அந்தோனி எவிசு

ஆங்கிலேய இயற்பியலாளரும் வானியலாளரும் (1924-2021)
(அந்தோனி எவிழ்சு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அந்தோனி எவிசு (Antony Hewish),[3] (பிறப்பு: 11 மே 1924, போவே, கார்ன்வால்) ஒரு பிரித்தானியக் கதிர்வீச்சு வானியலாளரும் அரசு கழக ஆய்வுறுப்பினரும் ஆவார். இவர் 1974 இல் இயற்பியலில் நோபல் பரிசை கதிர்வீச்சு வானியலாளரான மார்ட்டின் இரைலுடன் இணைந்து பெற்றுள்ளார் . இவருக்கு இப்பரிசு கதிர்வீச்சு பொருள்வில்லைத் தொகுப்பை உருவாக்கியதற்காகவும் துடிவிண்மீன்களின் நோக்கீட்டில் செய்த பங்களிப்புக்காகவும் தரப்பட்டுள்ளது. இவருக்கு அரசு வானியல் கழகத்தின் எடிங்டன் பதக்கமும் 1969 இல் வழங்கப்பட்டுள்ளது.[4][5][6]

அந்தோனி எவிசு
Antony Hewish
பிறப்பு(1924-05-11)11 மே 1924
போவி, இங்கிலாந்து
இறப்பு13 செப்டம்பர் 2021(2021-09-13) (அகவை 97)
தேசியம்ஐக்கிய இராச்சியம்
துறைகதிர்வீச்சு வானியல்
பணியிடங்கள்
கல்விகிங்சு கல்லூரி, டாண்டன்
கல்வி கற்ற இடங்கள்கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம் (இளங்கலை, முனைவர்)
ஆய்வேடுபால்வெளிக் கதிர்வீச்சு அலைகளின் அலைவுகள் (1952)
முனைவர் பட்ட 
மாணவர்கள்
ஜோசெலின் பெல் பர்னல்[1]
அறியப்படுவதுதுடிவிண்மீன்கள்
விருதுகள்
துணைவர்மார்ஜரி ரிச்சார்ட்சு[2]

இளமையும் கல்வியும்

இவர் டாவுண்டன் கிங் கல்லூரியில் பயின்றார். இவரது கேம்பிரிட்ஜ் கோன்வில்லி, கையசு கல்லூரி பட்டப்படிப்பு, முதல் உலகப்போரால் தடைப்பட்டுள்ளது. இவர் கல்விக்கு மாற்றாக அரசு வான்கல நிறுவனத்திலும் தொலைத்தொடர்பு ஆராய்ச்சி நிறுவனத்திலும் மார்ட்டின் இரைலுடன் பணிபுரிய நேர்ந்துள்ளது. இவர் 1946 இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்குத் திரும்பி வந்து தன் பட்டப்படிப்பை முடித்துள்ளார். உடனே இவர் இரைலின் குழுவில், அதாவது கேவண்டிழ்சு வானியற்பியல் குழுவில், கேவண்டிழ்சு ஆய்வகத்தில் சேர்ந்துள்ளார். இவர் 1952 இல் முனைவர் பட்டம் பெற்றார்.[7] இவர் கதிர்வீச்சு வாயில்களில் இருந்துவரும் கதிர்வீச்சு கோளிடை மின்ம ஊடகத்தில் விழும்போது ஏற்படும் விட்டு விட்டு ஒளிரும் தோற்றநிலை ஒளித்துடிப்புகளின் நோக்கீடுகளும் பயன்படுத்தலும் சார்ந்த கோட்பாட்டு, நடைமுறை ஆய்வு முன்னேற்றங்களில் ஈடுபட்டார். இதன்வழி இவர் கோளிடை ஒளித்துடிப்பு அணியை கட்டியமைக்கும் முன்மொழிவைத் தந்து அதற்கு வேண்டிய நிதியையும் பெற்றார். இது மிகப் பெரிய ஒளித்துடிப்பணியைகொண்ட கதிர்வீச்சுத் தொலைநோக்கியாகும். இது கேம்பிரிட்ஜ் முல்லார்டு கதிர்வீச்சு வான்காணகத்தில் கட்டியமைக்கப்பட்டது; இது கோளிடை ஒளித்துடிப்புகளைஉயர்நேரப் பிரிதிற அளக்கைக்குப் பயன்படுத்தபட்டு வருகிறது.

