (இலக்கியம்)

தமிழ் இலக்கியத்தில் உலா () என்பது பிரபந்தம் எனப்படும் தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றாகும். யானை, குதிரை, தேர் போன்றவற்றில் ஏறி, இசைக் கருவிகளை இசைப்போர் முன்னே வர, மக்கள் புடைசூழ நகர வீதிகளில் வருவது உலா என்னும் சொல்லால் குறிக்கப்படும். இறைவனோ அரசனோ இவ்வாறு உலா வருதலையும், அவ்வாறு உலா வருபவரைக் கண்டு மகளிர் காதல் கொள்வதையும் கருப்பொருளாகக் கொண்டு பாடப்படுவதே உலா இலக்கியம் ஆகும். தொல்காப்பியத்திலும்[1], சங்க இலக்கியங்களிலும் கூட உலா பற்றிய கருத்தாக்கங்கள் காணப்பட்டாலும், உலா என்பது ஒரு தனி இலக்கிய வகையாக உருவானது பிற்காலத்திலேயே ஆகும். பிற்காலத்துப் பாட்டியல் நூல்கள் உலா இலக்கியத்துக்கான இலக்கணத்தைக் கூறுகின்றன. பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் எனும் ஏழு பருவத்துப் பெண்களும்[2] உலாவரும் தலைவனைக் கண்டு அவன் மீது காதல் கொண்டு வருந்தும் நிலையைக் கலிவெண்பாப் பாட்டினால் கூறுவது என்பதே உலா இலக்கியத்துக்கு இந் நூல்கள் கூறும் இலக்கணம் ஆகும்[3].

பாகுபாடுகள்

பாட்டுடைத் தலைவன், ஏழு பருவப் பெண்கள் காமுறுதல், ஏழுநாள் உலா என்றெல்லாம் உலாநூல்களின் போக்கில் மாறுதல்கள் காணப்படுகின்றன. [4] [5]

இறைவன் உலா வருதலைக் கண்டு காதல் கொள்வது அருள்-காதல். இதனை ஞானக்காதல் என்றும் கூறுவர். [6] இறைவனின் அடியவர் உலா வரக் கண்டு காமுறுதலும் இந்த வகை. [7] அரசன் உலாவரக் கண்டு கற்புடைய மகளிர் காதல் கொண்டனர் எனப் பாடுவது தமிழ் மரபுக்கு ஒவ்வாதது. இவ்வாறு பாடப்பட்ட உலாவில் [8] காதல் கொண்டவர் பொதுமகளிர் என உரையாசிரியர்கள் அமைதி கண்டனர்.

உலா வரும் ஒரே நாளில் ஏழு பருவ மகளிர் கண்டு காமுற்றனர் எனப் பாடுவது பொது மரபு. மதுரை சொக்கநாதர் உலா இந்த மரபில் மாறுபடுகிறது. மதுரை சொக்கநாதன் ஏழு நாள் உலா வந்தான். முறையே தேர், வெள்ளை-யானை, வேதக்குதிரை, இடப-வாகனம், தரும-ரிஷபம், கற்பக-விருட்சம், சித்திர-விமானம் ஆகியவற்றின்மீது ஏறி ஏழு நாளும் உலா வந்தான் - என்று இந்த நூல் பாடுகிறது.

ஆதியுலா ஒரு தலத்தில் வந்த உலாவைப் பாடவில்லை. பல தலங்களின் மேலது.

உலாவின் பகுதிகள்

முன்னிலை

உலாவின் தொடக்கத்தில் பாட்டுடைத் தலைவனின் சிறப்பு, நீராடல், ஒப்பனை செய்தல், பரிவாரங்கள் புடைசூழ ஊர்தியில் ஏறி வீதிக்கு வருதல் என்னும் இவற்றைக் கூறும் பகுதி முன்னிலை எனப்படும்[9].

பின்னெழுநிலை

இதன்பின் ஏழு பருவ மகளிரும் குழுமி நின்றும் தனித்தனியாக நின்றும் கூறுவன பின்னெழுநிலை எனப்படும்[9].

பருவ வயது

ஏழு பருவ-மகளிரின் அகவையைக் குறிப்பிடுவதில் இலக்கண நூல்கள் மாறுபடுகின்றன.

பருவம்பன்னிரு பாட்டியல்பிங்கல நிகண்டுதனிப்பாடல் [10]
பேதை5-877
பெதும்பை9-=10119
மங்கை11-141312
மடந்தை15-181914
அரிவை24 வரை2518
தெரிவை29 வரை3121
பேரிளம்பெண்36 வரை4032

உலாக்கள்

உலா நூல்கள் அகர வரிசையில்:

குறிப்புகள்

உசாத்துணைகள்

இவற்றையும் பார்க்கவும்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=உலா_(இலக்கியம்)&oldid=3942415" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்