அட்டவணை (தரவுத்தளம்)

அட்டவணை (table)என்பது தரவுத்தளத்தில் ஒரு கட்டமைக்கப்பட்ட வடிவத்தில் உள்ள தொடர்புடைய தரவுகளின் தொகுப்பு ஆகும். இதில் உள்ள நெடுக்கு வரிசைகள் நிரல்கள் என்றும் கிடைமட்ட வரிசைகள்நிரைகள் என்றும் கூறப்படுகின்றன.

உறவுத் தரவுத்தளங்களிலும் தட்டைக் கோப்புத் தரவுத்தளங்களிலும், ஓர் அட்டவணை என்பது குத்துநிலை நிரல்களையும்(இது பெயர்வழி குறிப்பிடப்படும்) கிடைநிலை நிரைகளையும் கொண்ட படிமத்தைப் பயன்படுத்திய தரவுத் தனிமங்களின்(மதிப்புகளின்) கணம் ஆகும்; இதில் நிரலும் நிரையும் இடைவெட்டும் அலகு அறை எனப்படுகிறது.[1] ஓர் அட்டவணையில் குறிப்பிட்ட எண்ணிக்கை நிரைகள் இருக்கும். ஆனால், நிரைகள் எந்த எண்ணிக்கையிலும் இருக்கலாம்.[2] ஒவ்வொரு நிரையும் குறிப்பிட்ட நிரலின் துணைக்கணத்தில் உள்ள ஒன்று அல்லது அதற்கு மேலான மதிப்புகளால் இனங்காணப்படும். நிரைகளை ஒருமுகமாக இனங்காணும் நிரல்களின் குறிப்பிட்ட ஒரு தேர்வு முதன்மை விசைக்குமிழ் எனப்படுகிறது.

"அட்டவணை" என்பது "உறவு" என்பதற்கான மற்றொரு சொல்லாகும்; இவற்றிற்கிடையேயுள்ள ஒரு வேறுபாடு, அட்டவணை வழக்கமாக பல வரிசைகள் கொண்டது; ஆனால் உறவு என்பது ஒரு தொகுப்பு;பின்னது நகல் எடுக்க அனுமதிக்காது. வரிசைகளின் உண்மையான தரவு தவிர, அட்டவணைகள் பொதுவாக, மீத்தரவான சரிபார்ப்புக் கட்டுப்பாடுகள் அல்லது குறிப்பிட்ட நிரலில் உள்ள மதிப்புகள் போன்ற சில, பிற தரவுகளை பற்றிய தகவல்களோடு இணைக்கின்றன.

ஓர் அட்டவணையில் உள்ள தரவு, தரவுத்தளத்தில் புறநிலையாகச் சேமிக்கப்பட வேண்டியதில்லை. காட்சிகள் கூட உறவு அட்டவணைகளாகச் செயல்படுகின்றன; ஆனால், அவற்றின் தரவுகள் ஒவ்வொரு கணத்திலும் கணக்கிடப்படுகின்றன. வெளி அட்டவணைகள் ( எடுத்துகாட்டாக, இன்ஃபார்மிக்சு,[3]அல்லது ஒராக்கிள்[4][5]போன்றவை) காட்சிகளாகக் கருதப்படும்.நிரலீட்டு மொழி R, பைத்தான் மொழியின் பண்டாசு மென்பொருள் போன்ற கணிப்புசார் புள்ளியியலுக்கான பல அமைப்புகளில், ஒரு தரவுச் சட்டகம் அல்லது தரவு அட்டவணை என்பது அட்டவணையின் சுக்கத்தைத் தரும் ஒரு தரவு வகைமை ஆகும். கருத்தளவில், இதுஒத்த புலங்களை அல்லது நிரல்களைத் தரும் ஆவணங்கள் அல்லத் நோக்கீடுகளின் பட்டியல் ஆகும். பெயரிட்ட அணிகள் அல்லது நெறியங்களின்(திசையங்களின்) பட்டியலாக, இது நடைமுறைப்படுத்தப்படும்.

