அரசதனியுரிமை

ஒரு குறிப்பிட்ட பண்டம் அல்லது சேவை தொடர்பில் சந்தையானது போட்டி எதுவுமின்றி முழுவதுமாக அரச துறையால் கட்டுப்படுத்தப்படுமாயின், அத்தகைய நிலைமைபொருளியலில் அரசதனியுரிமை அல்லது அரசமுற்றுரிமை (government monopoly) எனப்படும். இங்கு போட்டியானது சட்ட கட்டுப்பாடின் மூலம் நீக்கப்படும், இதன் காரணமாக சந்தையில் வேறு நிறுவனங்கள் காணப்படாது. இந் நிலையிலிருந்து அரசால் கொடுக்கப்பட்ட தனியுரிமை (government-granted monopoly) வேறுபடும்.இங்கும் பண்டம் அல்லது சேவைகள் தொடர்பில் தனியுரிமை காணப்படும். இத் தனியுரிமை அரசினால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு தனியார் நிறுவனத்திற்கு சட்டக் கட்டுப்பாடுகளுடன் அரசால் வழங்கப்படும்.இலங்கையில் சிக‌‌ரட் உற்பத்தி அரச தனியுரிமையானது. இது அரசாங்கத்தின் எந்த ஒரு மட்டத்தினாலும் (தேசிய, மாகாண, மாவட்ட.) நடத்தப்படலாம்.

எடுத்துக்காட்டுகள்

பல நாடுகளில் காணப்படும் அஞ்சல் சேவைகள், சமூகநல சேவைகள், தொடர் வண்டி சேவைகள்போன்றவை அரச தனியுரிமையின் எடுத்துக்காட்டுகளாகும்.

இக் காலகட்டத்திலே சந்தையில் அரச தனியுரிமை, இல்லாது அழிக்கப்படுவதும் (தனியார்மயமாக்கல்) துரிதப்படுத்தப்படும் போக்கும் காணப்படுகின்றது.

இவற்றையும் பார்க்க

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=அரசதனியுரிமை&oldid=2089213" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்