நோபல் பரிசு

இந்த அளக்கைத் திட்டத்தின்போது இவரது மேற்பட்ட மாணவர்களில் ஒருவரான ஜோசெலின் பெல் பர்னல் ஒரு கதிர்வீச்சு வாயிலை நோக்கியுள்ளார். இது இறுதியாக, முதன்முதலில் கண்டறிந்த துடிமீனாக(பல்சாராக) அறியப்பட்டுள்ளது.இந்தக் கண்டுபிடிப்புக்கான ஆய்வுக் கட்டுரையின்[8] ஆசிரியர்கள் ஐவராவர். இதில் எவிசு பெயர் பட்டியலில் முதலாவதாக உள்ளது; ஐரண்டாவதாக பெல்லின் பெயர் வருகிறது. இயற்பியலுக்கான நோபல் பரிசு 1974 ஆம் ஆண்டிலசெவிசுக்கும் [[மார்ட்டின் இரைலுக்கும் கதிர்வீச்சுப் பொருள்வில்லை தொகுப்பின் வளைச்சிக்கும் அது துடிமீன்களை கண்டறிய பயன்பட்டதற்கும் வழங்கப்பட்டது. பெல்லை இணைப்பரிசாளராகச் சேர்க்காமல் எவிசுக்கும் இரைலுக்கும் தந்த நோபல் பரிசுக்கு எவிசின் சமகால வானியலாளரான பிரெடு ஆயில் கண்டித்தார்.[9][10]

வாழ்க்கைப்பணியும் ஆராய்ச்சியும்

இவர் 1971 முதல் 1989 வரை கேவண்டிசு ஆயவகத்தின் கதிர்வீச்சு வானியல் பேராசிரியராகத் திகழ்ந்தார். இவர் 1982 முதல் 1988 வரை முல்லார்டு கதிர்வீச்சு வான்காணகத்தின் தலைவராகவும் இருந்துள்ளார். இவர் சர் இலாரன்சு பிரேகு இயக்குநராக இருந்தபோது இலண்டன் அரசு நிறுவனத்துடன் இணைந்து பல வளர்ச்சிப்பணிகளில் ஈடுபட்டார். இவர் 1965 இல், ,< புடவியின் தேட்டம்(Exploration of the Universe) எனும் அரசு நிறுவனக் கிறித்துமசு விரிவுரையாற்ற அழைக்கப்பட்டார். பிறகு இவர் பல வெள்ளிக்கிழமை மாலை உரைகளை ஆற்றியுள்ளார்.[6] இவர் 1977 இல், அரசு நிறுவனப் பேராசிரியரும் ஆனார்.[2][11]

இவர் கேம்பிரிட்ஜ், சர்ச்சில் கல்லூரியின் ஆய்வுறுப்பினர் ஆவார். இவர் அறிவியல், பொறியியல் பரப்புரைக்கான அறிவுரைஞர் குழுவின் உறுப்பினரும் ஆவார்.[12]

தகைமைகளும் விருதுகளும்

எவிழ்சு மான்செசுட்டர், கேம்பிரிட்ஜ், எக்சேட்டர் உட்பட, ஆறு பல்கலைக்கழகங்களில் தகைமைப் பட்டம் பெற்றுள்ளார். இவர் பெல்ஜியம் கலை, அறிவியல் அரசு கல்விக்கழகம், அமெரிக்கக் கலை, அறிவியல் கல்விக்கழகம், இந்தியத் தேசிய அறிவியல் கல்விக்கழகம் ஆகியவற்றின் அயல்நாட்டு உறுப்பினர் ஆவார். இவரது மற்ற தகைமைகள், விருதுகளில் பின்வருவன அடங்கும்:[2]

  • இவர் 1968 இல் அரசு கழகத்தில் உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.[3]
  • எடிங்டன் பதக்கம், அரசு வானியல் கழகம் (1969)
  • டெல்லிஞர் பொற்பதக்கம், பன்னாட்டு கதிர்வீச்சு அறிவியல் ஒன்றியம் (1972)
  • ஆல்பர்ட் ஏ. மைக்கேல்சன் பதக்கம், பிராங்ளின் நிறுவனம் (1973, ஜோசெலின் பெல் பர்னலுடன் கூட்டாக]][13]
  • இயற்பியலில் நோபல் பரிசு (மார்ட்டின் இரைலுடன் கூட்டாக ) (1974)
  • அக்சு பதக்கம், அரசு கழகம் (1977)
  • இவர் 1998 இல் இயற்பியல் நிறுவனத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் (FInstP)[2]

சொந்த வாழ்க்கை

இவர் மார்யோரி எலிசபெத் காதரைன் இரிச்சர்ட்சை 1950 இல் மணந்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உண்டு. இவரது மகன் ஓர் இயற்பியலாளர் ஆவார். இவரது மகள் ஆங்கில ஆசிரியர் ஆவார்.[6][6]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=அந்தோனி_எவிசு&oldid=3708971" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்