அட்டவணைகளும் உறவுகளும்

தரவுத்தளங்களின் உறவுப் படிமமாக, ஒரு அட்டவணை ஓர் உறவின் ஓர் ஏந்தான உருவகமாகக் கருதப்படலாம், ஆனால் அட்டவணையும் உறவும் ஒன்றுக்கொன்று சமமானது அன்று. எடுத்துகாட்டாக, வினவல் அமைப்பு மொழி(SQL), தன் அட்டவணையில், நகல் நிரைகளை கொண்டிருக்கலாம்;ஆனால், உண்மையான உறவு நகல் நிரைகளைக் கொண்டிருக்க முடியாது. இதேபோல், ஒரு அட்டவணையை உருவகப்படுத்தும்போது, நிரைகளும்ம் நிரல்களும் குறிப்பிட்ட வரிசைமுறைகளில் அமைகின்றன; அதேவேளையில் ஓர் உறவு எப்போதும் வெளிப்படையாக வரிசைமுறையில் வைக்கப்படுவதில்லை. இருப்பினும், வினவல் மொழி SQL அட்டவணையின் தேர்ந்தெடு(SELECT) அறிக்கையில் கட்டளை ஏதும் குறிப்பிடப்பட்டு இருந்தாலன்றி, அதன் தரவுத்தள அமைப்பு நிரைகள் எந்த வரிசைமுறையையும் உறுதிப்படுத்த மாட்டா.

ஓர் உறவுக்குச் சரிசமமான உருவகம், ஓர் n-பருமான வரைபடமாகும்; இங்கு, n இயற்பண்புகளின் எண்ணிக்கை ஆகும் ( அதாவது, ஓர் அட்டவணையின் நிரல்களின் எண்ணிக்கை ஆகும்)மெடுத்துகாட்டாக,கைரு இயற்பண்புகளும் இருமதிப்புகளௌம் கொண்ட உறவை, இருநிரல்களும் மூன்று நிரைகளும் கொண்ட அட்டவணைய்யாலோ அல்லது முப்புள்ளிகள் உள்ள இருபருமான வரைபடத்தாலோ உருவகப் படுத்தலாம். நிரைகளின் வரிசைமுறை முதன்மைப்படாமல், அட்டவணையில் நகல் நிரைகள் இல்லாமல் இருந்தால், அட்டவணை, வரைபட உருவகங்கள் சரிசமமானவை ஆகும்.

ஒப்பீடுகள்

படிநிலை தரவுத்தளங்கள்

உறவு சாரா முறைமைகளில், படிநிலை தரவுத்தளங்கள், ஓர் அட்டவணையின் தொலைநிலை உட்கரு ஒரு கட்டமைக்கப்பட்ட (கணினிக்) கோப்பாகும், கோப்பின் ஒவ்வொரு நிரையிலும் அட்டவணையின் நிரைகளும் ஒவ்வொரு நிரலும் ஒரு நிரையிலும் உருவகிக்கப்படும். இந்த கட்டமைப்பில் ஒரு நிரை, பொதுவாக குழந்தை தரவுப் பிரிவுகளில், திரும்பநிகழ் தகவலைப் பெற்றிருக்கும். இதில் புறநிலையான பதிவுகளின் வரிசைமுறையில் தரவு சேமிக்கப்படுகிறது.

விரிதாள்

ஒரு விரிதாளைப் போலன்றி, ஒரு நிரலின் தரவுவகைமை அட்டவணையை விவரிக்கும் (அளவையியல்) திட்டத்தின் மூலம் வழக்கமாக வரையறுக்கப்படுகிறது. SQLite போன்ற சில வினவல் அமைப்பு மொழி(SQL) அமைப்புகளில், நிரலின் தரவுவகைமை வரையறைகள் அவ்வளவு கடுமையானவை அல்ல.

மேலும் காண்க

மேற்கோள்கள்

🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்